Labels

Saturday, 22 May 2021

உங்கள் வங்கிக் கணக்கை எப்படி ஹேக் செய்து, பணம் திருடுகிறார்கள்?


1. உங்கள் பெயர் மற்றும் பிறந்த நாளை, உங்கள் முகப்புத்தக கணக்கில் இருந்து முதலில் எடுக்கிறார்கள்.

2. இதை வைத்து, வருமான வரித்துறை தளத்திற்கு சென்று, அங்கு அப்டேட் செய்கிறார்கள். அங்கிருந்து, உங்கள் பான் கார்டு மற்றும் மொபைல் நம்பர் எடுக்கிறார்கள்.

3. அதை வைத்து, ஒரு மோசடியான பான் கார்டு தயார் செய்கிறார்கள்.

4. இதை வைத்து, காவல் நிலையத்தில், மொபைலைக் காணவில்லை என்று புகார் தருகிறார்கள்.

5. இந்த மோசடியான பான் கார்டை வைத்து, மொபைல் கம்பெனியில் ஒரு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்குகிறார்கள்.

6. இப்போது, நெட் banking மூலம் அந்த மோசடிப் பேர்வழி, உங்கள் வங்கிக் கணக்கை access செய்யத் தயாராகிறான்.

7. அவன், வங்கி இணைய தளத்திற்குச் சென்று, என்னுடைய password மறந்து விட்டேன் என்று சொல்கிறான்.

8. இந்த சிம்கார்டு மூலம் நெட் banking பின் நம்பர் மற்றும் மற்ற options அவனுக்கு கிடைக்கிறது.

இது ஒரு சைபர் க்ரைம் போலீஸ் கொடுத்த விவரம். அதனால், நெட் banking பயன்படுத்துபவர்கள்,

உங்கள் பிறந்த நாள் மற்றும்
மொபைல் நம்பரை உங்கள் முகப்புத்தக அக்கவுண்டில் பாதுகாப்புக்காக அழித்து விடுங்கள்.
 

No comments:

Post a Comment