Labels

Monday, 24 May 2021

கால் ஆணி


🔯5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

அம்மான் பச்சரிசி செடியை சிறுசு சிறுசா உடைத்து, அதில் வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவியதும் குணம் கிடைத்திராது. தொடர்ந்து இண்டு வாரமாவது செய்து பாருங்கள். முதலில் வலி குறையும், போகப் போக ஆணியும் மறைந்து விடும்.

மருதாணி இலை சிறிது, மஞ்சள் துண்டு கொஞ்சம் இண்டையும் எடுத்து பட்டுப்போல் அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவில் தூங்குவதற்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டி விடுங்கள். தொடர்ந்து 10 நாட்கள் செய்து பாருங்கள் கால் ஆணி காணாமல் போகும்.

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம்

No comments:

Post a Comment