💨 பெருங்காயம்
சமையலறையில் இருக்கும் பெருங்காயம் மிகவும் நன்கு அறியப்பட்ட மசாலா. எளிதில் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபட உதவும். இது வாய்வு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. மற்றும் வயிற்றில் வாயுவை உருவாக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை நிறுத்துகிறது.
வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தைக் கலந்து மெதுவாக உட்கொள்ளலாம்.
💨 இலவங்கப்பட்டை
இயற்கையான சக்திவாய்ந்த மூலப்பொருள் இது. இரைப்பை பிரச்சினைகளில் இருந்து உடனடியாக நிவாரணம் அளிக்கக்கூடியது. ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடியை எடுத்து, தண்ணீர் அல்லது பால் மற்றும் சிறிது தேனுடன் சேர்த்து லேசாக சூடாக்கவும். இக்கலவையை 10 நிமிடங்கள் வைத்திருந்து மீண்டும் சூடாக்கவும். பிறகு வடிகட்டி மெதுவாக அருந்தலாம்.
💨 பூண்டு 🧄
சமையலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள் பூண்டு. இது வாயுவைத் தணிக்கவும், விடுபடவும் உதவுகிறது. 1 அல்லது 2 பூண்டுப் பல்லை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு வடிகட்டவும். இதனுடன் மிளகு அளவில் சுண்ணாம்பு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மெதுவாக சிப் செய்து அருந்தினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
Monday, 24 May 2021
குறைந்த அழுத்தக் காற்று மண்டலப் பிரச்சினையா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment