Labels

Monday, 24 May 2021

திருமூலர் கூறும்வ எளிய வழிமுறைகள்.!!!

 🔯300 முதல் 480 வருடம் வரை பிரணாயாமம் மூலம் மனிதர்களால் உயிர் வாழ முடியும்:



நாம் இடது நாசியில் 16 அங்குலமும்,  வலது நாசியில் 12 அங்குலம், சுழுமுனையில் 8 அங்குலம் என்று சராசரியாக நிமிடத்திற்கு 15 சுவாசங்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 21600 சுவாசங்களை நடத்துகிறோம்
(இது சித்தர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சுவாசக் கணக்கு).

சராசரியாக 12 அங்குலம் சுவாசம் வெளியேவிடுவதில் 4 அங்குலம் குறைந்து 7200 சுவாசம் நஷ்டமாகி 14400 சுவாசமே உள்ளடங்குகிறது என்கிறார்கள். இந்த நஷ்டக் கணக்கை சரி செய்யக் கண்டுபிடிக்கப்பட்ட வழியே பிராணாயாமம்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே !
~திருமந்திரம்.

96 தத்துவங்களுக்குள் அடங்கிவிடுகிறான் மனிதன். அவை,
அறிவு -1,
குணம் -3,
வினை -2,
மண்டலம் -3,
மலம் -3,
தோஷம் -3,
ஏடனை -3,
கரணம் -4,
பூதங்கள் -5,
பொறிகள் -5,
தொழில் -5,
கோசங்கள் -5,
நிலை -5,
அவஸ்த்தை -5,
புலன்கள் -5,
கன்மேந்திரியம் -5,
ஆதாரம் -6,
தூண்டல் -8,
நாடிகள் -10,
காற்று -10 என்பனவாம்.

இதில் 10 காற்றுகளை(வாயு) தசவாயுக்கள் என அழைப்பர். அவை
1 பிராணன்,
2 அபானன்,
3வியானன்,
4 உதானன்,
5 சமானன்,
6 நாகன்,
7 கூர்மன்,
8 கிருகரன்,
9 தேவதத்தன்,
10 தனஞ்செயன் என்பனவாகும்.

மனித உடல்கள் எதனால் இயக்கப் படுகின்றன? காற்றால்தான். இதையே ஒரு சித்தர் ''காயமே இது பொய்யடா ! வெறும் காற்றடைத்த பையடா !'' என்று உறுதிப் படுத்துகிறார்.

மனித உடல் முழுவதும் காற்றானது நீக்கமற நிறைந்து இயங்கியும், இயக்கியும் வருகின்றது.மனித இயக்கத்திற்கு ஆதார சக்தி காற்றுதான் என்று அனைத்து சித்தர்களுமே ஒப்புக் கொள்கிறார்கள். மனதை இயக்குவதும் சுவாசிக்கும் காற்றுதான். சித்தத்தின் சலனத்திற்கு காரணம் காற்றுதான்.

காற்றைக் கவனித்து தியானிப்பதே வாசியோகம் எனப்படும். அதாவது வாசியை கவனித்து அதனோடு ஒன்றுதல். "வாசி" என்ற சொல்லைத் திருப்பினால் "சிவா" அல்லவா,

எனவே வாசியோகமே சிவயோகமாகும்.

தியானம் செய்ய சுத்தமான காற்றிருந்தாலே போதும் வேறென்ன வேண்டும் என்பார்கள். மூச்சு இல்லையேல் பேச்சு இல்லை. அதிகாலையில் தியானம் செய்வதன் சூட்சுமம் என்னவென்றால், அதற்கும் காற்றுதான் காரணம்.

சாதாரணமாக காற்றில் ஆக்ஸிஜன் இருக்கிறது. ஆனால் அதிகாலையில் அதோடுகூட ஓசோனும் சேர்ந்து கிடைக்கிறது. அப்போது அது அமிர்தக்காற்று எனப்படுகிறது. அமிர்தம் உண்ட பலன் அதற்கு உண்டு. அதாவது நீடித்த ஆயுள் அல்லது மரணமில்லா பெருவாழ்வு கிடைக்க உதவியாக இருக்கும். இந்த அமிர்தக் காற்றே தேவர்கள் சுவாசிக்கும் காற்று என்று சொல்லப்படுகிறது. அமிர்தக் காற்றில் பஞ்சபூத சக்திகள் நிரம்பித் ததும்பி வழிகின்றன.

சுவாசம்தான் மனிதனின் ஆயுளை நிர்ணயம் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்களே.

ஒரு நாயானது ஒருநாளைக்கு 72000 தடவை சவாசித்து 14 வருடங்களில் மரித்துவிடுகிறது. குதிரையானது ஒருநாள் ஒன்றுக்கு 50400 தடவைகள் சுவாசித்து 30 லிருந்து 35 வயதுகாலம் வாழ்ந்து மரிக்கிறது. யானை 28800 தடவைமட்டுமே சுவாசிப்பதால் 100 வருடங்கள் வாழ்ந்து விடுகிறது. ஆமை ஒருநாள் ஒன்றுக்கு 7200 தடவைகள் மட்டுமே சுவாசிப்பதால் 400 வருடங்கள் உயிர் வாழ்கிறது. பாம்புகள் அதையும் மிஞ்சி 4320 தடவைகள் மட்டுமே சுவாசித்து சுமார் 500 முதல் ஆயிரம் வருடங்கள் கூட உயிர் வாழ்வதாக சொல்லப்படுகிறது.

மனிதனுக்கு விதிக்கப்பட்ட சுவாசமாக சித்தர்கள் குறிப்பிடும் எண்ணிக்கை 21600 ஆகும். அப்படி சுவாசிக்கும் மனிதன் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்கின்றனர். அதே சுவாசத்தை உற்று கவனித்து இழுத்து நிதானமாக மூச்சுவிட பழகிக் கொண்டால் ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர். உதாரணமாக 10800 தடவைகள் நிதானமாக நன்றாக மூச்சுவிட பழகிவிட்டான் என்றால் 240 ஆண்டுகள் உயிர் வாழலாம். 5400 தடவையே நாள் ஒன்றுக்கு சுவாசிப்பவன் 480 ஆண்டுகள் உயிர் வாழலாம். இதையே திருமூலர் சித்தர்

''காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே!''

என்று குறிப்பிடுகின்றார். நமது சரீரம் அல்லாது மேலும் நான்கு சூக்கும சரீரங்கள் நமக்கு உண்டு என்று சித்தர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தம் ஐந்து. அன்னமய கோஷம் -இது நம் தூல தேகமாகும். பிராணமய கோஷம் - பிராணனும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்ப…
🔯கருவை பாதுகாக்கும் கர்ப்ப ரக்ஷாம்பிகையின் அருளை பெற நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!!


🔯கர்ப்ப ரக்ஷாம்பிகா என்ற சொல்லுக்கு கருவிலிருக்கும் குழந்தையை காக்கும் அன்னை என்பது பொருளாகும்.

 🙏தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் திருக்கருகாவூர் தாலுக்காவில் கர்ப ரக்ஷாம்பிகை கோயில் இருக்கிறது.

 அன்னை பார்வதியும், இறைவன் சிவனும் இந்த கோயிலில் கர்ப ரக்ஷாம்பிகை மற்றும் முல்லை வன நாதர் என்ற பெயரில் குடி கொண்டுள்ளனர்.

கர்ப்ப ரக்ஷாம்பிகை தமிழ் நாட்டில் வணங்கப்படும் மிக முக்கியமான சக்தி வடிவங்களில் ஒன்றாகும்.

 இந்த அம்மன் கருவிலிருக்கும் குழந்தையை பாதுகாப்பதாகவும் மற்றும் கருவில் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுவதாகவும் நம்பப்படுகிறது.

மேலும் இந்த தெய்வம் வாரிசுக்காக குழந்தை வேண்டுமென ஏங்கும் தம்பதிகளுக்கு குழந்தை வரமளிப்பதாகவும் ஒரு பிரபலமான கருத்து நிலவி வருகிறது.

🔯கர்ப்ப ரக்ஷகாம்பிகையின் கதை

முன்பொரு காலத்தில், நிதுர்வா என்ற பெயருடைய ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார்.

அவர் தனது ஆஸ்ரமத்தில் தனது மனைவி வேதிகாவுடன் வாழ்ந்து வந்தார்.

 பல வருடங்களாக அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லை. பின்னர் ஏராளமான பிரார்த்தனைகளுக்கு பிறகு, தேவி பார்வதி அளித்த வரத்தினால் கருவுற்றார்.

 கருவுற்ற மூன்றாம் மாதம் வரை கர்ப்பம் ஆரோக்கியமாக வளர்ந்தது.

மூன்றாவது மாதத்தில் முனிவர் நிதுர்வா மனைவி வேதிகாவை தனியே விட்டுவிட்டு வருணக் கடவுளை தரிசித்து வரச் சென்றார்.

அவர் விரைவில் திரும்பி விட திட்டமிட்டிருந்ததால் ஆஸிரமத்தில் மனைவியை தனியாக விட்டுச் சென்றார்.

 ஆஸிரம வேலைகள் மற்றும் இதர வேலைகளால் மிகவும் களைத்துப் போயிருந்த வேதிகா சிறிது நேரம் ஓய்வெடுக்கலாமென்று படுத்தார்.

அந்த நேரத்தில் உதர்வ பாதா எனப்படும் முனிவர் ஆஸிரமத்திற்கு வந்தார்.

 வேதிகா கர்ப்பமாக இருப்பதைப் பற்றி அறியாமல், ஆஸிரமத்திற்கு வந்த விருந்தாளியை உபசரிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று கோபமடைந்தார்.

 வேதிகா ரயட்சு எனப்படும் பயங்கரமான நோயால் பாதிக்கப்படுவார் என்று சாபமிட்டார்.

இந்த கொடிய நோய் வேதிகாவை மட்டுமல்லாமல் கருவினுள் இருந்த குழந்தையையும் தின்னத் தொடங்கியது.

 இதை உணர்ந்த வேதிகா தேவி பார்வதியை பிரார்த்தித்தாள்.

தேவி பார்வதி வேதிகாவின் முன் தோன்றி, கருவில் இருக்கும் குழந்தையை அது பிறப்பதற்கு தயாராகும் காலம் வரை ஒரு தெய்வீக மண் குடத்தில் வைத்துப் பாதுகாத்தார்.

பி்ன்னர் அந்தக் குழந்தை பிறந்தது.

 அந்த அழகான ஆண் குழந்தைக்கு நைதுருவன் என்று பெயரிடப்பட்டது.

 அவன் இறைவன் சிவன் மற்றும் தேவி பார்வதியின் அருளைப் பெற்றான்.

அவனுக்கு தெய்வீகப் பசு காமதேனு அதன் பாலை ஊட்டியது.

 முனிவர் நிதுர்வா பார்வதி தேவியின் கருணையால் அளவில்லாத மகிழ்ச்சியடைந்து, இறைவன் சிவனையும், அன்னை பார்வதியையும் அந்த இடத்திலேயே தங்கி விடுமாறு வேண்டித் தவம் செய்தார்.

இவ்வாறாக, இறைவனும் இறைவியும், திருக்கருகாவூரில் கர்ப ரக்ஷகாம்பிகை மற்றும் முல்லை வன நாதராக எழுந்தருளி, வேதிகாவை பாதுகாத்தது போல அவர்களின் பக்தர்களையும் பாதுகாத்து அருள் பாலித்து வருகின்றனர்.

இவ்விதமாக கர்ப்ப காலத்தில் உதவி தேவைப்படும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப ரக்ஷகாம்பிகை அம்மனை வேண்டி அவருடைய அருளைப் பெறலாம்.

உங்களுக்கு குழந்தை வரம் வேண்டுமென்றால், அல்லது கருத்தரிப்பதில் சிக்கல்கள் இருந்து பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது ஒரு ஆரோக்கியமான கர்ப்பமும் குழந்தையும் வேண்டுமென்று விரும்பினால் இந்த கர்ப ரக்ஷகாம்பிகை மந்திரங்களை அர்ப்பணிப்பாக பக்தியுடன் முழு மனதுடன் ஜபிக்கவும்.

 🔯ஒவ்வொரு மந்திரத்தையும் தினமும் 108 முறை ஜபிக்க வேண்டும்.

கர்ப காலத்தில் முதல் மாதத்தில் முதல் ஸ்லோகத்தையும்,

 இரண்டாம் மாதத்தில் இரண்டாம் ஸ்லோகத்தையும்

 மேலும் அதே போல கர்ப்ப காலத்தின் நிறைவு காலம் வரை, 9 மாதங்கள் 9 ஸ்லோகங்களை முறையே மாதத்திற்கு ஒன்றாக ஜபிக்க வேண்டும்.

 
🔯ஸ்லோகம் 1:

ஏஹி பகவான் பிராமன், பிரஜா கர்த்தா பிரஜாபதே |

ப்ரக்ருஹிநிவ பலிம் ச - இமாம் சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||

⚜️பொருள்:

மனிதர்களைப் படைப்பவனும், மனிதர்களின் கடவுளுமான ஏ பிரம்மனே, இந்தப் புனிதமான நைவேத்தியத்தை தயவு செய்து ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் இந்தப் பெண்ணை அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.


🔯ஸ்லோகம் 2:

அஸ்வினி தேவ தேவேசௌ, ப்ரக்ஹ்நீதம் பலிம் த்விமாம் |

சாபத்யாம் கர்பிணீம் ச - இமாம், ச - ரக்ஷதாம் பூஜானயாய ||

⚜️பொருள்:

தேவர்களின் மருத்துவர்களான ஏழு அஸ்வினி தேவர்களே, தயவு செய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, உங்களை வணங்கும் கர்ப்பமாக உள்ள இந்தப் பெண்ணை அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.


 
🔯ஸ்லோகம் 3:

ருத்ராக்ஷ ஏகாதச ப்ரோக்தா, ப்ரக்ருஹானந்து பலீம் த்விமாம் |

யக்ஷமாகம் ப்ரீதயே வ்ரதம், நித்யம் ரக்ஷாந்து கர்ப்பிணீம் ||

⚜️பொருள்:

ஓ, பதினோறு தெய்வீக ருத்ரர்களே, உங்கள் அருளையும் ஆசியையும் பெறுவதற்காக உங்கள் விருப்பத்தின் படி செய்யப்பட்ட இந்த புனிதமான நைவேத்தியத்தை தயவு செய்து ஏற்றுக் கொண்டு, மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் இந்தப் பெண்ணை அனுதினமும் பாதுகாத்து அருள் புரிவீராக.


🔯ஸ்லோகம் 4:

ஆதித்யாய த்வாதச ப்ரோக்தஹ ப்ரக்ரீம், நீத்வம் பலிம் த்விமாம் |

யஷ்மாகம் தேஜசாம் விருத்யா, நித்யம் ரக்ஷதா கர்ப்பிணீம் ||

⚜️பொருள்:

ஓ, பன்னிரெண்டு சூரியக் கடவுளர்களே, தயவு செய்து இந்தப் படையலை ஏற்றுக் கொள்ளுங்கள். இதை ஏற்பதால் உங்கள் உயர்ந்த ஒளி அதிகரிக்குமாகுக. இந்தப் புனித நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் இந்தப் பெண்ணை அனுதினமும் பாதுகாத்து அருள் புரிவீராக.


 
🔯ஸ்லோகம் 5:

வினாயகா, கணாதாக்ஷா, சிவபுத்ர மஹா பலா |

ப்ரக்ஹ்ருநீஷ்வ பலிம் ச - இமாம் சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||

⚜️பொருள்:

ஓ, வினாயகா, ஓ, கணேசா, ஓ, இறைவன் சிவனின் மகனே, ஓ, மிகுந்த பலசாலியான கடவுளே, தயவு செய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் இந்தப் பெண்ணை அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.

 
🔯ஸ்லோகம் 6:

ஸ்கந்தா ஷண்முகா தேவேஷ புத்ர ப்ரீதி விவர்த்தனா |

ப்ரக்ரிஹ்நீஷ்வ பலிம் ச - இமாம், சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||

⚜️பொருள்:

ஓ, ஸ்கந்தா, ஓ ஆறு தலைகளைக் கொண்ட கடவுளே, ஓ, தேவர்களின் தலைவரான கடவுளே, ஓ, எங்கள் பிள்ளைகளின் அன்பை அதிகரிக்கச் செய்யும் கடவுளே, தயவு செய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் இந்தப் பெண்ணை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.


🔯ஸ்லோகம் 7

ப்ரபாஸஹ ப்ரபாவஸ்யமஹ ப்ரத்யுஷோ மாருதோ நலஹ |

த்ருவோதர தரஷைவ, வஸஸவோஷ்தவ் ப்ரகீர்த்திஹ |

ப்ரக்ருஹ்நீத்வம் பலிம் ச - இமாம், நித்யம் ரக்ஷதாம் கர்ப்பிணீம் ||

⚜️பொருள்:

ஓ, ப்ரபாஸா, ஓ, ப்ரபாவா, ஓ, ப்ரத்யுஷாவின் ஸ்யாமா, ஓ, மாருதா, ஓ, அனலா, ஓ, த்ருவா, ஓ, துரதுரா, எனப்படும் தெய்வீக எட்டு வாசுக்களே, தயவு செய்து இந்த புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் இந்தப் பெண்ணை அனுதினமும் பாதுகாத்து அருள் புரிவீராக.


🔯ஸ்லோகம் 8:

பிதுர் தேவி பிதுஸ்ரேஷ்டே, பாஹு புத்ரீ மஹா பலே |

பூத ஸ்ரேஷ்டே நிஸ வாஸே, நிர்விதே சௌனகப் ப்ரியே |

ப்ரக்ரிஹ்நீஷ்வ பலிம் ச - இமாம், சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||

⚜️பொருள்:

ஓ, இறந்த என் பித்ருக்களின் ஆத்மாக்களுக்கு தேவதையே, ஓ, எனது மூதாதையர்களின் ஆத்மாக்களை விட உயர்ந்த தேவைதையே, ஓ, மிகுந்த பலசாலியான தேவதையே, ஓ, அனைத்து உயிரிங்களை விடவும் உயர்ந்த தேவதையே, ஓ, இரவுகளில் எங்களைக் காக்கும் தேவதையே, ஓ, எந்தவித களங்கங்களுமில்லாத தேவதையே, ஓ, சௌனக முனிவரால் வணங்கப்பட்ட தேவதையே, தயவுசெய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் இந்தப் பெண்ணை அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.


🔯ஸ்லோகம் 9:

ரக்ஷ ரக்ஷ மஹாதேவா, பக்த - அனுக்ரஹ காரகா |

பக்ஷி வாஹன கோவிந்தா, சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||

⚜️பொருள்:

ஓ, அனைத்திலும் உயர்ந்த கடவுளே, எங்களை கவனித்து கொள்வதிலும் பாதுகாப்பதிலும் மகிழ்ந்திரு, ஓ, தனது பக்தர்கள் மீது அருளாசிகளைப் பொழியும் கடவுளே, ஓ, பறவை வாகனத்தில் ஏறி சவாரி செய்யும் கோவிந்தனே, தயவு செய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் இந்தப் பெண்ணை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.

No comments:

Post a Comment