18 புராணங்கள்
ப்ரம்ம புராணம்
பத்ம புராணம்
விஷ்ணு புராணம்
சிவ புராணம்
பாகவத புராணம்
நாரத புராணம்
மார்க்கண்டேய புராணம்
அக்னி புராணம்
பவிஷிய புராணம்
பரம்மவை வர்த்தன புராணம்
லிங்க புராணம்
வராஹ புராணம்
ஸ்கந்த புராணம்
வாமன புராணம்
கூர்ம புராணம்
மச்ச புராணம்
கருட புராணம்
பிரம்மாண்ட புராணம்
இன்றுடன் கருட புராணம் பகுதி நிறைவுபெறுகிறது
( யார் மனதையும் புண்படுத்தும் அபிப்பிராயம் இல்லை)
நாளை முதல்
வராஹ புராணம் ஆரம்பம்.
==============
பிராமணனுக்குப் புத்திரன் பிறந்தாலும், பிராமணன் இறந்தாலும், தாயாதிகளுக்கு பத்து நாள் வரையில் தீட்டு (ஆசௌசம்) உண்டு. ஆசௌசமுடையவர்கள் ஓமங்கள், தேவ ஆராதனை செய்யக்கூடாது. அந்த நாட்களில் அவர்கள் வீட்டில் யாரும் உணவருந்தக் கூடாது. அகால மரணம், அயல்நாட்டில் மரணம், மிருகங்களால் மரணம் ஆகியவற்றிற்கு உடனே கருமம் செய்யக்கூடாது. கிரியைகள் துவங்கப்படுகிற அன்று முதலே ஆசௌசம் உண்டாகும். ஒருவன் இறந்த செய்தி கேட்டவுடன் ஸ்நானம் செய்துவிட வேண்டும்.
திருமணக்கோலம் கொண்டிருக்கும் காலத்திலும், யாகஞ்செய்யும் காலத்திலும், உற்சவம் செய்ய கங்கணம் பூண்டிருக்கும் காலத்திலும் ஆசௌசம் இல்லை. ஓர் ஆசௌசம் நேர்ந்த காலத்தில் இடையிலே வேறொரு ஆசௌசம் வந்தால் முன்னதாக வந்ததுடன் பின்னர் வந்த ஆசௌசமும் தாயத்தார்க்கு நிவர்த்தியாகும். பசு, பிராமணர், மங்கையரைப் பாதுகாக்கும் விஷயத்திலும், யுத்த பூமியிலும், ஒருவன் தன் உயிரை இழந்தால் அவனைச் சேர்ந்தவர்களுக்கு ஒருநாள் மட்டுமே ஆசௌசம் உண்டு.
துர் மரணம் அடைந்தால்!
முந்நூற்று அறுபது பலாச இலைகளின் காம்புகளால் மரித்தவனது உடலைப் போல் ஒரு பிரதிமை செய்ய வேண்டும். சிரசுக்கு நாற்பது, கழுத்துக்குப் பத்து, மார்புக்கு இருபது, வயிற்றுக்கு இருபது, தொடைகளுக்கு நூறு, இமைக்கு இருபது. இரு கரங்களுக்கு நூறு, முழந்தாள்களுக்கு முப்பது, இனக்குறிக்கு நாலு, விருஷணங்களுக்கு ஆறு, கால்களுக்குப் பத்தும் வைத்து; மறுபடியும் சிரசுக்குத் தேங்காய், முகத்துக்குப் பஞ்சரத்தினம், நாவுக்கு வாழைப்பழம், மூக்கிற்கு எள்ளுப் பூவும், காதுக்கு எள்ளும், நரம்புக்குத் தாமரைத் தண்டும், தசைக்கு அன்னமும், இரத்தத்திற்குத் தேனும், மயிர்களுக்குச் சவுரியும், தோலுக்கு மான்தோலும், ஸ்தனப் பிரதேசத்திற்குக் குன்றிமணியும், நாபிக்குத் தாமரைப் பூவும், விருஷணர்களுக்குப் பனங்காயும், வைத்து சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து சாஸ்திர முறைப்படிக் கிருத்தியங்கள் செய்தால் துர்மரணம் அடைந்தவன் நற்கதி அடைவான்.
குழந்தைகளின் பாபங்கள்
நான்கு முதல் பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் செய்கிற பாபங்கள் அவர்களுடைய பெற்றோரையே சேரும். பெற்றோர்கள் இல்லை எனில் காப்பாளர்களைச் சேரும். அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் பாவம் குழந்தைகளுக்குச் சேராது.
ஓம் பக்ஷ ராஜாய வித்மஹே
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருடப் ப்ரசோதயாத்!
[கருட புராணம் முற்றிற்று.]
தீராத குடும்ப பிரச்சனை உள்ளதா? பித்ரு தோஷம் உள்ளதா? எவ்வாறு அறியலாம்?
குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்துருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்துருதோஷம், இந்த தோஷம் நமக்கு உள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.
ஜாதகத்தில் கண்டறிவது:
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்துருதோஷம் உண்டு.
பரிகாரம்:
ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், திரு வெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம்.
திலஹோமம்:
குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டும் திலஹோமம் செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இயற்கை மரணம் அடைந்திருந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.
தோஷத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் :
1.பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இராது.அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.
2. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை.மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.
3. ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
4. கலப்புத்திருமணம், ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
தோஷம் வர பல்வேறு காரணம்:
1.கருச்சிதைவு
2. பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.
3. இளைய தாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.
4. தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.
5. ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர், ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.
6. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயாசென்று சிரார்த்தம் செய்யாவிடில் பித்துரு தோஷம் வரும்.
7. தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்துரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிஷ்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப்பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்துருக்களும், பித்துரு தேவதைகளும் தடை செய்வார்கள்.
பித்துருக்களின் சாபம் கடவுள் நமக்கு தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மையுடையது.
பரிகாரம்:
சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யவும். இந்த அபிஷேகம் அமாவாசையன்று செய்யவும். இந்த அபிஷேகத்தைப்பார்த்த நாள் முதல் உங்கள் பித்துருதோஷம் விலகும்.
சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள்
100 கிராம் பச்சரிசி, அகத்திக்கிரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், 1 வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டிற்கு கொடுக்க பித்துரு தோஷம் நீங்கும். தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும். இதனால் பித்துரு தோஷம் முழுமையாக நீங்கும்.
நடப்புப் பிறவியில் நல்லவராகவும், இறை வழிபாட்டில் ஈடுபட்டவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் இருந்துவிட்டால், முற்பிறவி கர்மவினை அடியோடு அகன்றுவிடும் என்று சொல்ல இயலாது. நல்லவர்களும், ஞானிகளும், ஜீவன்முக்தர்களும்கூட துயரத்தை சந்திப்பது உண்டு!
தீக்குளித்தல், விஷம் அருந்துதல், தூக்குப் போட்டுக் கொள்ளுதல்- இவை துர்மரணமாகும். விபத்து, கொலை ஆகியவற்றை அகால மரணம், அபமிருத்யு என்பர். போரில் மடிந்தவர்கள், துஷ்ட சம்ஹாரங்கள் ஆகியன துர்மரணத்தில் வராது. துர்மரணம் நிகழ்ந்த பின் அதன் காரணத்தை ஆராய்வது வீண்!
கருடபுராணத்தில் சில
உலகில் உள்ள யோனிபேதங்கள் 84 லட்சம். அவை நான்கு பிரகாரமாய் உள்ளது
அவை அண்டசம், உற்பிசம், சராயுசம், சுவேதசம். அந்த நான்கு வகுப்பில்
முட்டையிலிருந்து 21 லட்சம் பறவை முதலியவைகளும்
பூமியிலிருந்து 21 லட்சம் மரம் முதலியவைகளும்
கருப்பையிலிருந்து 21 லட்சம் மனிதர்கள் முதலானவர்களும்
வியர்வையிலிருந்து 21 லட்சம் கிருமி முதலியவைகளும் தோன்றும்.
மனித உடலில் உள்ள 14 உலகங்கள்
உள்ளங்கால் - அதலம்
கணைக்கால் - விதலம்
முழங்கால் - சுதலம்
அதற்கு மேல் - நிதலம்
ஊரு - தலாதலம்
குக்யம் - ரசாதலம்
இடை - பாதாளம்
நாபி - பூலோகம்
வயிறு - புவர்லோகம்
ஹ்ருதயம் - சுவர்லோகம்
தோல் - மகாலோகம்
முகம் - ஜனோலோகம்
நெற்றி - தபோலோகம்
சிரசு - சத்தியலோகம்
கருட பத்து
ஓம் பூரணனே பதிணாறு திங்கள் சேரும் பொருந்தியே யருக்கன்பதி னெட்டுஞ் சேரும்
காரணனே கருமுகில் பொன் மேனி சேரும் கருணை பெரு மஷ்டாட்சரங் கலந்துவாழும்,
வாரணனே லட்சுமியோ டெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயாநேயா,
ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 1
வந்திரமோ அஷ்டசித்து மெட்டுஞ் சேரும் வாழ்கிரக மொன்பது வந்துசேரும்,
கந்திருவர் கணநாத ராசி வர்க்கம் கலைக்கியான நான் வேதங்கலந்து வாழும்
நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித்துன் பாதம் நாளும் போற்ற
அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 2
மூலமுதலோ ரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து மொழியலாமோ,
சீலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும்
காலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே கருணை பெரு மிவ்வெழுத்து நீர்தானாகும்
ஆலவிஷங்கையேந்துங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 3
நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராரா வென்றும்
சவ்வென்றும் ஓங்கார ரீங்கார மாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர்தானாகும்
ஓவ்வென்று ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித்துகந்து போற்ற
அவ்வென்று ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 4
உதிக்கின்ற சிவசொரூபமுனக்கே யாகும் ஓம்-அவ்வும்-உவ்வுங்கிலியும் மென்றே
பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சை முகில் மேனியனே பணிந்தேனுன்னை
விதிக்கிசைந்த மெய்பொருளே அரிகோவிந்தா விளக்கொளிபோல் மெய்த்தவமே
விரும்பித் தாதா
அதற்கிசைந்த நடம்புரியுங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 5
வேதமுதலாயிருந்த சிங்க ரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே செய்தாய்
பூதமுதலாம் பிறவும் புண்ணிய நேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதை புத்ரா
நாதமுதல் விந்துவாயுயிருக் கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வரத பிர்ம
யாதவன் போல் நிறைந்திருக்கும் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 6
முக்கோணம் நாற்கோண மொழிந்தைங் கோண முச்சுடரே யறுகோண மெண்கோணமாகும்
சட்கோண நாற்பத்து முன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகல சித்தும்
இக்கோண மிதுமுதலா வதார மட்டும் இறைய வனாய்த் தானிருந்து ரட்டித்தாலும்
அக்கோண மீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 7
பச்சைமுகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவ தார முண்டு
மச்சமென்றும் கூர்மமென்றும் வராகமென்றும் வாமனென்றும் ராமனென்றும்
பவுத்தனென்றும்
துஷ்டரை யடக்க மோகினி வேடங் கொண்டாய் தோன்றினா யுன்சொரூப மெல்லாம்
அறிவாருண்டோ
அச்சந்தீர்த்தெனையாளக் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 8
வேதியனாய் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்க ரூபமானாய்
சாதியிலே யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருந்தாய் தரணி வாழ்க
சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மைத் துஷ்டரையும் வதை செய்து
லோகமாள்வாய்
ஆதிமுதலோரெழுத்தே நீ கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 9
மாயாவனே ரகுராமா அருகே வாவா வஞ்சனைகள் பறந்தோடநெஞ்சில் வாவா
காயாம் பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா
நாயகனே யென்னாவி லிருக்க வாவா நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா
ஆயர்குலத்துதித்தவனே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 10
முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறனே ஜகநாதா முன்னே வாவா
எப்பொழுதுந்துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப்பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா
ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ நாராயணாவுகந்து வாவா
அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 11
துளபமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப்பொருளே வரத்தைத் தாதா
களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கஞ்சனைமுன் வென்றவனே கருணை தாதா
பழம்பொருளே சிவஜோதி பாக்கியந் தாதா பத்திமுத்தி சித்திசெய்யவுன்பாதந் தாதா
அளவிலா மெய்பொருளே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 12
Monday, 24 May 2021
ஆசௌம், துர்மரணம், குழந்தை பாபங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment