ஒரு சமயம் இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் பெண்களிடம் போய்ச் சேர்ந்தது. மாதவிலக்கான மங்கை நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பே இருக்கவேண்டும். அவளைப் பிறர் பார்க்கக் கூடாது. முதல் நாளன்று சண்டாள ஸ்திரீயைப் போலும், இரண்டாம் நாள் பிரமஹத்தி செய்தவள் போலவும், மூன்றாம் நாள் ஒலிப்பான் போலவும் காணப்படுவாள். நான்காவது நாள் ஸ்நானத்திற்குப் பிறகு சிறிது தூய்மை அடைவாள் போலவும் காணப்படுவாள். ஐந்தாம் நாள் சுத்தியடைந்து குடும்பக் காரியங்களைக் கவனிக்கும் தகுதி பெறுவாள்.
6 முதல் 18 நாள் வரை, ஏழு இரட்டை நாளில் அவளோடு கூடி மகிழ்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை குணவானாக, தனவானாக, துர்மிஷ்டனாக, விஷ்ணு பக்தி உடையவனாக இருப்பான். ரஜஸ்வாலை ஆன ஐந்தாம் நாள் பாயசம் போன்ற மதுர பதார்த்தங்களையே உண்ண வேண்டும். தம்பதியர் சந்தனம், புஷ்பம், தாம்பூலம் கொண்டு குளிர்ந்த மெய்யினராய் மனதில் மோகமுடையவராய் கூடி மகிழ வேண்டும். அவ்வமயம் சுக்கில, சுரோணிதக் கலப்பால் ஸ்திரீ வயிற்றில். கரு ஏற்படும். சுக்கிலம் அதிகமானால் ஆண் குழந்தையும், சுரோணிதம் அதிகமானால் பெண் குழந்தையும் பிறக்கும்.
புணர்ந்த ஐந்தாவது நாள் கருவறையில் ஒரு குமிழியுண்டாகும். பதினான்கு நாட்களில் தசைகளும், இருபதாவது நாளில் மேலும் தசை அதிகமாகும். இருபத்தைந்தாவது நாளில் புஷ்டி அடையும். ஒரு மாதத்தில் பஞ்சபூத சேர்க்கை உண்டாகும். 2-ஆவது மாதத்தில் தோல், 3-ஆம் மாதத்தில் நரம்புகள் உண்டாகும். 4-ஆம் மாதத்தில் மயிர் புறவடிவம் ஏற்படும். 5-இல் காது, மூக்கு, மார்பு தோன்றும். ஆறில் சிரம், கழுத்து, பற்கள் உண்டாகும். 7-இல் பாலின் குறி தோன்றும். 8-இல் அனைத்து அவயவங்களுடன் ஜீவன் பிரவேசிக்கும். 9-இல் சுழிமுனை நாடி மூலம் பூர்வ ஜன்ம கர்மம் அறியும். பத்தில் குழந்தை பிறக்கும். பஞ்ச பூதாத்மகமாகிய உடல், பஞ்சேந்திரியங்களை அடைந்து இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று முக்கிய நாடிகளும், காந்தாரி, கஜசிம்மஹி, பூழை, அச்சு, அலாபு, குரு, விசாகினி என்ற ஏழுநாடிகளும் உடலில் முக்கியமானவை பெற்று தசவித வாயுக்கள் சேர்ந்துள்ளது. இந்தச் சரீரம். சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் ஆகிய ஆறு கோசங்கள் கொண்டது. உண்ணுகின்ற உணவின் சாரம் உடலில் பரப்புவது வாயு இவ்வாறு அண்டத்திலுள்ளவையெல்லாம் பிண்டத்திலுமுண்டு. பிண்டத்திலுள்ளவை எல்லாம் மனித உடலில் உள்ளன.
மனித உடலில் பதினான்கு உலகங்கள். சப்த குலாசலங்கள், தீவுகள், நவக்கிரகங்கள் இருக்கின்றன. ஒருவன் ஆயுள் அவனுடைய பூர்வ ஜன்ம கர்மானுசாரத்தை அனுசரித்து கருவிலுள்ள போதே பிரமன் நிச்சயித்து விடுகிறான். எனவே தீர்க்க ஆயுளும், உயர்ந்த வித்தையும், யோகமும், மற்ற யாவும் மறு ஜன்மத்திலாவது ஒருங்கே பெற்றிட ஜீவன் நற்கர்மங்களைச் செய்யவேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தொடரும்...
விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
ஒருவன் வாழ்ந்து முடிந்து இறந்து போகும் போது அவனோடு நெடுங்காலம் வாழ்ந்த மனைவியும், பிள்ளைகளும், அவன் பாடுபட்டு சேமித்து வைத்த செல்வமும், இவையனைத்தும் வீடுவாயில் வரையில்தான் வரும். வாசலை தாண்டிவிட்டால் அவனுடைய இனத்தார், சுற்றத்தார் நண்பர்கள் இவர்கள் மயானம் மட்டுமே வருவார்கள். இதையெல்லாம் தாண்டி அவனது ஆன்மாவானது உடலைவிட்டுபிரிந்து தன் வழி போகும் போது மனைவி மக்கள் உறவினர் நண்பர்கள் இவர்கள் எவரும் உடன் வருவதில்லை. அதனால்தான் ஒருவன் தான் வாழுகின்ற காலத்தில் ஓரு சிறு தினை அளவிலாது அல்லது எள் அளவிலாது முன்பு நல்ல காரியம் தர்ம காரியம் செய்திருந்தால் அதன் பலன்கள் அப்போது துணை வரும். ஆன்மாவும் சிவலோகம் சென்றடையும் இது நிச்சயம்.
தெரியவேண்டியதே தெரிவிக்கப்படுகிறது !!
அறியவேண்டியதே அறிவிக்கப்படுகிறது !!
புரியவேண்டியதே புரிவிக்கப்படுகிறது !!
உன்னை நித்தமும் ! நிமிடமும் !! இடைவிடாது காத்தருளும் !!
உன்னை உன்னைவிட தெரிந்து ! அறிந்து ! புரிந்தவன் !! தயாவாலே !!
நாம் அவனை ! அவனாகவே ? தெரிய !! அறிய !! புரிய !! வில்லை ?? என்றாலும் ??
அவன் திருவருளே புரிவதையே செய்துகொண்டே இருக்கின்றான் !! பிறவிதோறும் !!நான் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவள்........என் கடைக்கண் பார்வையாள் இந்த பிரபஞ்சமே இயக்கிறது...........அனைத்துமே என்னுள் அடக்கம்.....நானோ பக்தனின் அன்புக்கு அடக்கம்.......இங்கு கடவுளை விட பக்தனே பெரியவன்..........
உடலியல் பற்றிய விளக்கங்கள்
“வைனதேயா! பஞ்ச பூதாத்மகமாகிய தேகமானது, பஞ்ச இந்திரியங்களை அடைத்து, பத்து நாடிகளில் அலங்கரிக்கப்பட்டு பிராண, அபான , வியான, உதாசன, சமான, நாக, கூர்ம, கிறுக, தேவதத்த, தனஞ்செயன் என்ற தச வித வாயக்களோடு சேர்ந்துள்ளது. மேலும் அந்த சரீரம், சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் என்ற ஆறு கோஷங்களுடனும் அமைந்துள்ளது. நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும் ஸ்தூல சரீரத்தில் (பருவுடலில்) “தோலும் எலும்பும் மயிரும், மாமிசமும், நகமும் பிரித்திவியின் (மண்ணின்) குணத்தால் உருவாகின்றன. பசி, தாகம், நித்திரை, சோம்பல், சாந்தி முதலியவை தேயுவின் (நெருப்பின்) குணமாகின்றன.
“இச்சை, கோபம், நாணம், பயம், மோகம், இயக்கம், சுழலுதல், ஓடுதல், கைகால்களை மடக்கி நீட்டுதல், ஒரு வினையும் செய்யாமலேயே இருத்தல் ஆகிய அனைத்தும் வாயுவின் (காற்றின்) குணமாகும்.
“சப்தம், எண்ணம், கேள்வி, காம்பீர்யம், சக்தி ஆகியவை ஆகாயத்தின் குணமாகும். காதுகள், கண்கள், மூக்கு, நாவு, தொக்கு ஆகிய ஐந்தும் ஞாநேந்திரியங்களாகும்.
“இடைபிங்கனல் மற்றும் சுழிமுனை என்ற மூன்றும் முக்கியமான பெரிய நாடிகளும், காந்தாரி, கஜ்சிம்மஹி, பூழை, யச்சு, அலாபு, குரு, விசாதினி என்ற ஏழு நாடிகளும், சரீரத்தின் மிக முக்கியமான பெரிய நாடிகளாகும்.
“ஜீவன் உண்ணுகிற சாறு முதலியவற்றை மேல சொன்ன வாயுவே, அந்ததந்த இடத்தைச் சேரும்படிச் செய்கிறது. வயிற்றில் அக்கினிக்கு மேல் தண்ணீரும், அந்தப் புனலுக்கு மேல் அன்னமும் உள்ளன. அந்த அக்கினியை வாயுவானது ஊதி விருத்தி செய்கிறது.
“சரீர முழுவதும் மூன்றரைக் கோடிக்கு மேற்பட்ட ரோமங்களும், முப்பத்தியிரண்டு பற்களும், இருபது நகங்களும், இருபத்தேழு கோடி கூந்தல் மயிர்களும் ஆயிரம் பலம் இறைச்சியும், நூறு பலம் இரத்தமும், பத்துப் பலம் மேதசும், பத்துப் பலம் தொக்கும், பன்னிரண்டு பலம் மஜ்ஜையும், மூன்று பலம் முக்கிய இரத்தமும், கபமும், மலமும், மூத்திரமும் முடிவாக அமைந்துள்ளன.
“அண்டத்திலுள்ள யெல்லாமே மனித தேகத்திலும் இருக்கின்றன. உள்ளங்காலை அதலலோகம் என்றும் , கணுக்காலை விதலம் என்றும், முழங்காலை சுதலம் என்றும், அதற்கு மேற்ப்பட்ட பகுதி நிதலம் என்றும் ஊறு, தராதலம் என்றும், குஷ்யந்தை ரசாதலம் என்றும், இடையைப் பாதளம் என்றும், நாபியை பூலோகம் என்றும், இதயத்தை சுவர்க்கலோகமென்றும், தோளை மகாலோகமேன்றும், முகத்தை ஜனலோகமென்றும், சிரசை சத்தியலோகமென்றும் சொல்லுகிறார்கள்.
"திரிகோணத்தை மேருகிரியென்றும், கீழ்க்கோணத்தை மந்தரபருவதம் என்றும், அந்த கோணத்துக்கு வலதுபுறம் கைலாயம் என்றும் இடதுபுறம் ஹிமாசலம் என்றும் தென்பாகம் கந்தமாதன் பர்வதம் என்றும், இடது உள்ளங்கையுலுள்ள ரேகை வருணபர்வதம் என்றும் வழங்கப்படும். எலும்பு நாவலந் தீவு என்றும், மேதசு, சரதகத் தீவு என்றும், தசை சூசைத் தீவு என்றும், நரம்பு கிரௌஞ்ச்சத் தீவு என்றும், தொக்குசான் மளித் தீவு என்றும், ரோமத்திரல் பிலட்சத் தீவு என்றும், நீர்பாற்க்கடல் என்றும், கபம் சுராசித்து என்றும், மஜ்ஜை நெய்க்கடல் என்றும், வாய் நீர் கறுப்பஞ்சாற்றுக் கடல் என்றும், இரத்தம் தயிர்க்கடல் என்றும், வாயில் உண்டாகும் இனிய புனல், சந்தோதக சிந்து என்றும் வழங்கப்படும்.
“சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் நாத சக்கரத்தில் சூரியனும், பிந்து சக்கரத்தில் சந்திரனும் நேத்திரங்களில் அங்காரகனும், இதயத்தில் புதனும், வாக்கில் தேவ குருவும், சுக்கிலத்தில் அசுர குரு சுக்கிரனும், நாபியில் சனியும், முகத்தில் ராகுவும், காலில் கேதுவும் உள்ளனர்.
“மனித உடலில் பதினான்கு உலகங்களும் சப்த குலாசலங்களும் தீவுகளும் நவகிரகங்களும் இருக்கும் வகையை மேலே சொன்னேன்.
“ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் போது தானே, அந்த ஜீவனுக்கு ஆயுள் இவ்வளவு தான் என்றும், இன்ன வித்தை இவ்வளவு தான் என்றும் கோபம், யோகமும், போகமும் இவ்வளவுதான் என்றும், இன்ன சமயத்தில் இன்னவிதமான மரணமுண்டாகத் தக்கது என்றும், பூர்வ கர்மானுசாரத்தை அனுசரித்து, பிரம்மன் விதித்து நிச்சயித்து விடுகிறான்.
“ஆகையால் தீர்க்க ஆயுளும் உயர்ந்த வித்தையும் போகமும், யோகமும் - மற்ற யாவுமே ஜென்மத்திலாவது ஒருங்கே அடைவதற்காகவாவது, ஒரு ஜீவன் நற்கர்மங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் அறிவித்துள்ளன.
“ஜீவன் தன பூர்வஜென்மத்தில் செய்த கர்மவினைப் பயனையே மறு ஜென்மத்தில் அடைகிறான் என்பதில் ஒரு சிறு சந்தேகமும் வேண்டியதில்லை. கருடா! இவை அனைத்தையும் உலக நன்மையைக் கருதிக் கூறுகிறேன். இனி கேட்க வேண்டியது எதுவாயிருந்தால், அதையும் கேட்கலாம்.” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்...
ஶ்ரீ கருட பஞ்சாஶத்
பரிஷ்கார வர்ணகம் 08 / 10
கருடனுடைய திருக்கைகளுக்கு , வளைகளாக இருக்கும் , சேஷன் , குளிகன் எனும் நாகங்கள் , நம் பாவச் சுமையை , அழித்து அருள வேண்டும் !
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேஶிகாய , நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
ஶ்லிஷ்யத் - ருத்ரா , ஸுகீர்த்தி , ஸ்தந , தட , குஸ்ருண - ஆலேப , ஸங்க்ராந்த , ஸார ,
ஸ்ப்பார - ஆமோத - அபிலாஷ - உந்நமித , ப்ருது , பணா , சக்ரவாள - அபிராம: |
ப்ராய: , ப்ரேய: , படீர , த்ரும , விடப , தியா , ஶ்லிஷ்ட , பக்ஷீ - இந்த்ர , பாஹு: ;
வ்யாஹந்யாத் ! அஸ்மதீயம் , வ்ருஜிந , பரம்
- அஸௌ , வ்ருந்தஶோ , தந்தஶூக: ||
அணைத்துக் கொள்கிற ருத்ரை , ஸுகீர்த்தி எனும் இரு மனைவியரின் கொங்கைத் தடத்தில் உள்ள குங்குமக் குழம்பால் ஏற்பட்ட உயர்ந்த மிகுந்த மணத்தின் விருப்பத்தால் உயரத் தூக்கப் பட்ட பெரிய வட்டமான படத்தால் அழகியதும் ; பெரும்பாலும் பிரியமான சந்தன மரத்தின் கிளை எனும் எண்ணத்தால் கருடனுடைய ,
கைகளைத் தழுவி நிற்கிற இந்த சேஷன் , குளிகன் என்ற பாம்புகள் நம்முடைய பாபச் சுமையை கூட்டம் கூட்டமாக அழித்து அருள வேண்டும் !
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
*கருடனுடைய திருக்கைகளுக்கு சேஷன் , குளிகன் என்னும் இரு நாகங்கள் அணியும் இரு வளைகளாக உள்ளன .
* கருட பகவானை அவருக்குத் தேவிகளான ருத்ரையும் ஸுகீர்த்தியும் அணைத்துக் கொள்கின்றனர் .
* அப்பொழுது அவர்கள் கொங்கைத் தடங்களில் அணிந்துள்ள குங்குமக் குழம்பின் மிகுந்த நறுமணம் அவருடைய திருமார்பில் வீசுகிறதாம் .
* அதை முகர்ந்து கொள்ள ஆசையால் அவருடைய கைகளில் வளையாய் உள்ள இரு நாகங்களும் தம் பெரிய வட்டமான படங்களை உயர தூக்குகின்றன .
* அந்த நிலை மிக அழகாய் உள்ளதாம் .
* நாகங்களுக்குச் சந்தன மரத்தில் எப்பொழுதும் பிரியம் அதிகம் .
* கருடனுடைய திருக் கைகளை நோக்கும்போது சந்தன மரத்தின் கிளைகளோ என்று நாகங்களுக்கு தோன்றுகிறதாம் .
* அதனால் கருடனுடைய திருக் கைகளை விடாது வளைகள் போல் இறுக அணைத்து உள்ளதாம் .
* இந்த நாகங்கள் நம் பாவச்சுமையை முழுதும் அழித்து அருள வேண்டும் !
Monday, 24 May 2021
உடலியல் பற்றிய விளக்கங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment