Labels

Monday, 24 May 2021

இரத்தின வகைகள்




இரத்தினங்கள் அனேகம். ஆனால் குறிப்பாக, சிறந்த ஒன்பதை மட்டும் நவரத்தினங்கள் என்று குறிப்பிடுவர். மக்களும், மன்னனும் இரத்தினங்களை உபயோகிக்கின்றனர். ஒருவனுக்கு செழிப்பான, வளமான வாழ்வு அமைய முத்து, நீலம், வைதுர்ஜம், இந்திரநீலம், சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல், ஸ்படிகம், புஷ்பராகம், ஜ்யோதிராம், ராஜபட்டம், ராஜமயம் ஆகிய இரத்தின வகைகளை அணிய வேண்டும். ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற கந்தகம், முத்து சிப்பி, கோமேதகம், ருத்ராக்ஷம், பவழம், நாகரத்தினம் தங்கத்தில் பதித்து அணிய வேண்டும். குறையின்றி, உட்புறமிருந்து ஒளி வீசி, நன்கு பதிக்கப்பட்ட இரத்தினம் நல்ல அதிருஷ்டம் அளிக்கும். ஒளியற்று, பிளவுபட்டு, சொர சொரப்பானவற்றை ஒருபோதும் உபயோகிக்கக் கூடாது.

பிறை போன்றதாய், அறுகோணமாய், எளிதில் உடையாததாய், நீரோட்டம் உடையதும், உச்சிகால சூரியனைப் போன்ற ஒளி கொண்டதுமான இரத்தினங்களையே உபயோகிக்க வேண்டும். மரகதக்கல் தூய்மையானதாய், குளிர்ச்சி ஒளி கொண்டு, கிளிபோல் பச்சைநிறம் கொண்டிருக்க வேண்டும்.

உட்புறம் தங்க நிறப் படிகங்கள் கொண்டிருக்க வேண்டும். பதுமராகம் ஒளியுடன் கூடிய சிவப்பு நிறம் கொண்டிருக்கும். சிப்பிகளில் காணப்படும் முத்துக்கள் சிவப்பு நிறத்தை உடையனவாகவும் வெள்ளை நிறச் சிப்பிகளில் உள்ள முத்துக்கள் வெண்மையாகவும் இருக்கும். மூங்கில், யானை, கரடி, கன்னப்பொறிகள், மீன்கள் மூளையிலும் முத்துக்கள் உண்டாகும். வெண்மை நிறம், வெளிப்பொருளைப் பார்க்கும் தன்மை, எடை, உருண்டை முத்துக்களில் கவனிக்க வேண்டும். இந்திர நீலக்கல்லைப் பாலில் அமிழ்த்தினால் பாலும் நீலமானால் அது நல்லது. வைடூர்யம் சிவப்பு, நீல நிறங்களில் விதுர நாட்டில் எடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment