ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும்
கோமதி சக்கரத்தால் பலன்பெரும் விதம்!
கோமதி சக்கரத்தை சாதாரணமாக கையில் வைத்திருந்தாலே நாம் கோரும் பலன் விரைவில் கிடைக்கும்,
வெளியில் செல்லும் போது, போகும் காரியம் வெற்றி பெற இரட்டை படையில்(2.4.6…) கோமதி சக்கரத்தை உடன் எடுத்து சென்றால் நல்லது நடக்கும்.
வீட்டின் பணப்பெட்டி, பீரோ, கடையின் கல்லா பெட்டியில் 7 கோமதி சக்கரத்தை வைத்து செவ்வாய் வெள்ளி தீப தூபம் காண்பித்து வர செல்வம் பெருகும்.
வியாபாரத்திற்கு 11 சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும்.
வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது தென் கிழக்கு மூலையில் புதைத்து வைக்கவோ செய்யின் வாஸ்து தோஷம் விலகும்.
வீட்டின் வாயிலில் 21 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள், அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.
அரிசி பாத்திரத்தில் 21 கோமதி சக்கரங்களை மஞ்சள் அல்லது சிகப்பு துணியில் கட்டி போட்டு வைக்க அன்னலட்சுமி வீட்டில் எப்போதும் வாசம் செய்வாள்.
எதிரிகளின் தொல்லைகள் நீங்க, துஷ்ட சக்திகள் விலக 51 கோமதி சக்கரத்தை மஞ்சள் துணியில் கட்டி தலையை வலது புறம் முறையும், இடது புறம் முறையும் சுற்றி ஆற்றில் விட்டு விட வேண்டும்.
வீட்டில் பூஜிக்கும் பொழுது கோமதி சக்கரம், வலம்புரி சங்கு, குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.
ஜாதகத்தில் சர்ப்ப அல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது. கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
No comments:
Post a Comment