Labels

Monday, 24 May 2021

சின்னச் சின்ன செயல்கள்!


🌥️ பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் ...
      பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4:30 முதல் 6:00 மணி வரை; ஒரு நாளின் தொடக்கமான இந்த நேரத்தில் அவரவர் குலதெய்வம், இஷ்ட தெய்வங்கள், முன்னோர்களை வழிபடுவது நன்மையளிக்கும்.

🍃 வீட்டில் துளசி செடி வளர்ப்பதால் ...
      மகாலட்சுமியின் அம்சமான துளசி மாடம் இருக்குமிடத்தில் தரித்திரம், தீயசக்திக்கு இடமிருக்காது. தினமும் துளசி இலைகளை உட்கொண்டு வர, உடல் நலத்துடன் வாழலாம்.

🥸 திருமணத்தன்று மணமகன் ஷேவ் செய்யாமலிருப்பது ...
      தவறு; திருமணச் சடங்கு என்பது வைதிக முறைப்படி செய்யும் கிரியை; இதற்கான விதிமுறைகளை மணமக்கள் பின்பற்ற வேண்டும்; மணமேடையில் அமரும்போது மணமகன் ஷேவ் செய்திருப்பது அவசியம்.

🪔 மனைவி வீட்டு விலக்காக இருக்கும்போது கணவர் விளக்கேற்றுவது பற்றி ...
      மனைவிக்கு முடியாதபோது குடும்பத்தில் கடமைகளை கணவர் செய்வது அவசியம். குறிப்பிட்ட நாள்களில் கணவர் விளக்கேற்றலாம்.

🙅🏻‍♂️ சிலர் நாணயங்களை கோயில் குளத்தில் எறிவது பற்றி ...
      மூடநம்பிக்கை; மகாலட்சுமியின் அம்சமான நாணயத்தை அவமதித்த பாவம் உண்டாகும்; குளத்தின் தூய்மையும், புனிதமும் கெடும்.

🤦🏻‍♂️ குடும்பம் மற்றும் பணிச் சுமையால் இறை வழிபாட்டில் 0ஈடுபடமுடியாதது பற்றி ...
      "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!" என்கிறது சிவபுராணம்; எப்போதும் பணி விடயமாக மூழ்கி இருந்தாலும், ஆழ்மனத்தில் இறைவன் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும்; அப்போது மன அழுத்தம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

🧘🏻‍♂️ தியானம் ...
      ஒன்றை மனம் விரும்பும்போது, அது தவறாக இருந்தால் அறிவு தடுக்க வேண்டும்; இல்லையெனில், துன்பப்பட நேரிடும்; இதிலிருந்து விடுபட்டு மனத்தை ஒருமுகப்படுத்தச் செய்யும் பயிற்சியே தியானம்; இப்பயிற்சியில் இறைவனின் திருவுருவத்தை இடைவிடாது சிந்திப்பதால் மனம் வலிமை பெறும், அறிவின் வழியில் செயல்படத் தொடங்கும்.
 

No comments:

Post a Comment