கருமங்களைச் செய்வதற்கு முன் குறிப்பிட்ட இடத்தை திருவலகால் துடைத்துத் தூய்மை செய்து கோமியத்தால் மெழுக வேண்டும். அவ்வாறு தூய்மையான இடத்தில் கருமம் செய்யத் துவங்கினால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். இல்லாவிடில் அவ்விடத்தை அசுரரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும் கருமங்களைத் தடுத்தி நிறுத்தி விடுவதுடன், இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும். எள் மிகவும் தூய்மையான ஒரு தானியம். கருப்பு எள், வெள்ளை எள் எதுவானாலும் தானத்துடன் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள். தர்ப்பைப் புல் ஆகாயத்தினின்று தோன்றியது. அதன் ஒரு முனையில் பிரம்மனும், மற்றொன்றில் சிவனும், நடுவில் விஷ்ணுவும் வாசம் செய்கின்றனர். பிராமணர்க்கும் மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாய்க்கும் நிர்மாலிய தோஷமில்லை.
ஏகாதசி விரதம், துளசி, பகவத் கீதை, பசு, பிராம்மண பக்தி, ஸ்ரீஹரியின் சரணமும் சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும். இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் மெழுகப்பட்ட தலத்தில், சூரைப்புல்லைப் (தருப்பையை) பரப்பி, அதன் மேல் எள்ளை இரைத்து, அதன்மீது சயனித்து தருப்பை, திருத்துழாய் கையிலேந்தி பகவன் நாமாவை வாயாரப் புகழ்ந்த வண்ணம் மரிப்பவன் அயன், அரியாதியர்க்கும் அரிய நிரதிசய இன்பவீடாகிய பரமபதம் அடைவான். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு தனது நல்லுலக வாழ்வைக் கருதி தானங்களைச் செய்துவிட வேண்டும். உப்பு தானம் மிகவும் சிறந்ததாகும். அது விஷ்ணு லோகத்தில் உண்டானது. உப்பு தானம் செய்து மரித்தவன் சொர்க்க லோகத்தை அடைவான்.
தொடரும்...
விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
🌸🌸🌸🌸
#கருடபுராணம் #தண்டனை
&&&&&&&&&&&&
#கிருமிபோஜனம்:
)) =) =))) ========))))
தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.
🌸🌸🌸🌸🌸
👉இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும், ஆடி மாத அமாவாசை தர்ப்பணமும், தை மாத அமாவாசை தர்ப்பணமும் அவசியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டிய சிராத்தம் விட்டுப்போனால் (தீட்டு ஏற்படுவதால்) மஹாளயபட்சம் அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.
👉இந்தப் புனிதமான தர்ப்பணங்களை உத்தராயன, தட்சிணாயன காலங்களில் செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.
👉இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன.
👉இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.
👉ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகாரகனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள்.
👉இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம்.
👉ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற அமாவாசையில், இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம்.
👉கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
🙏🙏🙏
👉ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.🙏
👉நவீன உலகம், விஞ்ஞான யுகம், கணினி யுகம் என்று காலம் வேகமாக மாறிவிட்டது.
👉 'என் வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. தர்ப்பணம் செய்யவே நேரம் இல்லை’ என்று அங்கலாய்க்கிறார்கள் பலர்.
👉மாதத்தில் ஒரே ஒருமுறை வருகிற அமாவாசைக்கே இப்படிச் சொல்கிறார்கள். ஆனால், வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம்.
👉ஆகவே, எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாமல், தட்டிக் கழிக்காமல் முன்னோரை உரிய காலத்தில் வழிபடுவது நமக்கு நன்மை பயக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
🙏🙏🙏
👉மனிதர்கள் தாம் வாழும் காலத்தில், தான தருமங்கள் செய்து வருதல் வேண்டும். நம்மைப் பெற்ற தாய், தகப்பன் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மிகப் பெரிய தர்மம் ஆகும்.
👉இறந்த பின்பு செய்கின்ற தானத்தைவிட, இருக்கும்போது அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல ஆகாரம் கொடுப்பதே மிகப் பெரிய தர்மம் என்கிறது கருடபுராணம்.
👉சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன.
👉அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது.
🌸🌸🌸🌸
👉ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
👉 நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும்.
👉இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள்.
அதைத் தவிர்ப்பது உத்தமம்.
👉ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது.
👉அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு!
👉மனிதர்கள் தாம் வாழும் காலத்தில், தான தருமங்கள் செய்து வருதல் வேண்டும்.
👈நம்மைப் பெற்ற தாய், தகப்பன் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மிகப் பெரிய தர்மம் ஆகும்
👇👇👇👇👇👇👇👇
உடனே ஒரு நொடி நேரத்திற்குள் சீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள்.
🥵ஆவி வடிவுடைய அந்த உயிர் சுடுகாட்டிலே தன் சிதைக்கு பத்து முழ உயரத்தில் நின்று, தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தன் உடலைப் பார்த்து, ‘அந்தோ! ஐயையோ...!’ என்று ஓலமிட்டு அழும்.
🔥“தீயிலோ உடல் எரிந்து வெந்து சாம்பலாகும் போது தன் உறவு பொருள் மீது இருந்த ஆசையானது ஒழியாது.
🌸அவன் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று, அங்கு இருப்பவர்களைப் பார்த்து பசி தாகத்தால் ‘ஆ..ஆ...’ என்று கதறி பதறி நிற்பான்.
“ஜீவனுக்குப் பிண்டத்தலான சரீரம் உண்டாகும்.
புத்திரன் பத்து நாட்கள் போடும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உண்டாகும்.
பன்னிரெண்டாம் நாளில் பிராமணர் மூலமாய் புத்திரனால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, பதின்மூன்றாம் நாளன்று பிண்டவுருவத்தில் பாசத்தால் பிணித்து கட்டிப் பிடித்துக் கொண்டு போகும் போது தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்து 😭😭கதறிக் கொண்டே யம லோகத்தை அடைவான்.
“பிண்ட சரீரம் பெற்ற உயிர், யம கிங்கரர்களால் பாகத்தால் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி இரவுபகலுமாக நடந்து செல்ல வேண்டும்.
அவன் போகும் வழியில் கல், முள், அடர்ந்த காடுகளைக் கண்டு பிண்ட ஜீவன் பசியாலும், தாகத்தாலும் வருந்தித் தவிப்பான்.
🌸🌸🌸🌸🌸🌸
👉விகாரமான மூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான்.
👉 வாழ்நாள் முடிந்த ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து யமலோகத்திற்குச் செல்வார்கள்
👉. ஆவி உருவ உயிர்களை யமபுரித் தலைவன் கால தேவன் முன்னால் நிறுத்துவார்கள்.
👉“அவர் அத்தூதர்களை நோக்கி, “ஏ கிங்கரர்களே! இந்த ஜீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டுவிட்டு பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் நம் சபை முன்பு
👉நிறுத்துங்கள்.”
என்று கட்டளையிடுவான்.
🌸🌸🌸🌸. சிரத்தையுடன் செய்யவேண்டிய காரியம்.
இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம்.
சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும்.
தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது.
இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!
🌸🌸🌸🌸🌸
ஜீவன் செல்லும் பாதையில் பரிதவித்தல்
👉“யமதூதர்களால் பாசக் கையிற்றால் கட்டுண்டும், அவர்களிடம் உதையுண்டும் செல்லும் ஜீவன் தன் மனைவி மக்களோடு வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து,
👉துன்பமடைந்து பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று இளைத்து, ஈன ஸ்வரத்தோடு ‘ஐயகோ!
👉நம்மோடு வாழ்ந்த உற்றார் உறவினர் எங்கே? இந்த யம படர்களிடம் சித்ரவதைப்படும்படி விட்டு விட்டார்களே!
👉நான் சேர்த்த பொருள்கள் எங்கே? ஊரையடித்து உலையில் போட்டோமே, உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி நயமாக வஞ்சித்து வாழ்ந்தோமே!’
😭என்று அலறித் துடிப்பான்.
“கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார்.
👉பிறகு அந்த சேதனன் சிறிது தூரம் அனாதையாக காற்றின் வழியிலும்,
👉புலிகள் நிறைந்த வழியிலும் இழுத்துச் சென்று ஓரிடத்தில் தங்கி,
👉இறந்த இருபத்தெட்டாம் நாளில் பூமியில் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து,
👉முப்பதாம் நாளன்று யாமியம் என்று நகரத்தைச் சேர்வான்.
👉“அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும்.
👉 புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன.
👉 பிறகு அவ்யாமியம் என்ற நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து,
👉இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி, இரவும் பகலும் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று வழிநடக்கும் வேதனையோடு ஓவென்று அழுது தூதர்கள் செய்யும் கொடுமையால் வருத்தித் துன்புறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று,
👉 வழியிலே பொறுக்க முடியாத குளிரினால் மிகவும் வருந்துவான்.
👉“பிறகு குருரபுரம் என்ற பட்டணத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டத்தையுண்டு,
👉அப்பால் நடந்து கிரௌஞ்சம் என்ற ஊரையடைந்து,
👉அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு,
👉அங்கு வாழ்ந்ததை நினைத்து வாய்விட்டு புலம்புவான்.😭
🌸🌸🌸🌸🌸
🌺🌺நாயகன் வரவுதனை
🌺🌺நாடி தேடித் தினம்
🌺🌺நயனங்கள் வேர்க்கின்ற
🌺🌺நங்கையர் போல்
🌺🌺நாளும் பொழுதும்
🌺🌺நர்த்தனம் புரியு மவன்
🌺🌺நளினங்கள் நினைந் துருகி
🌺🌺நாட்கள் கரைந்திட
🌺🌺நாளும் காக்கும் நரன்
🌺🌺நாமம் உரைத்து அன்று
🌺🌺நரற்றிய அவன் குழலிசையில்
🌺🌺நனைந்து நினைந்து மயங்கிட
🌺🌺நாடி நரம்புகள் புடைத்து
🌺🌺நடுங்கி தவித்திட
🌺🌺நானும் தேடி தேய்கின்றேன்
🌺🌺நந்தன் மகனை
கிருஷ்ணா நீ எங்கே
உனை தேடி தேடி
உயிரே உருகிடும்
போது நீ
உயிரினுள் எங்கே
ஒளிந்து கொண்டாய்
கிருஷ்ணா
🌸🌸🌸🌸🌸
#கருடர்:-
(மரணபயத்தை போக்கிட)
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பஷாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
ஸ்வர்ண பஷாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்.
கருட புராணம்
வாழ்க வளமுடன்.
Monday, 24 May 2021
எள்,தருப்பை ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment