Labels

Monday, 24 May 2021

புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்



குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை சிசு, மூன்று வயது வரையில் பாலகன், ஆறு வயது வரையில் குமரன், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் எனப்படும். பதினாறு வயது வரையில் கைசோரன் எனப்படுவான். மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும் உதக கும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும். மூன்று வயதுக்குள் இறக்கும் குழந்தையைப் புதைக்க வேண்டும். 24 ஆவது மாதம் முடிந்து 25ஆவது மாதம் பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளை எரிக்கவேண்டும். ஐந்து வயது முடிந்து பூணூல் அணிந்திருந்தாலும், இல்லா விட்டாலும் இறந்தவனுக்குப் பத்து நாட்களுக்கும் பிண்டம் போட வேண்டும். 5 முதல் 12, (அ) 12 நிரம்பியவர் மரித்தால் விருக்ஷாற்சனம் செய்ய வேண்டும். ஆனால், சபிண்டீகரணம் செய்யலாகாது.

புத்திரனுக்குத் தந்தையும், தந்தைக்குப் புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். பூணூலை இடது பக்கம் தரித்துக் கொண்டு தருப்பையுடன் ஏகோதிஷ்டம் போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறு ஜன்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான். பெரும்பாலான பிள்ளைகள் தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றனர். தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அமிசங்களில் ஏதேனும் ஒன்று தனயனுக்கும் பொருந்தும். ஒருவன் தனக்குத் தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைக் கண்ணால் பார்த்துவிட்டால் அந்த ஜன்மத்தில் புத் என்னும் நரகத்தை ஆன்மாவில் காணமாட்டான். மணம் புரிந்துகொண்ட ஒருவன் ஒருத்திக்கே புத்திரன் பிறந்தால் அவன் குலத்தில் பிதிர்த் தேவர்கள் எல்லாம் மிக்க மகிழ்ச்சி அடைவர்.

தந்தைக்கு ஈமக்கடன்களைத் தலைச்சனே அதாவது முதல் மகனே செய்யக் கடமைப்பட்டவன் ஆவான். மற்ற புத்திரர்கள் இருந்தால் அவர்கள் தகப்பனுக்கு சிவகர்மங்களையும், சிரார்த்தாதிகளைச் செய்யக் கடவராவர். ஒருவன் தனக்குப் பௌத்திரன் பிறந்து அவனை எடுத்துப் பார்த்த பிறகே மரித்தால் நல்லுலகை அடைவான். கொள்ளுப் பேரனைப் பார்த்தவன் அதைவிட நல்லுலகை அடைவான். பெண்ணுக்கு விலை கொடாமல் கன்னிகாதானம் செய்து கொடுக்க அவளை மணம் புரிந்து, புத்திரனைப் பெற்றால், அந்தப் புத்திரன், காமக் கிழத்தியின் மகன் ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம், தானங்கள் செய்யலாம்.
சற்புத்திரர்கள் தீர்த்தயாத்திரைச் செய்யலாம். அன்னரூபமாயும், ஆமரூபமாயும், ஹிரண்ய ரூபமாயும் சிரார்த்தம் செய்யலாம்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
"""உன் பின்னால் நிற்கும் எல்லோருக்கும் உன்னை பிடிக்கும். என்று நினைக்காதே அதில் எத்தனை பேர் உன் முதுகில் குத்த போகிறார்கள் என்பது உனக்கு தெரியாது.....எப்போதும் விழிப்புடன் இரு.....
🌸🌸🌸🌸🌸
கருட புராணம் || தண்டனைகள்
----------------------------------------
தாமிஸிர நரகம்
---------------------------
பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரித்தல், பிறரது குழந்தையை அபகரித்தல், பிறரது பொருளை ஏமாற்றி அபகரித்தல்.
*
நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் அடிப்பார்கள்.
**********
🌸🌸🌸🌸🌸🌸
 #ஞானகர்மஸந்யாஸயோகம்
🙏 16. " கர்மம் எது  கதர்மம் எது என்பதில் ஞானிகளே தடுமாற்றம் அடைகின்றனர். எதை கர்மம் என்று அறிந்து கேட்டில் இருந்து விடுபடுவாயோ அதை உனக்குக் கூறுவேன்". 🙏

விளக்கம்:  துயரங்களில் எல்லாம் மிகப் பெரியது பிறவிப் பிணி என்பதே.  தீராத இந்தப்  பிறவி  என்னும்  பெருங்கடலைக் கடக்க  இறைவனின்  அருள் வேண்டும்.   தீராத   இத்தொல்லையைத் தொலைப்பதற்கு   வினையின் கூறுகள்  முழுவதும் விடு பட வேண்டும்.  செயலில் ஒரு உடலைக் கொண்டு ஓயாது வேலை வாங்குவது  தானே. கர்மம் ம் என்று நினைக்க வேண்டாம்.  எதைச் செய்வது நல்லது   என்று  சாஸ்திரங்கள் கூறுகிறதோ  அதுவே கர்மம்.(வினைகள்)

🙏17. " கர்மத்தின் போக்கைத்  தெரியவேண்டும்.  விலக்கப்பட்ட கர்மம் எது என்று தெரியவேண்டும்.  கர்மத்தை கடந்த நிலையையும் தெரியவேண்டும்.  கர்மத்தின் போக்கு அறிதற்கரியது". 🙏

 விளக்கம்:  இதைச் செய்!  இதைச் செய்யாதே!   என்று சாஸ்திரம் விதித்துள்ளது.  இதில்  இதை செய்!  என்று சாஸ்திரம்  எதைக் கூறுகிறதோ,  அதுவே  கர்மம் எனப்படுவது.  இதைச் செய்யாதே!  என்று எதை சாஸ்திரம் விலக்கி இருக்கிறதோ, அதுவே  அகர்மம்(விலக்கப்பட்ட செயல்)
எதையெல்லாம்  செய்யக்கூடாது என்பதற்கான விளக்கங்கள் 16 17 ஆவது அத்தியாயங்களில் பகவானால் கூறப்படுகிறது.🙏
_
🌸🌸🌸🌸🌸🌸🌸
கர்மம் கைங்கர்யத்தில் புகும்.
ஜ்ஞானம் ஸ்வரூப ப்ரகாசத்திலே புகும்
பக்தி ப்ராப்ய ருசியிலே புகும்.
ப்ரபத்தி ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞானத்திலே புகும்.

தன் வர்ணத்திற்கும்
தன் ஆச்ரமத்துக்கும் பொருந்தியதாக
ஒருவன் அநுஷ்டிக்கிற
(நித்ய நைமித்ய கர்மம்) விதிக்கப்பட்ட கர்மம்,
(ஸாதன புத்தியினால் அன்றிக்கே)
தற்செயல் சாதனம் என்ற
புத்தி இன்றிக்கே
பிறர் விஷயத்தில் கருணையாலே இவைகளை அனைவரும் ஒழுக
(பரார்த்தமாக) வேண்டுமென்று அநுஷ்டித்துக் காட்டுகையாலே எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகையாலே
அவன் ப்ரீதியை முன்னிட்டு செய்யும் கைங்கர்யத்திலே சேர்ந்ததாகும்.

தன் ஸ்வரூபஜ்ஞான பூர்வமாக பரஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கைக்கு உறுப்பான
நுண்ணறிவு என்கிற ஸூக்ஷ்மஜ்ஞானம்
ஸாதனம் என்கிற புத்தி கழிந்ததும்,
ஸ்வரூப ப்ரகாசத்திலே
சேர்ந்ததாகும்.

பகவத் ப்ராப்திக்கு
(அதாவது வேறிடத்தில் இல்லாது எம்பெருமானிடமே கொண்டுள்ள பக்தியினாலே) அவனை அடைவதற்கு
ஸாதனமான பக்தியில்
அந்த ஸாதநபுத்தி கழிந்தவாறே போஜநத்துக்குப் பசிபோலே, ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு முன்வரக் கடவதான ருசியிலே உட்புகும்.

எம்பெருமானை உபாயமாகக் கொள்கைக்கு அடையாளமான ப்ரபத்தி,
ஏக பதத்தில் சொல்லுகிறபடியே
ஸாதனம் என்ற நினைவு கழிந்தவாறே
அத்யந்த பரதந்த்ரமான,
வேறு தஞ்சமற்றதாய் (அநந்ய சரணமாய்) இருந்துள்ள ஸ்வரூபத்தினுடைய
யதார்த்த ஜ்ஞானத்திலே ( உண்மை உணர்விலே) சேர்ந்ததாகும்.

No comments:

Post a Comment