திருமண பொருத்தத்தின் போது செவ்வாய் சுக்கிரன் நிலை முக்கியமாக அலசப்பட வேண்டும்.
செவ்வாய் சுக்கிரன் இணைந்து பாபர் பார்வை அல்லது சேர்க்கை ,பாபர் நட்சத்திரத்தில் நிற்பது போன்ற பாதிப்புகளில் இருந்தால் விவாகரத்து, பிரிவு ,அதிக உணர்ச்சியால் பாலியல் குற்றங்கள் நடப்பது போன்றவை ஏற்படும் .
குழந்தைகள் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு இருந்தால் அவர்களை கவனத்துடன் ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் .இந்த இணைவை குரு பார்த்தாலும் அல்லது இந்த இணைவுக்கு கேந்திரத்தில் குரு இருந்தாலும் அதுபோன்ற தவறான எண்ணங்கள் ஏற்பட்டாலும் தவறு நடக்காமல் தடுக்கப்படும் .
சுக்கிரன் மனைவி, வசதிவாய்ப்புகள், தாம்பத்திய சுகம் ,கலை, ஈர்ப்பு ,குடும்ப மகிழ்ச்சி, திருமணம் ,மன உற்சாகம், உடல் தோற்றம், உயிரனுக்கள் போன்றவற்றுக்கு காரகர் ஆகிறார்.
செவ்வாய் உடல் வலிமை, ஆக்ரோஷம் ,மனவலிமை, செயல்திறன் போன்றவற்றுக்கு காரகர் ஆகிறார் .
சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்து இருக்கும்போது பாலியல் உணர்ச்சியை தூண்டி அதிக ஈடுபாட்டை ஏற்படுத்துவார்.
தம்பதிகளின் ஜாதகத்தை பரிசீலிக்கும் போது செவ்வாய் சுக்கிரன் இணைந்திருந்தாலும் அல்லது செவ்வாய் சுக்கிரன் சப்தமத்தில் இருந்தாலும் அதை குரு பார்த்தாலும் அல்லது செவ்வாய் சுக்கிரன் இணைந்து குரு அல்லது புதன் நட்சத்திரத்தில் இருந்தாலும் நல்லது.
சுக்கிரன் செவ்வாயின் நிலை உடல் கவர்ச்சியை நிர்ணயிக்கும் .செவ்வாய் சுக்கிரன் இணைவு இன்பம் உணர்ச்சிகளை அதிகப்படுத்தும் .
செவ்வாய் சுக்கிரன் சஷ்டாஷ்டகமாக இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் .
சுக்கிரன் சுபர் ராசியிலும் அல்லது சுபர் நட்சத்திரத்தில் இருந்தால் செவ்வாயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும். ராகு தொடர்பு ஏற்பட்டால் காமம் அதிகமாகும் .
கேது சுக்கிரன் செவ்வாய் இணைவு அல்லது பார்வை பெற்று குரு புதன் வளர்பிறைச் சந்திரன் தொடர்பு அல்லது இந்த கிரகங்களின் நட்சத்திரங்களில் இல்லாமலிருந்தால் பிரச்சனையை ஏற்படுத்தும்.
Monday, 24 May 2021
திருமண வாழ்வில் செவ்வாய் சுக்கிரனின் பங்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment