Labels

Monday, 24 May 2021

பிரயோபவேசம், தலயாத்திரை, சுவர்க்கம்


ஒருவன் ஆகார வியவஹாரம் ஒன்றும் செய்யாமல் நியமத்தோடு தர்ப்பாசயனம் செய்து பகவானையே தியானித்துக் கொண்டு மரித்தால் அவன் வைகுந்தம் அடைவான். எனவே பிரயோபவேசம் பகவானுக்கு உகந்ததாகும். பிரயோபவேசம் செய்த நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வேள்வி செய்த பலன் கிடைக்கும். அவன் உலகியலின் உண்மையையும், வாழ்வியலின் இரகசியத்தையும், தெய்வீக இயலின் மெய்ம்மையையும், உணர்ந்து இனி உயிர் வாழ்க்கை வேண்டியதில்லை என்று, இனி மரித்து விடுவோம் எனத் துணிந்து அதை நல்ல முறையில் பிரயோபவேசம் செய்து நல்லுலகை அடைவான்.

விடு, மனைவி, மக்களை நெடுங்காலம் பிரிந்து, நெடுந்தூரம் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் யாத்திரை செய்பவனுக்குப் பிரம்மாதி தேவர்களெல்லாம் வேண்டியவற்றைக் கொடுக்கிறார்கள். அப்படிச் செய்யும் ஒருவன் வழியில் மரித்தால் அவன் சுவர்க்கம் பெறுவான். மரண காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, ஒருவன், விஷ்ணு க்ஷேத்திரம் ஒன்றில் மரிக்க எண்ணி யாத்திரை செய்ய நடந்தால், அவன் நடக்கும் அடி ஒன்றுக்கு ஒரு பசுவைத் தானம் செய்த பயனை அடைவான். தம்மவர்க்கு உதவி, அன்னியருக்கு உதவி செய்வதை விட தன் பெற்றோர்க்கு, உடன்பிறந்தோர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்பது சிறப்புடைத்து, தந்தைக்குக் கொடுத்தல் உத்தம பிராமணனுக்குக் கொடுத்த தான புண்ணியத்தை விட நூறு மடங்கு கிடைக்கும். தாய்க்குக் கொடுத்தால் ஆயிரம் மடங்கு அதிகம். உடன் பிறந்த ஆண், பெண்களுக்குக் கொடுத்தலும் அளவற்ற புண்ணியம் தரும்.

நல்ல ஒழுக்கத்திலும், நன்னெறியிலும் ஒழுகி, உயிரினங்களிருந்து உற்ற சமயத்தில் உதவி, பூதானம் செய்பவனைக் கண்டு புவிமகள் மகிழ்ச்சி அடைவாள். பூதானம் செய்தவனும், புனலில் மூழ்கியவனும், பஞ்சாக்கினி நடுவில் இருந்து தவம் செய்தவனும், வேள்விளைச் செய்தவனும், போரில் புறமுதுகிடாமல் முன்னேறியவனும் இகத்திலும், பரத்திலும் இன்பம் அடைவான்.

அயோத்தி, காஞ்சி, மதுரை, மாயா, காசி, அவந்தி, துவாரகா ஆகிய ஏழில் ஒன்றில் மரித்தால் நிரதிசய இன்ப வீடடைவான். சந்நியாசம் பெற்றவன், விஷ்ணு பக்தி செய்பவன், ஸ்ரீராம, கிருஷ்ண நாம உச்சாடனம் செய்வோர், அவ்வாறு செய்து கொண்டே இருக்கையில் மரித்தால் பேரின்ப வீடு அடைவர். திருத்துழாய் பயிரிட்டவன், அதற்கு நீர் பாய்ச்சியவன் நல்லுலகடைவான். ஆபத்திலுள்ள பசு, பிராமணன், குழந்தைகளைத் தன்னுயிரைக் பணயம் வைத்த காப்பாற்றுபவன் தேவர்கள் எதிர் கொள்ள சுவர்க்கம் அடைவான். ஸ்ரீரங்கம், காசி, குருக்ஷே ஷத்திரம், பிருகு க்ஷேத்திரம், பிரபாசதீர்த்தம், காஞ்சி, புஷ்கரம், பூதேஸ்வரம் ஆகிய புனித நகரங்களில் மாண்டவன் மோட்சமடைவான். வேத சாஸ்திரங்களை உணர்ந்தவர், கன்னிகை, பூமி, கிருகம், பசு, திலம், யானை, தானம் கொடுத்தோர், கிணறு, நடைவாவி, குளம், தேவாலயம் புதுப்பித்தோர் இவற்றைத் தோற்றுவித்தோரைக் காட்டிலும் அதிக புண்ணியம் பெற்று விண்ணுலகடைவர்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா
கருட புராணம் || தண்டனைகள்
---------------------------------------------
****************
அவீசி
----------
பொய்சாட்சி சொல்தல் பிறரைக் கெடுப்பது அடுத்தவர் மீது பழி போடுவது
*
நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்தப்படும்
**
கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

2. இறைவனிடம் பக்தன் எதையும் கேட்கக் கூடாது என்கிறது கருடபுராணம். இப்படி சொல்வது நமக்குப் புதுமையாக இருக்கும். நாம் விரும்பியதை எல்லாம் கேட்பதற்குத் தானே கடவுள் இருக்கிறார் என்று நினைக்கிறோம்.

ஒரு குழந்தைக்குத் தாய் பார்த்து பார்த்து, பணிவிடை செய்வாள். தூங்கும் குழந்தையைக் கூட எழுப்பி, பாவம் பசியோடு குழந்தை தூங்குகிறதே! என்று பாலூட்டுவாள். அதே போல் தான் இறைவனும்! அவர் தாயன்போடு நம்மை காத்தருள்கிறார். இந்த நம்பிக்கை ஒருவனுக்கு ஆழமாக இருந்தால், இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்கத் தோன்றாது.

பக்தனுக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் இறைவனைத் தவிர வேறொருவர் இல்லை. இதை உணர்ந்தவர்கள், இறைவா! உன் திருவடியில் நிரந்தரமான பக்தியை எனக்குக் கொடு! என்று மட்டும் கேட்பார்கள்

அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே! பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது.

“அவன் இம்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேர்க்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு எதையுமே செய்ய இயலாது.

“மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

“கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான்.

“இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் “பக்குவபதம்” என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து ‘துக்கதம்’ ஊரை அடைந்து உண்பான்.

“விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில், ‘யமகிங்கர்களே! என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன்...’ என்று அழுவான்.

“அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி, ‘முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும்’ என்று அறைவார்கள். ‘ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன்...’ என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான்.

“யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும் ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார்.
உங்களின் உறவுகளை சிறு காரணத்திற்காக வெறுக்காதிர்கள்... விலக்காதீர்கள்.
அவர்களிடம் தவறு இருக்கிறதா?
உங்கள் கண்களை மூடிக்கொண்டு அவர்களுடன் கழித்த இனிமையான தருணங்களை, நாட்களை மனதால் அசை போடுங்கள்.....
வாழ்வில் சரியாக இருத்தலை விட அன்பாக இருத்தலே முக்கியம்.
நீங்கள் உங்களையே அணைத்துக்கொள்ள முடியாது...
உங்கள் தோள்களிலே அழவும் முடியாது...
வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் வாழ்வதே...
அதனால் உங்களை நேசிப்பவரை இழக்காதீர்கள்.
உறவுகளை பணத்தின் மொழியால் புரிந்து கொள்ள
ஏன் எனில் நம் எல்லா முதலீடுகளும் லாபம் கொடுக்காது. ஆனால் நம்மை உயர வைக்கும்.
குடும்பம், நட்பு, உறவுகள் எல்லாம் அது போன்ற ஒரு முதலீடுகளே....
பொறாமை , கோபம் , பேராசை இல்லாத வாழ்க்கைப் பாதையில் நீங்கள் பயணித்துப் பாருங்கள்,
நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு அழகான அர்த்தம் புரியும்...
சாதாரண நிலையில் உள்ளவரையும் மதிப்பை உயர்த்துவது பொருள் ஆகும் அந்த பொருளை விட சிறந்தது இல்லை

ஆதியும் நீயே
அந்தமும் நீயே
உணர்பவன் தானே
உனை சேர்வான்.
வேண்டியது நீ

வேண்டுகின்றேன் உனை

வேண்டியது என்றும்

வேறில்லை

வேதனை தீர்த்து விடு

வேங்குழல் நாதனே

வேங்கடவா
உன் அருள் கொடையில்
உலகம் இயக்கம்
உன் அன்பின் அரணில்
உயிர்கள் மயக்கம்
உன்னாலே மாதவா யாம்
உயர் பேறு பெற்றோம்

No comments:

Post a Comment