Labels

Saturday, 22 May 2021

பெண்பிள்ளைகளுக்கு சீர்... பாத்திரங்களின் பெயர்களும் சீர்வரிசைகள்

உங்களுடைய பார்வைக்கு இதோ முழுமையாக படியுங்கள் இதில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டது உண்டா என்று பாருங்கள்😍😍😍😍

முளைப்பாரி கிண்ணம்
முக்காலி
கரண்டி
இட்டுவட்டி
அன்னக்கரண்டி
டவரா செட்
100 ரூபாய் அடுக்கு சின்னது பெரியது
அண்டா  செட்
இட்லி சட்டி
போகனி சட்டி அடுக்கு
மைசூர் அடுக்கு
கோழ்ச் சட்டி சின்னது பெரியது
அடுப்பு சட்டி சின்னது பெரியது
பரங்கிக்காய் சட்டி
காது சட்டி
பந்தி வாளி
பித்தளை சம்பட்டம்
நெய் தூக்கு
தூக்கு சட்டி
தெக்கூரான் தவலை
கும்பகோணம் தவலை
குடம்
தெக்கூரான் செம்பு
பால் செம்பு
செம்பு
கரகசட்டி
படி செட்
குலவாழும் பிள்ளை
சடங்கு தட்டு
பொங்க தவலை
விளக்கு சட்டி
கூஜா
டம்ளர்
இரட்டை போனி
தட்டு
பாக்கு வெட்டி

சில்வர் சாமான்கள்

படி செட்
அண்டா செட்
போகனி சட்டி செட்
மைசூர் அடுக்கு செட்
புழங்கற சாமான்கள் சாமான்கள்
கரண்டி
தெக்கூரான் தவலை
கும்பகோணம் தவலை
குடம்
சலங்கை குடம்
இட்லி சட்டி
தெக்கூரான் செம்பு
செம்பு
டம்ளர் டஜன்
தூக்கு சட்டி
பந்தி வாளி
கத்தி
மூடி போட்ட தூக்கு
சம்பட்டம் செட்
சாப்பாட்டு தட்டு
சோத்து  தவளை
அஞ்சரை பெட்டி

பிளாஸ்டிக் சாமான்கள்

காய் தட்டு
வாளி
குடம்
மக்கு
மரவை செட்
வாளி செட்
கரண்டி செட்
கூடை
டப்
சேர்
நாக்காலி
முக்காலி
ஆங்கர்
கிளிப்
பழ தட்டு
சீவிக்கொள்ளும் பெட்டி
சீப்பு
அஞ்சர பெட்டி
மூடி டப்பா செட்
கிண்ணம்
பாய்
தடுக்கு

மங்கு சாமான்கள்

காபி ஆத்துற தட்டு செட்
பங்கு அடுக்கு
பரங்கிக்காய் சட்டி
தொப்பிக்காய் சட்டி
தூக்கு
வாளி
காது வைத்த மாவு சட்டி
கேத்தல்
கோப்பை
கரண்டி
டம்ளர் செட்
லிட்டர் செட்
தட்டு
கிண்ணம்
மூடி

பீங்கான் சாமான்கள்

உப்பு சாடி
ஊறுகாய் சாடி
தண்ணீர் குதிர்
அரிசி குதிர்
பழ தட்டு
தண்ணீர் சாடி
டம்ளர்
கிண்ணம்
கோப்பை
கென்டி
கண்ணாடி

மரசாமான்கள்

காய்தட்டு
தேங்காய் துருவி
அரிவாள் மனை
ஊறுகாய்த்தட்டு
மிளகாய் பெட்டி
புளி பெட்டி
அஞ்சரை பெட்டி
குத்துக்கட்டை
கரண்டி பலகை
சோத்துக்கட்டை
அகப்பை
கரண்டி
நாற்காலி
முக்காலி
மனை பலகை
மனக்கட்டை
கட்டில்
ஈசி சேர்
மேசை
கைப்பொட்டி
அலமாரி
பாய் சுருட்டு
ரேக்கை
நடை வண்டி
விளையாட்டு சாமான்
மரப்பாச்சி பொம்மை
மருந்து கட்டை
ஓலை பாய்
ஈச்சம் பாய்
பர்மா பாய்
பிரம்பு பாய்
கோரம் பாய்
பந்தி பாய்
ஓலை கொட்டான்
மெத்தை
தலையனை
சமுக்காளம்
பந்தி சமுக்காளம்
தடுக்கு
விசிறி
போர்வை
இடியப்பகட்டை
முறுக்குகட்டை
துடுப்பு
மத்து
சப்பாத்தி பலகை
தாயகட்டை
பல்லாங்குழி பலகை

தகர சாமான்கள்

எச்சில் பணிக்கம்
எச்சில் வாளி
துத்தநாக தகரம் டப்பா
மாவு டின்
குப்பைவாளி
கேணி வாளி
வாளி

இரும்பு சாமான்கள்

இருப்புசட்டி
தோசைகள்
பணியாரகள்
பாக்கு வெட்டி
அடுப்பு

கல் சாமான்கள்

ஆட்டுகல்
அம்மி
மருந்து அரைக்கும் கல்
திருகை
சிறு வடிக்கும் கல்

வெள்ளி சாமான்கள்

விளக்கு
கார்த்திகை விளக்கு
மாவிளக்கு சட்டி
கொட்டான்
தெக்கூரான் செம்பு
அரசமரத்து குடம்
பால் கிண்டி
சடங்கு தட்டு
பிள்ளையார்
அம்பு
ஏடு எழுத்தாணி
சந்தன பேளா
பன்னீர் செம்பு
சங்கு
வெள்ளி பிடித்த ஊதும் சங்கு
டம்ளர்
சாப்பாட்டு தட்டு
கும்பா
பால் செம்பு
குலவாழும் பிள்ளை

பெண் சாமான்கள்

பட்டு சேலை 21
மாத்துக்கு சேலை 51
மற்ற உருப்படிகள்
சிவிக் கொள்ளும் பெட்டி
சென்ட்
தலைச்சுட்டி

ஆண்பிள்ளை சாமான்கள்  

வேட்டி
சட்டை
பேன்ட்
டவல்
கர்சீப்
சென்ட்
ரேடியோ
காத்தாடி
செருப்பு
கைகடிகாரம்
சுவர்கடிதூக்கு

சம்மந்தி சாமான்

அடுக்கு சட்டி
கோலமாவு
உப்பு ஒரு சட்டி
வத்தல் 5 வாளி
பொங்க தவலை
கரண்டி
தட்டு
எண்ணெய் தூக்கு
கொட்டான்
அடுப்பு
குப்பை தகரம்
விளக்கமாறு பட்டுதுணி சுற்றி
அரிசி 1 மூட்டை

முழுவதும் இவ்வளவு தான்..

தங்கநகைகளும், டௌரி பணமும் இந்த லிஸ்ட்டில் வராது..

No comments:

Post a Comment