Labels

Tuesday, 21 May 2019

ராஜ யோகம் தரும் ராகு காயத்ரி மந்திரம்


ஜோதிட சாஸ்திர படி ராகு கேது ஆகிய இரு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று கூறப்படுகிறது. ஒருவர் தன்னுடைய முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு இந்த இரு கிரகங்களும் ஒருவரது ஜாதகத்தில் அமர்கின்றன. ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் பற்பல சிக்கல்கள் ஏற்படும். அதே போல ஒருவரது ஜாதகத்தில் ராகு சிறப்பான இடத்தில் அமைந்தால் ராஜ வாழ்க்கை வாழலாம். இதனாலேயே ராகுவை போல் கொடுப்பார் இல்லை என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர்கள். ராகுவின் பலம் பெற, ராகு தோஷம் நீங்கள் கீழே உள்ள ராகு காயத்ரி மந்திரம் அதை ஜபித்தால் போதும்

ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்

மந்திரத்தின் பொருள்:
நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.

பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். விரதம் இருக்க இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வரலாம்.

No comments:

Post a Comment