பகை கிரக சேர்க்கைகளுக்கு பரிகாரம் கூறும்
ஒரு சூட்சுமம் ராசிக்கட்டத்திலேயே உள்ளது.
அது என்னவென்று பார்ப்போம்.
கிரகங்களுக்கு ராசி விடுகளை ஒதுக்கும்போது இரண்டு பரஸ்பர பகை கிரகங்களுக்கு நடுவே அந்த இரண்டு கிரகங்களுக்கும் பொதுவான ஒரு நட்பு கிரகத்தை வைத்து ஆட்சி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக மேச செவ்வாயும்,மிதுன புதனும் பரஸ்பரம் பகைக்கிரகங்கள்.
மேச செவ்வாய்க்கும்,
மிதுன புதனுக்கும் நடுவே அமைந்துள்ள ரிசப சுக்கிரன் இவ்விரண்டு கிரகங்களுக்கும் பொதுவான நட்பு அல்லது சம கிரகமாகும்.
எனவே செவ்வாய்க்கும், புதனுக்கும் இடையே உள்ள பகையை சுக்கிரன் தீர்த்து வைப்பார்.
இதன் அடிப்படையில் பகை கிரக சேர்க்கைகளுக்கு பரிகாரங்கள் சொல்லலாம்.
உதாரணமாக சுக்கிரனும் சந்திரனும் பரஸ்பரம் பகைக்கிரகங்களாகும்.
ரிசப சுக்கிரனுக்கும் , கடக சந்திரனுக்கும் இடையே மிதுன புதன் வீடு அமைந்துள்ளது.
எனவே சுக்கிரனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள பகையை புதன் தீர்த்து வைப்பார்.
இது எப்படி என்றால், கழுதைக்குறிக்கும் கிரகம் புதன்,
மார்பை குறிக்கும் கிரகம் சந்திரன்.
இப்பொழுது மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகளை திருத்த வேண்டுமானால் , மருமகள் கழுத்தில் சுக்கிரனுக்குரிய வெள்ளி சங்கிலி ஒன்றை கழுத்தில் மாட்டி மார்பை தொடும் அளவு தொங்கவிட்டால் கழுத்து புதன் மருமகள் சுக்கிரனை கட்டுப்படுத்தும் .
இதன் மூலம் மாமியார் மருமகள் சண்டையை தீர்க்கலாம்.
இது போல் சில
பகை கிரக சேர்க்கைகளுக்கு என்ன பரிகாரம் என்பது ராசிக்கட்டத்திலேயே உள்ளது.
செவ்வாய்+புதன் கிரக சேர்க்கைக்கு பரிகார கிரகம் சுக்கிரன்.
சுக்கிரன்+சந்திரன் கிரக சேர்க்கைக்கு பரிகார கிரகம் புதன்
சந்திரன்+புதன் கிரக சேர்க்கைக்கு பரிகார கிரகம் சூரியன்
சூரியன்+சுக்கிரன் கிரக சேர்க்கைக்கு பரிகார கிரகம் புதன்
செவ்வாய்+சனி கிரக சேர்க்கைக்கு பரிகார கிரகம் குரு.
குரு+சுக்கிரன் கிரக சேர்க்கைக்கு பரிகார கிரகம் செவ்வாய்.
Monday, 24 May 2021
நாடி ஜோதிட முறையில் ஒரு பரிகார சூட்சுமம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment