#மிளகு
மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.
#அருகம்புல்
அருகம்புல்லும், மஞ்சளும் சம அளவு எடுத்து அதை நன்கு அரைத்து படர்தாமரையில் பூச படிப்படியாக படர்தாமரை மறையும்.
#பூவரசங்காய்
பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.
#சந்தனம்
சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழ சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.
#குப்பை_மேனி
ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்கவும். சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆற வைத்து எடுத்து வைத்து பூசி வர படர்தாமரை சரியாகும்.
தோலை பற்றி தொல்லை தரும் படர்தாமரைக்கு குப்பை மேனி மருந்தாகிறது. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது.
#கீழாநெல்லி
கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டும் இல்லை.. தோல் நோய்களை போக்கும் தன்மையும் கொண்டது. கீழாநெல்லியை அரைத்து பற்று போட்டால் படர்தாமரை நோய் விலகும்.
#பூண்டு
பூண்டு இந்த படர்தாமரைக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். வடிக்கட்டி படர்தாமரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்தாமரை சரியாகும்.
#தும்பை_இலைகள்
தும்பை இலைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பேஸ்டை எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விரைவில்
#வேப்பிலை
வேப்பிலை எண்ணெயை தினமும் 2-3 முறை படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வாருங்கள்.
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வையுங்கள்.
பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்ய, விரைவில் படர்தாமரை மறையும்.
#அயோடின்
2 சதவீதம் அயோடின் டின்சரைப் பயன்படுத்தி எளிதில் படர்தாமரையை சரிசெய்ய முடியும். அதற்கு 2 சதவீத அயோடின் திரவத்தை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி தடவ வேண்டும்.
இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என சில வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
#பாட்டி_வைத்தியம்
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து சம அளவு அரைத்து படர்தாமரையில் பூச நோய் தீரும்.
படர் தாமரை என்று உடல் இடுக்குகளில் ஏற்படும் தோல் பிரச்னைக்கும் பப்பாளி இலையை அரைத்து பூசினால் நல்ல குணம் கிடைக்கும்.
குப்பைமேனிஇலை,வெள்ளறுகு கைபிடி,கீழாநெல்லி கைபிடி
அவித்து வெறும் வயிற்றில் 9.நாள் குடித்துவரவும்.
வெளிபூச்சு.எழுமிச்சைபழசாறு, உப்பு,கஸ்தூரி,மஞ்சல் தேய்து குளித்து வர
நல்ல குணமாகும்.
சீமை அகத்தி இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம்.
கடுக்காய்த் தோல், இந்துப்பு, கிரந்திதகரம், அறுகம்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, மோர்விட்டு அரைத்துப் பூசலாம்.
புங்கம் விதையை அரைத்துப் பூசலாம்.
பூண்டை அரைத்து தேன் சேர்த்துப் பூசலாம்.
அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்துப் பூசலாம்.
நிலாவாரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
ஜாதிக்காயைத் தேன் விட்டு அரைத்துப் பூச, படர்தாமரை குணமாகும்.
சரக்கொன்றைத் துளிர், புளியந்துளிர், மிளகு சம அளவு எடுத்து, அரைத்துப் பூசலாம்.
பப்பாளி விதையைக் காடிநீர் விட்டு அரைத்துப் பூசலாம்.
சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச் சாறுவிட்டு அரைத்துப் பூசலாம்.
ஆகாயத் தாமரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
குந்திரிக்கம் நல்லெண்ணெய் வெள்ளை மெழுகு வகைக்கு 32 கி எடுத்து சிறு தீயில் இட்டு, உருக்கி, வடிகட்டி, ஆறிய பின் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.
யூகலிப்டஸ் இலையில் உள்ள சினியோல், பிசைமின் ஆகிய வேதிப்பொருட்கள் படர்தாமரையை உருவாக்கும் பூஞ்சையை அழிக்கின்றன.
யூகலிப்டஸ் தைலத்தைப் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.
துளசி இலையை உப்புடன் சேர்த்துப் பூசலாம்.
சிவனார் வேம்பு இலையையும் பூவையும் அரைக் கைப்பிடி அளவு எடுத்து, சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்த, படர்தாமரை குணமாகும்.
மாதுளம் பழத்தோல், வல்லாரை இலை சம அளவு எடுத்து காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.
கிராம்பை நீர்விட்டு அரைத்துப் பூச, படர் தாமரை குணமாகும்.
லவங்கப் பட்டையை நீர் விட்டு மையாக அரைத்துப் பூசலாம். பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, படர்தாமரையை அழிக்கும்.
Monday, 24 May 2021
#படர்_தாமரைக்கு…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment