Labels

Monday, 24 May 2021

பப்ருவாகனன் வரலாறு


மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும்
மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும்.
☝இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல!
☝எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
☝மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது.
☝இந்த மாற்றம் உலக நியதி எனது படைப்பின் சாராம்சமும் ஆகும்.
☝☝☝☝☝☝☝☝

#பிரேத ஜன்மம் அடைந்த ஒருவர் வரலாற்றினை பகவான் கருடனுக்குக் கூறினார். திரேதாயுகத்தில் பப்ரு வாகனன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் அஹோதயம் என்ற நகரத்திலிருந்து நீதி, தர்மம், நியமம் தவறாமல் உலகை ஆண்டு வந்தான். அவன் தன் படை வீரர்களுடன் வேட்டையாடச் சென்றான். அவன் பார்வையில் ஒரு புள்ளி மான் காணப்பட்டது. அதன் மீது இரண்டு, மூன்று தரம் அம்பெய்தினான். அதனால், அதன் உடலில் காயம் ஏற்பட்டும் அது தப்பி ஓடிவிட்டது. அதைத் தொடர்ந்து, பலவிடங்களில் தேடிச் சென்ற அரசன் தனியனாகி, சோர்ந்து ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு நீராடித், தண்புனல் பருகிக் களைப்பு நீங்கினான். குளக்கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் பரிஜனங்களின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்தி மங்கி இருட்டிவிட்டது.

அப்போது பிரேதம், பல பிரேதங்களோடு இங்குமங்கும் ஓடி, பசி தாகத்தோடு வருந்துவதையும் கண்டான். அதைக் கண்ட அரசன் அச்சமும், அதிர்ச்சியும், வியப்பும் கொண்டான். அப்போது அந்த பிரேத ஜன்மம் அரசனிடம் வந்து அரசே, உன்னை நான் காணப்பெற்றதால் இந்தப் பிரேத ஜன்மம் நீங்கி நற்கதி அடைவேன் என்று நம்புகிறேன் எனக் கூறியது. அப்போது பப்ருவாகன மன்னன் அந்தப் பிரேத ஜன்மத்தைப் பார்த்து அதன் வரலாறு பற்றிக் கேட்க, அது கீழ்க்கண்டவாறு கூறிற்று:

நான் வைதிக நகரில் வைசிய குலத்தில் பிறந்தேன். என் பெயர் தேவன். நான் திருமணம் செய்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வந்தேன். வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, விரத அனுஷ்டானம், பிராம்மண வழிபாடு, தேவாலய கைங்கரியம், அனாதைகள் ரக்ஷணை போன்ற நன்மைகளையே செய்து வந்தேன்... எனக்கொரு புத்திரனோ, உறவினரோ இல்லை. யாருமே கர்மம் செய்யவில்லை. எனவே இந்தப் பிரேத ஜன்மத்துடன் நான் மரித்த நாளிலிருந்து நெடுங்காலமாக வருந்துகிறேன். அரசே, நீ குடிமக்களின் காவலன், உறவினன். மரித்து பிரேத ஜன்மத்துடன் இருக்கும் எனக்கு நீயே எல்லாக் கர்மங்களையும் செய்யவேண்டும். என்னிடம் உள்ள இந்தச் சிறந்த மாணிக்கத்தை உனக்குக் காணிக்கையாக அளிக்கிறேன் என்று கூறி மாணிக்கத்தைக் கொடுத்தது. அப்போது கர்ம காரியங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டான் மன்னன். பிரேதம் சொல்லியது, நாராயண பலி சகிதனாய், ஸ்ரீமந்நாராயணன் மங்கள விக்கிரகம் ஒன்று செய்து, சங்கு, சக்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்கரித்து, கீழ்த்திசையில் ஸ்ரீதரனையும், தெற்கில் மகாசூரனையும், மேற்கில் வாமனனையும், வடக்கில் கதாதரனையும் நடுவில் அயன், அரனுடன் ஸ்ரீ விஷ்ணுவையும் நிலை நிறுத்தி ஆராதனை செய்து, வலம் வந்து வணங்கி, அக்கினியில் ஹோமம் செய்து, மீண்டும் நீராடி விரு÷ஷார் சர்க்கம் செய்து பதின்மூன்று பிராமணர்களுக்கு குடை, மாரடி, மோதிரம், பலகை, வஸ்திரம், பொன் முதலியவற்றை வழங்கி பிருஷ்டான்ன போஜனம் செய்வித்துச் சய்யாதானம், கடகதானம் ஆகியவை கொடுத்தால் பிரேத ஜன்மத்திலிருந்து விடுபட முடியும் என்றது.

அவ்வமயம் அவனது பரிவாரங்கள், அங்கு வர அது மறைந்துவிட்டது. அரசன் தன் நகரமடைந்து பிரேத ஜன்மத்தைக் குறித்து அதற்குரிய கர்மங்களையும், தர்மங்களையும் முறைப்படிச் செய்து முடிக்க, அந்தப் பிரேத ஜன்மம். ஆவிப்பிறவி நீங்கி நல்லுலகை அடைந்தது. பிரேத ஜன்மம் நீங்க வேறென்னென்ன செய்யலாம் என்பதைப் பகவான் கருடனுக்கு விளக்கினார். எண்ணெய் நிறைந்த குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தால் சகல பாபங்களும் நீங்கி பிரேத ஜன்மம் தொலையும், அவன் இன்பமுடன் மீளாவுலகை அடைவான். பொன்னாலான குடங்களில் பாலும், நெய்யும் நிரப்பி திக்குபாலகரையும், அஜ சங்கரரையும், ஸ்ரீ ஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களைப் பிராமண உத்தமர்களுக்குத் தானம் கொடுப்பது மிக்க சிறப்புடையதாகும்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
🌸🌸🌸🌸🌸🌸
ரௌரவ நரகம்:
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.
👉அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும்.
👉குடிக்க ஒரு துளித் தண்ணீர் கூடக் கிடைக்காது.
அருந்துவதற்கு அருகதையற்ற ரத்தம் பொழிவதாக இருக்கும். ‘
நான் உயிரோடிருந்த போது எத்தனை பாவங்கள் செய்தேன்.
ஞானிகளையும், பாகவத சந்நியாசிகளையும் ஏசிப் பேசிப் பரிகாசம் செய்தேன்.
 👉அவற்றையெல்லாம் இப்போது அனுபவிக்கின்றேன்.
👉மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமலே என்னை அடித்துப் புடைக்கிறார்களே! அந்தோ! உடலுமில்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேன்.’
👉ஜீவனின் ஒவ்வொரு குரலுக்கும் தூதர்கள் அவனைத் துன்புறுத்த, அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான்!” என்று திருமால் கூறியருளியாதகச் சூதபுராணிகர் கூறினார்.🙏🙏🙏
🌸🌸🌸🌸

👉வேத வடிவனாகிய கருடன், சர்வலோக நாதரான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி,🙏 “ஹே பரமாத்மா!  🙏

👉ஒருவன் மனத்தூய்மையோடு தானதர்மங்களைத் தன் கையாலே செய்வானாயின், அதனால் அவன் அடையும் பயன் என்ன?
👉அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான தர்மம் செய்பவர்களானால் அதனால் உண்டாகும் பயன் என்ன?

👉இவற்றைத் திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்!” என்று விண்ணபஞ் செய்ய பாம்பணையில் துயிலும் பரமாத்மா கூறலானார்.

👉“கருடனே! மனத்தூய்மை இல்லாமலும், மனவுறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ?

👉“ அதனை சித்த சுத்தத்தோடு சாஸ்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை நல்லவருக்கு தானம் செய்தால், அதன் பயனும் கிடைக்கும்.

👉கோதானம் கொடுப்பவரும், வாங்குபவரும் மனத்தூய்மை உள்ளவராகயிருக்க வேண்டும்.

👉வாங்குபவர் உத்தமராக இருக்க வேண்டும்.

👉கற்றுணர்ந்த சான்றோருக்குக் கொடுக்கப்படும் தானம், தானம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் புண்ணியமுன்டாகும்.

👉“வேத சாஸ்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை மட்டும் கொண்டவனுக்கு தானம் கொடுத்தால், அந்த தானமே தானங் கொடுத்தவனுக்கு நரகத்தைக் கொடுக்கும்.

👉 மேலும் தானம் வாங்குவதற்கே தகுதியில்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தோரு தலைமுறை உள்ளவர்களோடு நரகம் புகுவான்.
                                                          
👉“ஒரு பசுவை, ஒருவருக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும்.

👉சாதுக்களிடம் நல்லப் பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் கொடுத்தவன், அந்தப் பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனைச் சந்தேகமின்றி அடைவான்.

👉“தானம் கொடுப்பவன் எளியவனாக இருந்தால் ஏதாவது ஒருபொருளைக் கொடுத்தாலும் போதுமானது.

👉கருடா! மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியைப் பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன்.”

👉என்று ஸ்ரீமந் நாராயணர்
கூறியருளினார்.🙏🙏🙏🙏🙏🙏
👉நவீன விஞ்ஞானம் கூட தடுமாறக்கூடிய உடலைப் பற்றிய விளக்கங்களை, கருடபுராணம் துல்லியமாய் நம் கண் முன் வைக்கிறது.

👉உடம்பில் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உரோமங்கள், தலையில் எழுபது இலட்சம் உரோமங்கள், இருபது நகங்கள், முப்பத்திரண்டு பற்கள் உள்ளதாகவும், மனிதனின் உடம்பில் உள்ள மொத்த தசையின் எடை ஆயிரம் பலம், இரத்தம் நூறு பலம், கொழுப்பு பத்து பலம், தோலின் எடை ஏழு பலம், மஜ்ஜையின் எடை பன்னிரெண்டு பலம், மிகவும் உயர்ந்த இரத்தம் மூன்று பலமும் உள்ளதாக கூறுகிறது.

👉நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கூறப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்களை, நவீன மருத்துவம் முழுமையாக கூற முடியாமல் இன்றும் எல்லாவற்றிக்கும் ஒரு சராசரியான அளவைத் தான் கூறி வருகிறது.

👉(ஒரு தோலா- பத்து கிராம் (வடஇந்திய நகை கடைகளில் இந்த தோலா அளவு இன்றும் சொல்லப்படுகிறது), மூன்று தோலா = ஒரு பலம், ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம், அதாவது ஒரு பலம் என்பது 6/5 அவுன்ஸ்)
☝சரி. இப்போது கருடபுராணம் என்றால் என்ன?
☝அதை யாரால், யாருக்கு சொல்லப்பட்டது? என்பதை பார்ப்போம்.

☝பதினெட்டு புராணங்களில் ஒன்று கருடபுராணம்.
☝எழுதியவர் வியாசர்.
☝இது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும்.
☝பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் இருக்கிறதோ என்று எண்ணி விட வேண்டாம்.

☝அப்படியானால், கருடபுராணம் என்று பெயர் வைப்பானேன்!  இந்த விஷயத்தை ஸ்ரீமன் நாராயணன், கருடனுக்கு முதலில் உபதேசம் செய்தார். கருடன் கேட்ட புராணம் என்பதால், அது கருட புராணமாயிற்று.

☝வைணவ புராணமான இதில் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, வாழ்வுக்குப் பின் உயிர்கள் எங்கே போகின்றன? சொர்க்கம் நரகம் உண்டா? அங்கே என்னென்ன சுகதுக்கத்தை உயிர் அனுபவிக்கிறது, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.🙏
🌸🌸🌸🌸🌸🌸
எட்ட நின்று ரசிப்பதா
கிட்ட நின்று ரசிப்பதா

எத்தனை அழகு நீ
அத்தனை அழகையும்

அன்பரே தம்
அருகிருந்து ரசித்திடாது

முத்ததை பிரிந்திடும்
ஆழ்கடல் சிப்பி போல்

மாயையெனும் பெருங்கடலில்
அமிழ்ந்து கொண்டேனே கண்ணா

கோடி மானிடரே வந்து போய் விடினும்
நூறு வடிவமே நீ எடுத்து வரினும்

மங்கை மானம் காத்து
மாதர் அறம் போற்றி

நன்றே செய்து தர்மத்தை
நலமே வாழ வைத்த

கண்ணா உனக்கீடாகுமோ

காதருகே ஞானம் தரும்
உன் நாமத்திற் கிணையாகுமோ

 மாதவா வேறொரு உருவமே
நீ எடுத்து வரினும்

கண்ணா உனையன்றி
வேறு வடிவமும்

நான் கண்டிட விரும்பேன்
உனை  சுற்றி வரும் எனை

மாயை கடலிருந்து
கரையேற்றிட வருவாயோ வாராயோ

காத்திருக்கின்றேன் கண்ணா
கவி துளிகளில் கண்ணீர் வடித்த படி🙏🙏🙏

No comments:

Post a Comment