Labels

Monday, 24 May 2021

கிராம்பு பயன்



1.  தொண்டை புண் சரியாக
கிராம்பை தணலில் வதக்கி வாயில் போட்டு மென்று சுவைத்து வர தொண்டைப் புண் சரியாகும்.

2.  குரல் வளம் பெற
குரல் வளம் பெற வாதாம் பருப்பு, ஏலம், சுக்கு, கற்கண்டு, அதிமதுரம், குங்குமப்பூ, உலர்திராட்சை, ஜாதிக்காய், ஜாதிபத்ரி, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குரல் இனிமையாகும்.

3.  ஈறுவீக்கம் குறைய
ஈறுவீக்கம் குறைய கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர ஈறுவீக்கம் குணமாகும்.

4.  வயிற்று உப்புசம் சரியாக
வயிற்று உப்புசம் சரியாக சீரகம்,கருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து கருவேப்பில்லை,வெங்காயம்,வெள்ளைபூண்டு,கிராம்பு சேர்த்து தயிருடன் கலந்து பருகலாம்.

5.  சுவாசக் குழல் அலர்ச்சி குறைய
சுவாசக் குழல் அலர்ச்சி குறைய கிராம்பு எண்ணெயுடன் தேன் மற்றும் பூண்டுச் சாறு சேர்த்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அலர்ச்சி குறையும்.

6.  ஆஸ்துமா, சுவாச நோய்கள்
ஆஸ்துமா குறைய கிராம்பை நீர் விட்டு அவித்து அந்த நீரை தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா குறையும்.

7.  வறட்டு இருமல் குறைய
கிராம்பை இடித்துப் பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.

8.   இருமல் குறைய
ஒதியம் பிசின் பொடி செய்து அதில் கிராம்புப் பொடி கலந்து வைத்துக் கொண்டு தேனில் குழைத்துக் சாப்பிட்டு வர இருமல் குறையும்.

9.   தலைபாரம் குறைய
கிராம்பை அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.

10.  தலைவலி குறைய
வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

11.   தலைவலி குறைய
கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

12. தொண்டை கரகரப்பு நீங்க
உப்புடன் கிராம்பை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குறையும்.

13.  தொண்டை புண் ஆற
தொண்டை புண் ஆற கிராம்பை வதக்கி சுவைத்தால் தொண்டை புண் ஆறும்.

14.   பல் வலி குறைய
பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

15.  மலச்சிக்கல் குறைய
கடுக்காய்த் தோலை நசுக்கி,கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க மலச்சிக்கல் குறையும்.

16.  காய்ச்சல் குறைய
நிலவேம்பு சமூலம், கிராம்புத்தூள், ஏலம் இவற்றை கொதிக்க வைத்து மூன்று வேளையும் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

17.   தொண்டைப்புண் குறைய
இலந்தை தளிர் இலையை உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க தொண்டைப்புண் குறையும்.

No comments:

Post a Comment