Labels

Monday, 24 May 2021

தானச் சிறப்பும், பலவகை தானங்களும் உயிர் பிரிதல்


உயிரானது மனித உடலை விட்டு நீங்கும் போது கண், நாசி (அ) உரோமக் கால்கள் வழியே நீங்குகிறது. ஞானிகளுக்குக் கபாலம் வெடித்து நீங்கும். பாவிகளுக்கு அபான வழியாக நீங்கும்.

மறுபிறவி:

காமக் குரோதர்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் உயிர் நீங்கும் போது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவி அடைகிறான். மாயையோடு கூடிய தேகம் எல்லாப் பிராணிகளுக்கும் உரியதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சம்ஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்.

1. அனைத்துத் தானங்களிலும் சிறந்தது பருத்தி தானம். அதுவே மகாதானம் ஆகும். பூணூலுக்கும், மானங்காக்கும் ஆடைக்கும் பருத்தியே பயனுடையது. ஆதலால் அதுவே சிறப்புடைத்து. மேலும் பருத்தி தானம் செய்தால், வாழ்நாள் முடியும்போது சிவலோக வாசம் பிராப்தியாகும். மேலும், இத்தானத்தால் மாமுனிவர்களும், பிரம்ம, ருத்திர, இந்திராதி தேவர்களும் திருப்தி அடைவர். இத்தானம் செய்தவன் மீண்டும் பிறந்து யாவரும் புகழ நெடுங்காலம் வாழ்ந்து சொர்க்கமடைவான்.

2. திலதானம், கோதானம், புவி தானம், சொர்ணதானம், தானிய தானம், ஆகியவை பாபங்கள் அனைத்தையும் விலக்கிவிடும். இவற்றை உத்தம பிராமணர்களுக்கே தானமாக அளிக்க வேண்டும்.

(தானங்கள் செய்வதற்குச் சிறந்த காலம் ஜீவன் மரிக்கும் காலமே. கிரகண புண்ணிய காலத்திலும் கொடுக்கலாம்)

3. ஒருவன் மரிக்கும்போது திலம், இரும்பு, லவணம், பருத்தி, தானியம், பொன், பூமி, பசு ஆகியவற்றைத் தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும். எள், இரும்பு தானத்தால் யமன் மகிழ்ச்சி அடைவான். லவண தானம் யமபயம் நீக்கும். தானிய தானம் கூற்றுவன். அவன் தூதர்களுக்கு மகிழ்ச்சி தரும். சொர்ண தானம், கோதானம் பாவத்தை அழிக்கும். மரணமடைபவன் பகவானைத் தியானித்து, அவன் நாமம் உச்சரித்தால் அவன் நிரதிசய வீடாகிய வைகுந்தம் அடைவான்.

யமன் ஆயுதங்களாகிய கூடாரம், முசலம், சூரிகை, தண்டம் யாவும் இரும்பால் ஆனவையே. எனவே இரும்புதானம் யமனை மகிழ்விக்கும். அந்தக் கிரகத்தில் யமதூதர்கள் கால் வைக்க அஞ்சுவர். சர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஜம்பூதங்கள், தானப் பொருள்கள், இந்திராதி தேவர்கள் யாவும் பகவான் விஷ்ணுவே. கொடுப்பவனும், எடுப்பவனும் அந்த பகவானே. ஒருவன் புத்தியைப் பாவபுண்ணியங்களில் நாடச் செய்வதும் அந்த விஷ்ணுவே.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
🌸🌸🌸🌸🌸🌸
கருட கமன தவ, சரண கமல மிஹ, மனஸி லஸது மம நித்யம் |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

ஜலஜ நயன விதி, நமுசி ஹரண முக, விபூத வினுத பத பத்ம |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

புஜக ஷயன பவ, மதன ஜனக மம, ஜனன மரண பய ஹாரி |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

ஷங்க சக்ர தர, துஷ்ட தைத்ய ஹர, ஸர்வ லோக சரண |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

அகணித குண கண, அஷரண ஷரணத, விதலித சுரரிபு ஜால |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

பக்த வர்ய்ய மிஹ, பூரி கருணயா, பாஹி பாரதி தீர்த்தம் |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||
🌸🌸🌸🌸
கருடபுராணம்// தண்டனை அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது.

வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

🌸🌸🌸🌸🌸
நீ மற்றவர்களுக்கு  தானம் தர்மம் செய்கிறாய் உனக்காக உதவி செய்ய
யாருமில்லை என்று வருந்தாதே மனமே யாருடைய உதவியும் இல்லாமல் உன்னால் வாழ முடியும் முன்னேற்றம் அடைய முடியும்...
🦚🦚

தானம் பலவகை..
விதை தானம்,
அசுவ தானம்,
கன்னிகா தானம்,
அன்ன தானம்,
சொர்ண தானம்,
கோ தானம்,
பூ தானம்,
ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் முக்கியமானது,
உலகில் எல்லா தானத்தையும் விட கண் தானம் மிக சிறந்தது.காரணம் நம்மால் பார்வை இழந்த ஒருவர் பார்வை அடைகிறார்.அவர்க்கு கிடைத்த கண்ணால் உலகை பார்க்கும் பொழுது அவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி மிக மிக  அதிகம்.  இந்த வாழ்வின் வாழ்ந்த பயனும் நமக்கும்  கிடைக்கிறது.
இவற்றையெல்லாம் விட சிறந்தது....
.. கண் தானம்.....
🌸🌸🌸🌸  

மனிதன் ஏழு பிறவி எடுக்கிறான் என்று பலரும் கூறினார்கள் அது என்ன என காண்போம்
🌸🌸🌸🌸
அதில் இறைவன் மனிதனாக பிறப்பது ஒன்று மனிதன் மீண்டும் மனிதனாக பிறப்பது இரண்டு .  

மிருகங்கள் மறுபிறவி மனிதனாய் பிறப்பது மூன்று.  

பறவைகள் மறுபிறவி மனிதனாய் பிறப்பது நான்கு.   

நீர்வாழ் பூச்சிகள் மறுபிறவி மனிதனாய் பிறப்பது ஐந்து.

 ஊர்வன மறுபிறவி மனிதனாய் பிறப்பது ஆறு

.தாவரங்கள் மறுபிறவி மனிதனாய் பிறப்பது ஏழு .

இதுவே மனிதனின் ஏழுபிறவியாகும் .

அதில் குணங்கள் மாறுபட அதுவே காரணம் என்று கூறுகிறார் .

தேவர்கள் மனிதராய் பிறந்தால் தானம் செய்வார்கள் நன்மைகள் உரைப்பார் கோவில் மடம் கட்டுவர் தவம் செய்வர் லிங்கபூஜை யோகம் யாகம் செய்வர் எனவுரைக்கிறார் .

மனிதன் மனிதனாகவே பிறந்தால் தியானம் செய்வார் பெரியோரை போற்றி வாழ்வர் அன்னதானம் செய்வார்கள் எனவுரைக்கிறார்

 மிருகம் மனிதராய் பிறந்தால் ஊர்தனில் சண்டை செய்வான் தரமற்ற வார்த்தைகள் பேசுவான் தானதருமமஎதுவும் எதுவும் செய்யமாட்டான் முன்பின் பாராது நடப்பான் எனவுரைக்கிறார்

 பட்சிகள் மனிதராய் பிறந்தால் அன்னம்கேட்டாலும் இல்லை எனகூறி மனம்நோகபேசுவான் வெறும் பேச்சு வீம்பு செய்துஊர்திரிவான் நல் விசயம் காதில் கேட்கமாட்டான் சூடு சுரணை இல்லான் எனவுரைக்கிறார்  ..

நீர் வாழ்வினம் மனிதராய் பிறந்தால் ஊர்தோறும் சாதி சொல்லி சண்டை செய்து கொலை களவு செய்வான் பலவகை சதி செய்து பெரியோரை பழி சொல்வான் நல்வாழ்வை கெடுப்பான் எனவுரைக்கிறார்

 ஊர்வன மனிதராய் பிறந்தால் புத்தி கெட்டுபரிதவிப்பர் நன்மை யறியான் தீமையறியான் நற்சொல் கேளாதுபோவான் எனவுரைக்கிறார்  

தாவரம் மனிதராய் பிறந்தால் தவத்தை கெடுத்து பேய்போல திரிந்தலைவார்  நீதி நெறி காணாதிருப்பான் காடே கதியென மரமறுப்பான் மிருகங்களை கொன்றுதின்பான் எனவுரைக்கிறார்.  

ஏழுவகை பிறவி பலன்களையும் அகத்தியர் பெருமான் உரைக்கிறார்   
🌸🌸🌸🌸🌸

6 வகை தானங்கள்
தானம் செய்யும் போது உங்களை அறியாமல் ஒரு கர்வம் ஒட்டிக்கொள்ளும். எப்பாடுபட்டாவது அதை துடைத்து எறியுங்கள். நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு பின்னணி இருக்கும். நீங்கள் ஒரு சிறு கருவி மட்டுமே. ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் என்ற விவரம் வருமாறு:-

ஆடைகள் : ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நல்லது. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.

தேன் : புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

நெய் : பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6, 8, 12-ம் அதிபதியின் திசை) நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கல கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகலவிதமான நோய்களும் தீரும்.

தீபம் : இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழைகளுக்கும், கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

அரிசி : பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழைகளுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

கம்பளி - பருத்தி : வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.
🌸🌸🌸🌸🌸
எந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்!!!

மேஷம்:

 மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும்.
சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.

பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

ரிஷபம்:

 ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும்.

மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்:

 மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள்.

எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.

கடகம்:

 கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும்.

மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

சிம்மம்:

 சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக் கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.

கன்னி:

 கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்கலாம். இது உங்களை முன்னேற்றும்.

துலாம்:

 துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சகம்:

 விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம்.

மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு:

 தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.

வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.

மகரம்:

 மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.

மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்:

 கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும்.

இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.

மீனம்:

 மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது.

ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்🌸🌸🌸🌸

(1)  
வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல  கோளாறுகள்
வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம்
உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும்.  இதன் சக்தியை மூன்றே நாட்களில்
உணரலாம்.

(2)  
நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால்
தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க
வீண் விரயம் கட்டுப்படும்.

(3)  
மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு
போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு
அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில்
சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது.

(4)  
காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில்
ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.

(5)  
தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள்
தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம்.
மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.

அமானுஷ்ய பரிகாரங்கள்

(1)  வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது
(2)     காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம்,
ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்

(3)        இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்

(4)         வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து  கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்

(5)    காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்

(6)    சமையலறையும், படுக்கையறையும் அருகருகே இருக்கும் படி அமைத்து
கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.

(7)    துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி  கொத்தை தொங்க விட வேண்டும்.
 

No comments:

Post a Comment