Labels

Wednesday, 19 February 2020

மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?


சனாதன தர்மம் சாஸ்திரம்.

ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று  நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிது. 10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து  சாஸ்திரம் கூறுகிறது. 11வது 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது. 13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும் பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன் மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும். இவ்வாறு  12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். இவ்வாறு  ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது. உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு ஜீவன் பாவம்  செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது. அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.
👌👌👌👍🙏👍👌👌👌

எளிய முறையில் சரணாகதி விளக்கம்....🔑🗝📩

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை

மாட்டுக்கு
உயிர், அறிவு
இரண்டும் உண்டு

ஆனால்.....

வண்டிக்காரன்

உயிரில்லாத
வண்டியை....

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..

எந்த இடம் செல்ல
வேண்டும்...

என்பதை தீர்மானித்து,

வண்டியை
செலுத்துவான்.

எவ்வளவு தூரம்...

எவ்வளவு நேரம்...

எவ்வளவு பாரம்...

அனைத்தையும்

தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!

அறிவிருந்தும்.....

சுமப்பது தானாக இருந்தாலும்

மாட்டால்
ஒன்றும் செய்ய
இயலாது...

அதுபோல....

உடம்பு என்ற
ஜட வண்டியை

ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி

இறைவன் என்ற வண்டிக்காரன்

 ஓட்டுகிறான்....

அவனே தீர்மானிப்பவன்

அவன் இயக்குவான்..

மனிதன் இயங்குகிறான்

👉 *எவ்வளவு காலம்..

👉எவ்வளவு நேரம்..

👉எவ்வளவு பாரம்..

தீர்மானிப்பது  இறைவனே

இதுதான்

நமக்காக
இறைவன்
போட்டிருக்கும்
 டிசைன்..!

இதுதான்

இறைவன் நமக்கு
தந்திருக்கும்
அசைன்மென்ட்..!

இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..

இதை
உணராதவனுக்கு
அமைதி இல்லை.

இருக்கும் காலங்களில்
இனியது செய்வோமே!.

ஸ்ரீ விக்ன விநாச கார்ய சித்தி மந்திரம்-


போகர் பெருமான் அருளிய தடைகளை நீக்கும் அபூர்வ கணபதி மந்திரம். இன்றைய கார்ய சித்தி மந்திரமாக...

அரி ஓம் கணபதியே வா வா.... வாக்குள்ள கணபதியே வா வா... வடிவுள்ள கணபதியே வா வா...

சர்வ புத்தியும் , சர்வ சக்தியும் , சர்வ சித்தியும்....
உனது வசம் ஆனால் போல் எனது வசம் ஆக சிவா....

ஐயும் கிலியும் சௌவும் , சௌவும் கிலியும் ஐயும் ...
விக்ன விநாயக ஸ்வாஹா...

இந்த மந்திரம் போகர்12,000 நூலில் போகர் பெருமான் அருளியது. வாழ்க்கையில் இருக்கின்ற எப்பேர்ப்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து , பக்தியுடன் ஜெபிப்பவர்களுக்கு அருளையும் பொருளையும் அள்ளி வழங்கும் மந்திரம் இது.

அன்பர்கள் அவசியம் பாராயணம் செய்து பலன் பெற வேண்டிய அபூர்வ மந்திரம் இது. பிரயோகித்து பலன் அடையலாம்

ஓம் ஜெய் குருவே துணை

கிரகப்பிரவேசம் செய்யும் முறை:


வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

 இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும்.

அது எப்படி செய்வது முறை என்று அறிவோம்.

கிரகப்பிரவேசம் செய்யும் முறை:............... பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும். அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம்.

தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம். கிரஹ வழிபாட்டுக்கு இடையூறு நேராத வண்ணம் செய்து கொள்ளலாம்.

கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வை ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.

நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும்.

வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிபடம், அரிசி, உப்பு, பருப்பு, நிறை குடநீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் (5 வகை பழங்கள்) மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு (பெண்கள் சொந்த கதை பேசாமல்) தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டும்.

கோபூஜை:........... பெண்கள் மங்களப் பொருட்களோடு வீட்டு வாசலில் நிற்கும் போது பசுவை கன்றுடன் வீட்டைப் பார்க்கும்படி நிற்க வைத்து அதற்கு வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.

கன்றுக்கும் தரவேண்டும். இந்த நேரத்தில் பசுவை மாடு என்று பெண்கள் சொல்லவே கூடாது.

 பிறகு தூபதீப ஆராதனை செய்து வீட்டில் வசிக்கப்போகும் பெண் கையில் காமாட்சி தீபத்துடன் கணவனோடு பசுவை உள்ளே அழைக்க வேண்டும். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். இப்போது முக்கிய தெய்வ வழிபாட்டுடன் கிரகப்பிரவேச பூஜைகள் நடத்தப்பட வேண்டும். கணவன்-மனைவி மாலை அணிந்து அமர்க.

முதலில் விநாயகர் பூஜை:-..............

 வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப்பான்மை தரு செய்ய தமிழ்ப்பார்மிசை விளங்க ஞான மத ஐந்துகர மூன்று விழி நால்வா யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்- விநாயகரை வணங்கிய உடன் விச்சின்ன அக்னி சந்தானம்-என்ற விதிப்படி ஐந்து காசுகளைத் தாம்பூலத்தில் கணவன் வைத்துக்கொண்டு மனைவி அர்க்கியம் (நீர் விட) விட வந்திருக்கும் வேத பண்டிதரிடம் தரவேண்டும். இது எதற்காக எனில் புதிதாகக் கட்டிய வீட்டில் முன்பு செய்யாத அக்னி காரியங்கள் விட்டிருந்தால் புதுப்பித்தல்.

கலச பூஜை:-............ மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும் பக்கவாட்டில் வைக்கலாம் மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும். அதற்கு துணி, மலர் போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும்.

கிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம் அணிந்து கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இடவேண்டும்.

யாக வழிபாடு:- ..........இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து பூர்வாங்க பூஜை செய்வார்.நெய், நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்திரங்களால் கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும்.

ஓம் கம் கணபதியே நம.
சுவாகா ஓம் வக்ர துண்டாய
ஹீம் நமோ ஏரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய
சௌபாக்யம் தேகிமே சுவாகா.

என்றும் நவக்கிரகங்களை அவர்களுக்குரிய மந்திரங்களால்

ஓம் ஆதித்யாய சுவாகா,
ஓம் சோபாய நம சுவாகா
ஓம் மங்களாய சுவாகா
ஓம் புதாய சுவாகா.
ஓம் ப்ருகஸ் பதியே சுவாகா,
ஓம் சுக்ராய சுவாகா,
ஓம் சனீஸ்வராய சுவாகா,
ஓம் ராகுவே சுவாகா,
ஓம் கேதுவே சுவாகா

- என்று கூறி யாகப் பொருளை அக்னியில் இடலாம்.

 லட்சுமி ஹோமம்-வெட்டிவேர், வில்வப்பழம், மஞ்சள், தாம்பூலம் இவற்றாலும் அஷ்ட திரவியக் கலவையாலும் ஓமம் செய்தல் வேண்டும்,

ஓம் ஐம்ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை கமல தாரிண்யை சிம்ம வாகின்யை பவாயை சுவாகா- என்று சௌபாக்கிய லட்சுமியையும், ஓம் நம: கமலவாசின்யை என்று ஸ்வர்ண லட்சுமியையும், ஓம் உனபதுமாம் கீர்திச்ச மணினா சக என்று குபேர லட்சுமியையும் வழிபட்டு அக்னி பூஜை நடத்தி வாஸ்து பகவானையும் அவரது காயத்ரியால் யக்ஞ முறை செய்து இறுதியாக பூரண ஆகுதி என்ற யாக முடிவுறல் நிகழ்வை நடத்தி தூபதீப நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வாசற் படிக்கு நிலை பூஜை செய்து ஆரத்தி செய்தல் வேண்டும்.

சில குடும்பங்களில் நிலைப்படி பூஜையை பசு உள்ளே வருமுன் செய்வார்கள். விதிப்படி செய்வதானால் அக்னியில் யாகப் பொருள் இட்டு மகாலட்சுமியை அழைத்த பிறகே படி பூஜை உத்தமம் ஆகிறது.

நிலைவாசல் தேவதைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கலாம். அடுப்படியில் பால் காய்ச்சுமிடத்தில் அன்னபூரணியை பூஜை செய்க.

பூரண ஆகுதி முடிந்ததும் அனைவருக்கும் ஆரத்தி பிரசாதம் கொடுக்கலாம். அஷ்டதிரவியம் என்ற எட்டுவகை பிரசாதம் கொடுத்த பின் மூன்று கலசங்களில் உள்ள நீரை முதலில் வைக்கப்பட்ட வருண கும்ப கலசநீருடன் சிறிது கலந்து வீடு முழுவதும் ஓம் கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே அஸ்மின் சின்னிதிம் குரு. என்று கூறி தெளிக்க வேண்டும்.

பால் காய்ச்சுதல்:-............ ஒன்பது செங்கற்கள் அல்லது4-ஐ வைத்து பூ சந்தனம் குங்குமம் வைத்து புதிய பால் பாத்திரத்தில் பொட்டு வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கவும். கிரகப்பிரவேசம் நடத்தப்படும் இடத்தில் சாமி படத்தின் முன்பாக காய்ச்சிய பாலை வைத்து கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி, சரஸ்வதியை நினைத்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.

கலசதாரை வார்த்தல்:- மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும் இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள். பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும்.

அவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம் செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து கொடுக்கலாம்.

தொடர்ந்து வாழ்த்துரை வழங்குவதும் மாலை அணிந்து கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு மங்கள ஆரத்தியை எடுக்கச் சொல்வது வழக்கம்.

 அடுத்ததாக வாஸ்து தோஷங்கள் விலக, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் தற்கால வழக்கப்படி சுற்றி (திஷ்டி விலக) விட்டு வாசலில் உடைக்க வேண்டும்.

பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் வீட்டிற்கு சம்மந்தியாக வந்திருப்பவர்கள் சீர் கொண்டு வந்திருக்கையில் அவர்களுக்கு தாம்பூலம், பதில் மரியாதை செய்வதும், சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள், குங்குமம் கொடுத்து வாழ்த்துப் பெறவும் அவசியமாக மறக்காமல் செய்தல் வேண்டும்.

கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் அந்த நாள் இரவு மனைவி விளக்கு ஏற்றி வைத்து துளசி துதி, மகாலட்சுமி மந்திரங்களைப் படித்தல் வேண்டும்.

 வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை உங்கள் விருப்ப தெய்வ மந்திரங்களைக் கூறி யக்ஞ பூஜை செய்யுங்கள். பித்ருக்கள் படத்தைத் தனி அறையில் வைத்து ஆராதிக்கலாம்.
சாமி படங்களோடு சேர்த்து வைத்தால் தெய்வ சாந்நித்ய சக்தி அகன்று புது வீட்டில் இடர்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

 கிரகப்பிரவேச காலத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, குபேரன், பெருமாள், லட்சுமி படங்களை வைத்து வழிபடலாம்.

 விருப்பப்படி எல்லாம் யந்திரங்களை வைத்து வழிபடுதல் வேண்டாம்.

கிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும். கல்வி விருத்திக்கு-ஹயக்ரீவ ஹோமம் சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை. வீடு கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கல மந்திர ஹோமம். அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம்.

குழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம். வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமன மந்திர ஹோமம் என்று இலகு முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க காணலாம்

அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?

அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

`
''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'

இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

சரபேஸ்வரரை வழிப்பட்டால் கிடைக்கும் பலன்கள்...



🔯சரபேஸ்வரர் 108 போற்றிகள்...

ஓம் விண்ணவா போற்றி
ஓம் விளங்கு உயர் வீரா போற்றி
ஓம் திண்ணவா போற்றி
ஓம் அணிமாமலர் பறவை போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் ருத்ர அக்னியே போற்றி
ஓம் மந்திரத் துதி தேவா போற்றி
ஓம் மாமலர் நாகலிங்க சக்தியே போற்றி
ஓம் சர்வ வியாபியே போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் காலகாலனை நடுங்கச் செய்தவனே போற்றி

ஓம் காலமெல்லாம் கருத்தில் நிறைந்தவனே போற்றி
ஓம் பிறவி பயம் அறுத்தவனே போற்றி
ஓம் நிரந்தரமானவனே போற்றி
ஓம் நியாயத் தீர்ப்புவழங்குபவனே போற்றி
ஓம் வீரபத்திரனே போற்றி
ஓம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி
ஓம் மகாதேவா போற்றி
ஓம் நரசிம்மரை அடக்கிய அழகா போற்றி
ஓம் நான்மறை ஆனாய் போற்றி
ஓம் சூலினி உடனுறை தேவா போற்றி

ஓம் அதர்வண காளியை அடைந்தவா போற்றி
ஓம் மந்திர தந்திரங்களை ஆள்பவனே போற்றி
ஓம் கம்பத்தில் சிகண்டி சித்தரால் நிற்பவனே போற்றி
ஓம் கோபக் கனலாய் விடுபவனே போற்றி
ஓம் கூரிய நகங்களைக் கொண்டவனே போற்றி
ஓம் லிங்க பதியே போற்றி
ஓம் இருபத்தியோரு முக ருத்திராட்சம் அணிந்தவனே போற்றி
ஓம் சத்திய துணையே போற்றி
ஓம் சாந்தி அருள்பவனே போற்றி
ஓம் சத்திய சாட்சியே போற்றி

ஓம் சத்திய உருவே போற்றி
ஓம் ஆக்கல், காத்தல், அழித்தல் தலைவா போற்றி
ஓம் புவனம் பல்லாயிரம் கோடியும் படைத்தாய் போற்றி
ஓம் அனைத்தையும் ஆட்டிப் படைப்பாய் போற்றி
ஓம் அறம் பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி
ஓம் அம்ருத அரசே போற்றி
ஓம் சித்தர்கள் சிந்தையில் புகுந்தவனே போற்றி
ஓம் ருத்திர மூர்த்தியே போற்றி
ஓம் காலகாலமாய் இருப்பவனே போற்றி
ஓம் சிந்தாமணியின் ஜீவ சிவனே போற்றி

ஓம் சித்தாந்த பக்திசித்தனே போற்றி
ஓம் பரமாத்மனே போற்றி
ஓம் பரப்பிரம்மனே போற்றி
ஓம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி
ஓம் கைலாசவாசா போற்றி
ஓம் திருபுவனேசா போற்றி
ஓம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் நம்பினோர்க்கு நலம் அருள்வாய் போற்றி
ஓம் ஏவல் தீர்ப்பாய் போற்றி
ஓம் பில்லி சூன்யம் அழிப்பாய் போற்றி

ஓம் எதிரிகள் கொடுமை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்ணியவாறு எமக்கருள்வாய் போற்றி
ஓம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி
ஓம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய் போற்றி
ஓம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி
ஓம் திருவருள் தருவாய் சரபேஸ்வரா போற்றி
ஓம் வழித்துணையாய் வருவாய் போற்றி
ஓம் வலம் சுழித்து எட்டு திசையும் காப்பாய் போற்றி
ஓம் நஞ்சை புஞ்சை நலமுடன் காப்பாய் போற்றி
ஓம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி

ஓம் நமசிவாய திருவே போற்றி
ஓம் சிவ சூரியா போற்றி
ஓம் சிவச் சுடரே போற்றி
ஓம் அட்சர காரணனே போற்றி
ஓம் ஆதி சிவனே போற்றி
ஓம் கால பைரவரே போற்றி
ஓம் திகம்பரா போற்றி
ஓம் ஆனந்தா போற்றி
ஓம் கால காலனே போற்றி
ஓம் காற்றெனக் கடுகி உதவும் தேவா போற்றி

ஓம் கர்ப்பப் பையைக் காப்பவனே போற்றி
ஓம் காத்து கருப்புகளை அழிப்பவனே போற்றி
ஓம் ஓம் எரி ஓம்பலின் அவிசை ஏற்பவனே போற்றி
ஓம் கல்லாலின் கீழ் அமர்ந்த தேவா போற்றி
ஓம் வல்லார்கள் நால்வரும் தோத்தரித்த தேவா போற்றி
ஓம் எல்லாமாய் அல்லதுமாய் இருந்த சரபா போற்றி
ஓம் முக்திக்கு வித்தாகும் மூல குருவே போற்றி
ஓம் தெவிட்டாத சின்மயச் சுடரே போற்றி
ஓம் விரும்பி நல்விளக்கு தீபத்தில் வருபவனே போற்றி
ஓம் அமரர் படையுடைத் தலைவா போற்றி

ஓம் நீலக் கையில் மான் தூக்கி நின்றோனே போற்றி
ஓம் சிவந்த மழுவும் தூக்கிச் சிறந்தோனே போற்றி
ஓம் எங்கிருந்து அழைத்தாலும் வருவோனே போற்றி
ஓம் சூலினித் தாயின் சுகத்தோனே போற்றி
ஓம் ப்ரத்யங்கிரா தேவியின் பரப்ரும்மமே போற்றி
ஓம் செம்பொன் அம்பலத்திலே ஆடும் அரசே போற்றி
ஓம் நகமே ஆயுதமாய்க் கொண்ட நமசிவாயமே போற்றி
ஓம் பெருமாளுக்கும் நான்முகனுக்கும் நலம் தரும் தெய்வமே போற்றி
ஓம் உள்ளுவார் உள்ளத்தில் உறைவாய் போற்றி
ஓம் சிந்தனைக்கினிய செல்வனே போற்றி

ஓம் திருவுக்கும் திருவான சிவனே போற்றி
ஓம் யாவையும் யாவரும் ஆனாய் போற்றி
ஓம் வேதமெல்லாம் தொழும் தெய்வமே போற்றி
ஓம் வாழி வாழி சாலுவேசா வாழி போற்றி
ஓம் நோய்கள் தீர்க்கும் நெடியாய் போற்றி
ஓம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி
ஓம் பிரத்தியங்கிரா ப்ராணநாதா போற்றி
ஓம் சூலினியின் சூட்சம தேவா போற்றி
ஓம் கவஷ ஜ<லூஷா குருதேவா போற்றி
ஓம் இதூஷா மாதா புத்ர சேவித தேவா போற்றி

ஓம் மூவர்க்கும் முந்திய முதல்வா போற்றி
ஓம் முக்தர்கள் ஜீவ ஒளியே போற்றி
ஓம் முழுவதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி
ஓம் அடியார்க்கு அருளும் அடியாராய் இருக்கும் ஈசனே போற்றி
ஓம் அங்கமெல்லாம் அருட்ஜோதி அருள் கூட்டும் சுயஞ்ஜோதியே போற்றி
ஓம் வெள்ளிக்கு மரணமிலா வழி தந்த விடிவு ஜோதியே (வெள்ளி= சுக்கிரன்) போற்றி
ஓம் குருவுக்கு உரு தந்த உயர் ஜோதியே போற்றி
ஓம் பூரண சரபேசா போற்றி! போற்றி !! போற்றி !!!

சரபேஸ்வரர் 108 போற்றிகள் சம்பூர்ணம்.

ஸ்ரீ சரபேஸ்வரர்
வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.

இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, " தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது " என்ற அரிய வரத்தினை பெற்றான்.

தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான்.

எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி "எங்கெ உன் நாராயணன்'' எனக் கேட்க, பிரகலாதணோ " என் நாராயணன் தூணிலும் இருப்பார்.

துரும்பிலும் இருப்பார் " என்று கூறினான். கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.

அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.

இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்'' என்றும் "சாலுவேஸ்வரன்'' என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.

இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ஸ்ரீ ப்ரத்யங்கிரா, மற்றும் ஸ்ரீ சூலினி. இதில் ஸ்ரீ தேவி பிரத்யங்கிராசரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.

காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.

லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

"நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி'' என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.

இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான்.

 🔯ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது

உண்மையான பாதுகாப்பு கவசம்

1. நம்மில் சிலபேருக்கு வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ இனம் புரியாத அச்சம் ஏற்படும் அந்த நேரத்திலும்.
2.சிலருக்கு பல காரணங்களினால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும் அவர்களும்

3.சிலருக்கு தீய கனவுகளின் காரணமாக இரவில் பெருங்குரலை எழுப்பி அலறுவார்கள் அவர்களும்
4.சில குடும்பங்களில் கணவரின் தீய நடத்தையால் குடும்பமே நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் .
5.பெண்கள் வேலை,படிப்பு காரணமாக அடிக்கடி வெளியில் செல்லும் போது தீயவர் தொல்லைக்கு ஆளாக கூடியவர்களும்.
6.வயதுக்கு வந்த பெண்ணை படிப்பதற்கு கல்லூரிக்கு(ஹாஸ்டல் ) அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழும் தகப்பனாரும்
7.சில மாணவர்கள் தைரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள் அவர்களும்
ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை
தினமும் சொல்லி வரவும் ( தக்க நிவாரணம் கிடைக்கும் .

" உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! "
இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை
நீங்கள் உணரலாம் .பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம்.
அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.
பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?‘ என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும்.

ஆனந்தராமாயணம்


ஸார காண்டம்

முதல் ஸர்க்கம் - 1

எங்கும் முனிவர்களின் "சம்போ மஹாதேவா" என்று ஒலித்துக் கொண்டிருக்கும் கயிலாயம். உமாதேவி மிகுந்த நேசமுடன் சிவபெருமானோடு பேசிக் கொண்டிருந்தார்.

"சங்கரா! தாங்கள் எனக்குப் பல புராணங்களைக் கூறி வருகிறீர். இன்று எனக்கு நான் பக்தியுடன் வணங்கும் ஸ்ரீராமபிரானின் திவ்ய சரித்திரத்தை உம் வாயால் கேட்க ஆசைப்படுகிறேன். இராமரது சரித்திரம் எல்லோரகத்திலும் நேசத்தை உண்டு பண்ணும்; மகிழ்ச்சியைக் கூட்டும்; இராமபிரானின் வரலாற்றைத் திருவாய் மலருங்கள் ருத்திரரே!"

"எனக்குப் பிரியமானவளே! நல்லது கேட்டாய்! எல்லோருக்கும் நல்லதைத் தந்தருளும் இராமச்சந்திர மூர்த்தியின் கீர்த்தியையும் வரலாற்றையும் உனக்குக் கூறுகின்றேன், கேட்பாயாக."

மஹாதேவர் கூறத் தொடங்கினார். ..

பகவான் நாராயணனிடமிருந்து பிரம்மன் தோன்றினார்.
பிரம்மதேவரிடமிருந்து மரீசி தோன்றினார்.
மரிசியின் மகனாகக் கசியப முனிவர் பிறந்தார்.
கசியபருக்கு மகனாக சூரியன் பிறந்தார்.
சூரியதேவனுக்கு மகனாக வைவஸ்வத மனு பிறந்தார்.
வைவஸ்வத மனுவுக்கு மகனாக இக்ஷ்வாகு பிறந்தார்.
இக்ஷ்வாகுவுக்கு மகனாக விருக்ஷி பிறந்தார்.
விருக்ஷிக்கு மகனாக ககுஸ்தர் பிறந்தார்.
கருஸ்தருக்கு மகனாக இந்திரவாகர் பிறந்தார்.
இந்திரவாகருக்கு மகனாக விசுவரந்தியர் பிறந்தார்.
விசுவரந்தியருக்கு மகனாக சந்திரர் பிறந்தார்.
சந்திரருக்கு மகனாக யுவநாஸ்வர் பிறந்தார்.
யுவநாஸ்வருக்கு மகனாக சாபஸ்தர் பிறந்தார்.
சாபஸ்தருக்கு மகனாக பிரகதஸ்வர் பிறந்தார்.
பிரகதஸ்வருக்கு குவலயாஸ்வர் பிறந்தார்.
குவலயாஸ்வருக்கு திடாஸ்வர் பிறந்தார்.
திடாஸ்வருக்கு மகனாக அரியஸ்வர்.
அரியஸ்வருக்கு மகனாக நிகும்பர்.
நிகும்பரின் மகன் மருகநாஸ்வர்.
மருகநாஸ்வரின் மகன்.கிருதாஸ்வர்.
கிருதாஸ்வரின் மகன் சேனசித்.
சேனசித்தின் மகன் யுவநாஸ்வர்.
யுவநாஸ்வரின் மகனாக மாந்தாதா பிறந்தார்.
மாந்தாதாவின் மகன் புருகுத்ஸன்.
புருகுத்ஸனின் மகன் அநரண்ணியர்.
அநரண்ணியரின் மகன் அரியஸ்வர்.
அரியஸ்வரின் மகன் அருணர் .
அருணரின் மகன் திரிபந்தனர்.
திரிபந்தனரின் மகன் திரிசங்கு என்று அழைக்கப்பட்ட சத்தியவிரதர்.
சத்தியவிரதரின் மகன் ஹரிசந்திரன்.
ஹரிசந்திரனின் மகன் லோகிதர்.
லோகிதரின் மகன் ஹரிதர்.
ஹரிதரின் மகன் சம்பர்.
சம்பரின் மகன் சுதேவர்.
சுதேவரின் மகன் விஜயர்.
விஜயரின் மகன் பருகர் .
பருகரின் மகன் விருகர்.
விருகரின் மகன் பாகுகர்.
பாகுகரின் மகன் சகரர்.
சகரரின் மகன் அசமஞ்சர்.
அசமஞ்சரின் மகன் அம்சுமான்.
அம்சுமானின் மகன் திலீபன்.
திலீபனின் மகன் பகீரதன்.
பகீரதனின் மகன் சுரதன்.
சுரதனின் மகன் நாபர்.
நாபரின் மகன் சிந்துத்வீபர்.
சிந்துத்வீபரின் மகன் அயுதாயு.
அயுதாயுவின் மகன் ருதுபர்ணர்.
ருதுபர்ணரின் மகன் கல்மாஷபாதர்.
கல்மாஷபாதரின் மகன் சுதாசர்.
சுதாசரின் மகன் அஸ்மகர்.
அஸ்மகரின் மகன் மூலகர்.
மூலகரின் மகன் தசரதர்.
தசரதரின் மகன் ஜடபிடர் .
ஜடபிடரின் மகன் விஸ்வசகர்.
விஸ்வசகரின் மகன் கட்வாங்கர்.
கட்வாங்கரின் மகன் திலீபன்.
திலீபனின் மகன் ரகு.
ரகுவின் மகன் அஜன்.
அஜனின் மகன் தசரதன்.
தசரதனுக்கு ஸ்ரீமன் நாராயணரான இராமன் மகனாக அவதாரம் செய்தார். ….

சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும்.

18 சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும்.

1 ) அகத்தியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

போகர் மூல மந்திரம்

ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி

திருமூலர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

இடைக்காடர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி

கருவூரார் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி

கோரக்கர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி

குதம்பை சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி

சட்டைமுனி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி

10)  சிவவாக்கியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி

சுந்தரானந்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

கொங்கணர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி

வான்மீகர் மந்திரம்

ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

கமலமுனி மந்திரம்

 ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி

15 ) மச்சமுனி மந்திரம்

ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

பதஞ்சலி மந்திரம்

ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி

இராமத்தேவர் மந்திரம்

ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி

18 ) தன்வந்த்ரி மந்திரம்

ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி:

நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

பரணி:

 நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.

கிருத்திகை:

நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

ரோகிணி:

நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

மிருகசீரிடம்:

நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.

திருவாதிரை :

 நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.

புனர்பூச:

நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

பூசம்:

 நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.

ஆயில்யம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.

மகம்:

நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.

பூரம்:

நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

உத்திரம்:

நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.

அஸ்தம்:

நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

சித்திரை:

நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

சுவாதி:

நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

விசாகம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.

அனுஷம்:

 நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

கேட்டை:

நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

மூலம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

பூராடம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

உத்திராடம்:

நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

திருவோணம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

அவிட்டம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.

சதயம்:

நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

பூராட்டாதி:

நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

உத்திரட்டாதி:

நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

ரேவதி:

நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது,

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள்.

ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்

 சித்தர்கள்  அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.

இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். "வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது உடலையும் பாதிக்கக் கூடியது. வெளியே உணரும் குளிர்ச்சி, நமது உடலிலும் கபமாகத் தோன்றக் கூடியது" என்று தத்துவங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அவர்களுடைய முறைப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நமது உடலை 72,000 ரத்தக் குழாய்களும், 13,000 நரம்புகளும், 10 முக்கிய தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். இந்த அடிப்படையில் 96 வகைத் துடிப்புகளை உணர்ந்து, நாடி மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

சமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள், மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறையையும் எழுதிவைத்தார்கள். அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை. தேகத்தின் சூடு, உடலின் நிறம், நாக்கின் நிறம், குரல், கண்களின் பார்வை, மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு,   உன்னதமான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நாடியை உணரும் முறை

நாடியை உணருவதற்குச் சுட்டுவிரல், கட்டைவிரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்பட்டன. வாயு, பித்தம், சளி ஆகியவை இதன் மூலம் கணிக்கப்பட்டன. கைரேகை பார்ப்பதைப் போலப் பெண்களுக்கு இடது கையும், ஆண்களுக்கு வலது கையும் ஆய்ந்து அறியப்பட்டன. பூதநாடி, குருநாடி, ஆகியவைகளே நுட்பமாகக் கண்டறிய உதவின.  மூளைக்கோளாறு, மனோவியாதி போன்றவற்றைக் கண்டறிய பூதநாடி பயன்பட்டது. சிக்கலானப் பிற வியாதிகளைக் கண்டுபிடிக்க குருநாடி பயன்படுத்தப்பட்டது. இவற்றை உபயோகிக்கத் தன்னலம் இல்லாத பண்பும், குருவின் அருளும், ஆன்மஞானமும், குருவிடம் நீண்டகாலம் சிகிச்சை முறைகளைப் பயிலும் அனுபவமும் தேவை என்பது குறிப்பிடப்பட்டது. உடலைப் பற்றியதானாலும் உள்ளத்தின் மேன்மையைச் சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள் என்ற அபூர்வப் பண்புக்கு இதுவே சான்றாகும்.

சித்த மருத்துவத்தில் ஜோதிடத்தின் பங்கு

 வேத நூல்களின் முக்கியமான அங்கமாகிய ஜோதிடக் கலை,  மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டது. வெவ்வேறு கிரக நிலைகளில், வெவ்வேறு லக்கினங்களுக்கு உரியவர்களுக்கு, உடம்பின் இன்னென்ன பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தத்துவத்தை அவர்கள் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் வைத்தியம் செய்ய உலோகங்களையும், ரத்தினக்கற்களையும் பக்குவம் செய்து உபயோகித்தார்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை 100 ஆண்டுகள் என்றும், அவற்றில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம், 37 ஆண்டுகள் கபம் என்று பிரிக்கப்பட வேண்டியவை என்றும் அவர்கள் கணக்கிட்டார்கள். இதேபோல, ஒரு நாளின் பகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்டன. இப்படி அவர்களுடைய வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது.

 மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு. முனிவர்கள் உணர்ந்து அளித்த

யோகம், பிராணாயாமம் போன்றவற்றின் மூலம் மூலிகைகளைப் பயன்படுத்திக் கட்டுப்பாடாக வாழ்வது, ஆரம்ப நிலையிலேயே உடற்குறைகளைக் கண்டறிந்து அவற்றை அறவே நீக்கும் முறைகளைப் பின்பற்றுவது, கொடிய வியாதிகளின் கடுமையை இயன்றவரையில் குறைப்பது ஆகிய மூன்றுமே அந்த முக்கியமான அம்சங்களாகும்.

சித்த மருத்துவ முறையைக் கற்றுணர்பவர்களுக்கு ரசவாதம், பௌதிகஞானம், வான்கணிதம் ஆகியவைகளும் தெரிந்திருக்க வேண்டும். இந்த முறையை பயிலுபவர்களுக்கு மனப்பக்குவமும், தொண்டு செய்யும் மனப்பாங்கும் இருக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு உறவினர் - நண்பர்களுக்காகவும், இரண்டாவது பங்கு ஏழை எளியவர்களுக்கு தர்ம வைத்தியம் செய்வதற்காகவும், மூன்றாவது பங்கு வியாபார முறையிலும் பயன்படுத்த வேண்டும். டானிக்குகளை உபயோகிக்குமுன் வைத்தியன், தானே அதைச் சாப்பிட்டு உணர்ந்து, பிறகு நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். எந்த வியாதியையும் மூன்றே நாட்களில் குணப்படுத்திவிட வேண்டும்.

சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மூலிகைச் சத்து, உலோகங்களிலிருந்து ஸ்புடம் போட்டுத் தயார் செய்த பஸ்மங்கள், செந்தூரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மருந்துகளை உபயோகிக்கும்போதே, அவை உடலைப் பாதுகாத்து வளப்படுத்தும் டானிக்குகளாகவும் பயன்பட்டன. இன்று குணப்படுத்த முடியாத புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை செய்யலாம் என்றூ சித்தர்கள் கண்டறிந்தார்கள். தேனை மட்டும் கொம்புத்தேன், புற்றுத்தேன், மாப்பொந்துத்தேன், வீட்டுத்தேன், பழையதேன், புதியதேன் என்று 60 வகைகளாக அவர்கள் பிரித்து உபயோகப்படுத்தினார்கள். மருந்துகளுடன் பழைய தேனை உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. பூஜைக்கு உரிய வில்வம், துளசி போன்றவைகளும் சித்தர்களின் மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டன. அதற்கென்றும் சில விதிமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர்.

சித்த மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு

பூஜைக்குப் பயன்படும் மகாவில்வ தளம், துளசிதளம் போன்றவை சிகிச்சைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன. மூலிகைகள் வளரும் மண், அவை பறிக்கப்படும் நேரம், பறிக்கும் முறை எல்லாவற்றுக்குமே விதிகள் இருந்தன. காற்றில் ஏற்படும் அசுத்தங்களை ஹோமங்கள் செய்வதன் மூலம் நீக்கலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்திருந்தார்கள். நாயுருவி (பாதரசம்), எருக்கு ( சூரியன் ), பலாசம் ( சந்திரன் ), வன்னி ( சனி ), அருகம்புல் ( குரு - ராகு ), தர்ப்பை ( கேது ) போன்ற ஹோமத்துக்கு உரிய பொருட்கள், சிக்கலான மருத்துவ முறைகளுக்கும், உரியவை என்பது அவர்கள் கண்டறிந்த தத்துவம் ஆகும்.

உலோகங்கள், ரத்தினங்கள், மிருகங்களின் கொம்புகள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு பக்குவம் செய்து பஸ்மங்கள் தயார் செய்யப்பட்டன. நெருப்பில் உருக்குவது, புடம் வைப்பது, காய்ச்சுவது, வடித்தெடுப்பது ஆகிய முறைகளால் இவைகள்  தயார் செய்ய பயன்பட்டன. பலவகையான நச்சுப் பொருட்களும் மருந்து செய்ய பயன்பட்டன. இந்த அபூர்வ சிகிச்சை முறைகளை அரேபியா, சைனா, துருக்கி, எகிப்து போன்ற வெளிநாடுகள் பலவற்றுக்கும் சித்தர்களும் போகர்களும் பரப்பி இருக்கிறார்கள்.

பூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.

ரசவாதம் பணம் சம்பாதிக்கும் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. உடலின் உறுப்புகளைப் புதுப்பிக்கவும், நீண்ட ஆயுளைக் கொடுக்கவும், மூப்பை நீக்கி மீண்டும் இளமையைத் தரவும் பயன்பட்டன. காயகல்பம் என்ற மருத்துவமுறை இவ்விதம் இளமையை மீட்டுத் தரவல்லது. இரும்பு போன்ற உலோகம் தங்கம் போன்ற உலோகமாக மேன்மையுறச் செய்யும் பக்குவத்தைக் கண்டறிந்து, அவர்கள் மனிதப் பண்புகளையும், மேம்படச் செய்தார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் மந்திர முறைகள், விஷங்களைப் போக்கவும் பயன்பட்டன.

மனித உடலில் பஞ்சபூதங்களின் விகிதாசாரம்

இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.

உடலின் உறுதியையும், உள்ளத்தின் மேன்மையையும் பாதுகாக்க, இச்சைகளை அடக்க வேண்டும் என மெய்ஞ்ஞானம் கூறுகிறது. இதையே சித்த சாஸ்திரமும் உணர்த்துகிறது. பிராணயாமம், யோகாப்பியாசம் ஆகியவற்றின் மூலம் உடலில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்கும் வழிமுறைகளையும் அவர்கள் கண்டறிந்தார்கள். சாவு நேரிடும் வரையில் நரம்பு தளர்ச்சி, நரை, சுருக்கம் விழுதல் ஆகியவை இன்றி வாழும் ரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அப்படிப் பாதுக்காத்த உடலின் ஆரோக்கியத்தை இறைவனை எண்ணித் தியானம் செய்யவும், இறைவன் படைத்த உயிர்களைக் காக்கவுமே பயன்படுத்தினார்கள். உடலையும், உள்ளத்தையும் காக்க உணவுக் கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார்கள். ஆலயங்களை ஒட்டியும், மூலிகைகள் நிறைந்த காடுகளிலுமே, உலக பற்றின்றி உத்தமர்களாக வாழ்ந்தார்கள்.

இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையே சித்தர்களின் மருத்துவ முறையில்தான் அமைந்திருக்கிறது. அவர்களுடைய பாடல்களில் தமிழ் மொழியின் வளம் நிறைந்திருக்கிறது.

நன்றி

மாலை மலர் .

#இங்கேயேஒருஸ்ரீரங்கம் -



சென்னைக்கு மிக அருகிலேயே  ஒரு ஸ்ரீ ரங்கம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?  நான்  நான்கு ஐந்து முறை தரிசித்தும் இன்னும் தாகம் தீரவில்லையே.

திருவள்ளூர் ஜில்லா, பொன்னேரி தாலுக்காவில், தேவதானம் என்று ஒரு அருமையான கிராமம்.   இது  வட ஸ்ரீரங்கம் என பெயர் பெற்றது.  அங்கு எங்கும் பச்சை பசேல் என்று வயல்கள் இருந்தது முதலில் நான் சென்றபோது. அடுத்து அடுத்து சென்றபோது  வயல்கள் நடுவிலே வீட்டு மனைகள் வியாபாரம் பலகைகள் நின்றபோது வயிற்றில் பகீர் என்றது.  ஏனென்றால் இங்கே ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் இருப்பவரை விட அரை அடி  நீளம் அதிகமானவர்.  ஆகிருதியாக சேஷன் மேல் சுகமாக யார் தொந்தரவும் இல்லாமல் படுத்துக்கொண்டிருக்கிறாரே.  எந்த ஜருகண்டியும் இல்லை காசு கேட்டு க்யூவில் நிற்கவைப்பவர்களும் இல்லையே. இயற்கை சூழலில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு  ஆனந்தமாக சயனித்திருக்கிறார்.  அருகே அவரை தொடும்  தூரத்தில் நின்று மணிக்கணக்காக அவரோடு பேசலாம், பாடலாம், யாரும் தடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் யாருமே இல்லை.

தேவதானம் பெருமாள் ஆயிரம் வருஷங்களுக்கு மேலானவர்.  பெருமாள் மேல் அவர் செய்த சேவைக்கு நன்றியாக  தேவர்கள் சேர்ந்து அளித்த தானம்  இந்த வயல் சூழ்ந்த இடம். தேவதானம்.   சிறிய கோவில் என்றாலும் சாளுக்கிய ராஜாவால் கட்டப்பட்ட  ஆலயம்.  ஆலயம்  வயல்கள் நடுவே ஒரு மணல் திட்டில் அமைந்திருக்கிறது. வளைந்து வளைந்து வண்டியில் செல்ல  பாதை அமைத்திருக்கிறார்கள். யாரும் தன்னை தொந்தரவு செய் யக்கூடாது என்ற நோக்கத்தோடு தானே  ரங்கநாதர்  இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். கோவிலை  அடுத்து பெரிய வயதான மரங்கள். நிறைய பக்ஷிகள் அவருக்கு இன்னிசை  பாட கொடுத்து வைத்திருக்கின்றன.  சிறிய சாதாரண நுழைவாசல், அதை தொடர்ந்து பலி பீடம், கொடிமரம், எதிரே  பெருமாளை தொழுதபடி  கருடாழ்வார்.  அப்புறம்  நம் கண் முன்னே பிரம்மாண்டமான  ரங்கநாதர். ஐந்து தலை ஆதிசேஷன். மூன்று மடிப்புகளாக தனது உடலை படுக்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறார். தலைகள் தான் குடை. கிழக்கு நோக்கிய திருமுகம். யோக சயன ரங்கநாதர்.  எல்லோருக்கும் நெல் அளந்து கொடுத்து களைத்து அளந்த மரக்கால் படியை தலைக்கு வைத்தவாறு பதினெட்டு அடி நீளத்தில்  தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் தரிசனம் தருகிறார்.

தாமரைக்கண்ணன். வலது கையை அழகாக மடித்து  தலைக்கு கீழே. இடது காய் நீட்டியபடி.  
ஒரு ஆச்சர்யமான விஷயம். இந்த ரங்கநாதர் கல்லால் செதுக்கப்பட்டவர் அல்லர். சுதை. திருமேனி  முழுதும் சாளக்ராம கற்களால் வடித்தது. என்ன வசீகரமான புன்னகை பூத்த ;முகம். அப்பப்பா. நாள் முழுதும் ரசிக்க ஒரே இடம்.  பத்மநாபன்  நாபியில் ப்ரம்ம தேவன்.  தாமரை மலர் கையிலேந்திய  ஸ்ரீ லட்சுமி தேவி. அவளை அடுத்து நீலோத்பல மலர் ஏந்திய  பூமா தேவி.  கையில் தம்புராவோ வீணையோ கையில் கொண்டு போற்றி பாடும் தும்புரு,  வணங்கிக்கொண்டே இருக்கும் ஆஞ்சனேயர்.  சுதை சாளக்ராம விக்ரஹம் என்பதால்  அபிஷேகம் இல்லை.  தைல காப்பு. மினுமினுக்கிறார்.  பிரகாரத்தில்  ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சந்நிதி.  ஸ்தல விருக்ஷம் பாரிஜாதம் பூத்து குலுங்குகிறது. பறிப்பதற்கு ஆளில்லையா?  எங்கும் கம்மென்று பாரிஜாத நறுமணம். பெரிய புற்று ஒன்று. உள்ளூர் பக்தர்கள் அடிக்கடி வந்து பால் ஊற்றுகிறார்கள்.

சென்னையிலிருந்து  ரெண்டு மணி நேரத்தில் காரில் சென்று அடையலாம்.

 மீஞ்சூர்  அல்லது அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி நிறைய மினி பஸ், ஆட்டோ   கிடைக்கிறதால் வயல் வழியே சென்று ரங்கநாதனாரை  தரிசிக்க முடியும்.

இந்துசமய நூல்கள் பற்றிய ஒரு தொகுப்பு

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த இந்துசமய நூல்களின் பெயராவது தெரிந்து கொள்ளுங்கள்!!

உலகின் தாய்மதத்தின் நூல்களில்

ஆயிரத்தில் ஒரு பங்கு நூல்களை பற்றி தெரிந்து கொள்வோம்

வேதங்கள்:

1.  ரிக்வேதம்,
2.  சாம வேதம்,
3.  யஜுர் வேதம்,
4.  அதர்வ வேதம்.

உபவேதங்கள்:

1.  ஆயுர்வேதம்,
2.  அர்த்தசாஸ்திரம்,
3.  தனுர் வேதம்,
4.  காந்தர்வ வேதம்.

வேத பிரிவுகள்:

1.  சம்ஹிதைகள்,
2.  பிராமணங்கள்,
3.  ஆரண்யகங்கள்,
4.  உபநிடதங்கள்.

108 உபநிடதங்கள்:

10 முக்கிய உபநிடதங்கள்:

1.  ஈசா வாஸ்ய உபநிடதம்,
2.  கேன உபநிடதம்,
3.  கடோபநிடதம்,
4.  பிரச்ன உபநிடதம்,
5.  முண்டக உபநிடதம்,
6.  மாண்டூக்ய உபநிடதம்,
7.  ஐதரேய உபநிடதம்,
8.  தைத்திரீய உபநிடதம்,
9.  பிரகதாரண்யக உபநிடதம்,
10. சாந்தோக்யம் உபநிடதம்,

மேலும்,

24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்,

20 யோக உபநிடதங்கள்,

17 சன்னியாச உபநிடதங்கள்,

14 வைணவ உபநிடதங்கள்,

14 சைவ உபநிடதங்கள்,

9 சாக்த உபநிடதங்கள்.

வேதாங்கங்கள்:

1.  சிக்ஷா,
2.  சந்தஸ்,
3.  வியாகரணம்,
4.  நிருக்தம்,
5.  கல்பம்,
6.  ஜோதிடம்.

புராணங்கள்

பிரம்ம புராணங்கள்;

1.  பிரம்ம புராணம்,
2.  பிரம்மாண்ட புராணம்,
3.  பிரம்ம வைவர்த்த புராணம்,
4.  மார்க்கண்டேய புராணம்,
5.  பவிசிய புராணம்.

வைணவ புராணங்கள்

6,விஷ்ணு புராணம்,
7,பாகவத புராணம்,
8,நாரத புராணம்,
9,கருட புராணம்,
10,பத்ம புராணம்,
11,வராக புராணம்,
12,வாமன புராணம்,
13,கூர்ம புராணம்,
14,மச்ச புராணம்,
15,கல்கி புராணம்.

சிவபுராணங்கள்;

16.  சிவமகாபுராணம்,
17.  லிங்க புராணம்,
18.  கந்த புராணம்,
19.  ஆக்கினேய புராணம்,
20.  வாயு புராணம்

உப புராணங்கள் (18):

1,சூரிய புராணம்,
2,கணேச புராணம்,
3,காளிகா புராணம்,
4,கல்கி புராணம்,
5,சனத்குமார புராணம்,
6,நரசிங்க புராணம்,
7,துர்வாச புராணம்,
8,வசிட்ட புராணம்,
9,பார்க்கவ புராணம்,
10,கபில புராணம்,
11,பராசர புராணம்,
12,சாம்ப புராணம்,
13,நந்தி புராணம்,
14,பிருகத்தர்ம புராணம்,
15,பரான புராணம்,
16,பசுபதி புராணம்,
17,மானவ புராணம்,
18,முத்கலா புராணம்.

இதிகாசங்கள் (2):

1.  இராமாயணம்,
2.  மஹாபாரதம்

ஏனைய புனித நூல்கள்;

1,பகவத் கீதை,
2,உத்தவ கீதை,
3,ரிபு கீதை,
4,அஷ்டாவக்கிர கீதை,
5,பிரம்ம சூத்திரம்,
6,மனுஸ்மிருதி,
7,அர்த்தசாஸ்திரம்,
8,ஆகமம், தந்திரம்,
9,சூத்திரம்,
10,தோத்திரம்,
11,தர்மசாத்திரங்கள்,
12,நாலாயிர திவ்வியப் பிரபந்தம்,
13,தேவாரம்,
14,திருவாசகம்,
15,பெரிய புராணம்

🔯27 நட்சத்திரக்காரர்களும்... அவர்களின் வெற்றிநாட்களும்!



உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம்என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள்.

அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான்இருக்கும்.

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.

 புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம். 

புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை.  வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா!

சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்மை வந்தடைய வேண்டும் என்பதற்காகத்தானே சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான். அதுதான் சம்பத்து தாரை.

சம்பத்துதாரை” என்னும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

இதை எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள்
பரணி, பூரம், பூராடம்

பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்

கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரோகிணி, அஸ்தம்,திருவோணம்

ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி,சதயம்

திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூசம், அனுசம்,உத்திரட்டாதி

பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி

ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மகம், மூலம்,அசுவினி

மகம் :-   இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரம்,பூராடம்,பரணி

பூரம் :-  இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரம், உத்திராடம்,கார்த்திகை

உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அஸ்தம்,திருவோணம்,ரோகிணி

அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்

சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சுவாதி,சதயம்,திருவாதிரை

சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அனுசம்,உத்திரட்டாதி, பூசம்

அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கேட்டை,ரேவதி,ஆயில்யம்

கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மூலம், அசுவினி,மகம்

மூலம் :-   இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூராடம்,பரணி,பூரம்

பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திராடம், கார்த்திகை, உத்திரம்

உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவோணம், ரோகிணி,அஸ்தம்

திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை

அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சதயம்,திருவாதிரை,சுவாதி

சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரட்டாதி, புனர்பூசம், விசாகம்

பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, பூசம், அனுசம்

உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள் ரேவதி,ஆயில்யம்,கேட்டை

ரேவதி :-    இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அசுவினி,மகம்,மூலம்

இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்களை அறிந்துகொண்டீர்கள் அல்லவா. உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து நட்சத்திரங்கள் எந்த நாளில் இருக்கிறதோ... அந்த நாளே உங்களுக்கு உகந்த பொன்னாள். தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே. இந்த நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்தக் காரியமும் ஜெயத்தில்தான் முடியும். ஜெயத்தையே தந்தருளும்.

இதைப் பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசப்படுத்துங்கள்.

இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன்.

நவகிரகங்களே அவரவர் நட்சத்திரங்களுக்கு சம்பத்து நட்சத்திரமான அடுத்தநட்சத்திரங்களில் தான் பிறந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... சம்பத்து நட்சத்திரங்களின் மகத்துவத்தையும் மகோன்னதத்தையும்!

உதாரணமாக சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று “உத்திரம்.” ஆனால் சூரியபகவான் ஜனித்த நட்சத்திரம் உத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான “அஸ்தம்”நட்சத்திரத்தில்
சந்திரன் தன் நட்சத்திரமான “ரோகிணிக்கு” அடுத்த நட்சத்திரமான “மிருகசீரிடம்”நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இப்படி கிரகங்களே “சம்பத்து நட்சத்திரங்களை” பயன்படுத்தி அழியாப் புகழுடன்இருக்கும் போது, நாமும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையைஅமைத்துக்கொள்வோம். செழிப்பான இந்த வாழ்க்கையை சீரும்சிறப்புமாக்குவோம்.

நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்


 இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம்.

அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும்.

இந்த கற்சிலைகளைப்பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது.

இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள்.

இதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

இந்த விசயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது.

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்),சத்ரு காரகன் (பகைக்கு காரணமானவன்),ருணக்காரகன் (கடன் தொல்லைக்கு காரணமானவன்) என்று பெயர்.

இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது,அதாவது செயலற்று போகிறது.

"ஆயில்யம்” என்றால் “பிண்ணிக்கொள்வது” அல்லது “தழுவிக்கொள்வது” என்று பொருள்படும்.

இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவமாகும்.

எனவே பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ரகசியமாகும்.

நன்றி:சித்தயோகி சிவதாசன்ரவி.

சிங்கப்பெருமாள்_கோவில்

#ஸ்ரீநரசிம்மர்சாளக்கிராம்.

#மிகவும்_அபூர்வமான #அமைப்பாகும்

ஸ்ரீ நரசிம்மர் பெருமாள் திருவடிகளே சரணம்

#ஸ்ரீநரசிம்மமஹா_மந்திரம்

ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நரசிம்மம்  பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்🙏🏿🙏🏿

⚜திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனி தசை, ராகு தசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

நரசிம்மரின் பெயரால் சென்னை அருகே செங்கல்பட்டு செல்லும் வழியில் “சிங்க பெருமாள் கோவில்” அமைந்துள்ளது.

ஜாபாலி என்னும் மகரிஷி, பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக சேவிக்க வேண்டும் என்று வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது.

அவரது தவத்திற்கிணங்கி பெருமாள் பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக சிவந்த கண்களோடு பாடலாத்ரி மீது தரிசனம் தந்தார்.

 முனிவர் வேண்ட பின் அதே கோலத்தில் நாம் எல்லோரும் வழிபடுவதற்காக இத்தலத்தில் கோவில் கொண்டார்.

இவர் #பாடலாத்ரி_நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலை மீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை தொங்க விட்ட நிலையிலும் காட்சி தருவார்.

ஆனால் இந்த ஆலயத்தில் வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்க விட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

இக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றி வலம் வர வேண்டும்.

 பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் நெற்றிக்கண்ணுடன் பிரம்மாண்டமாக சேவை சாதிக்கின்றார். ஆரத்தி காட்டும் போது திருமண்ணை விலக்கி, நெற்றிக்கண்ணை சேவை செய்து வைக்கும் போது அந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.

பிரணவகோடி விமானத்தின் கீழ் நரசிம்மர் சங்கு சக்கரம் ஏந்தி வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரத்தை தொடை மீது வைத்தும் பிரம்மாண்ட திருவுருவில் அருள்கிறார்.

 நெற்றிக்கண் ஒளிரும் அபூர்வ திருமேனி கொண்டவர் இவர். இவருக்கு பிரதோஷ தினத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகின்றது.

ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

 கிரிவலம் வரும் போது அரிய வகை அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். அதையும் தவறாமல் வழிபட வேண்டும். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் இருக்கிறது. பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்பதைக் காணலாம்.

பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

 மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படருகிறது.

கடன் தொல்லை, வழக்குகளிலிருந்து விடுதலை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக, இந்த நரசிம்மர் அருள்கிறார்.

 திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனி தசை, ராகு தசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜ ஜயந்தி, சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி நட்சத்திர தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோற்சவம், கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தை மாத சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மார்கழியில் 5 நாட்கள் தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் விழாக்கோலம் காண்கின்றது இத்திருத்தலம் .

இவரிடம் தன் கோரிக்கை நிறைவேறினால் பானகம் கரைத்து ஆலய வலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டால், கட்டாயம் அந்த கோரிக்கை நிறைவேறிவிடும். என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

மூலவர் பாடலாத்ரி நரசிம்மர்,
உற்சவர் பிரகலாதவரதர்,
அம்மன்/தாயார்  அஹோபிலவல்லி,
தல விருட்சம் பாரிஜாதம்,
தீர்த்தம் சுத்த புஷ்கரிணி.

கோவில் முகப்பில் சதுரம் கட்டு சதுரம் என்ற அமைப்பில் 2 முழு தூண்களும் சுவரை ஓட்டி  2  தூண்களும் காணப்படுகின்றன

கோவிலுக்குள் நுழைந்தவுடன் வெளிப்புற சுற்று மலை சுற்றாக அமையும் கோவிலின் வெளிப்புறத்தில விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் சிலை மேனிகளாக காணப்படுகின்றன.
பக்கவாட்டு சுவரில் ஸ்தல வரலாறு குறிக்கப்பட்ட குறிப்பும் காணப்படுகின்றது

அதை தாண்டி ஆலய மண்டபத்திற்கு வந்தால் மூலவர் உற்சவர் சன்னதிக்கு போகும் வழி காணப்படுகிறது

அதன் வழியாக மூலவராகிய நரசிம்மர் சுகாசனத்தில் நான்கு கைகளில் கதையுடனும்,  வல பின் கையில் சக்கரமும்,  இட பின் கையில் சங்கும் கொண்டு,  வல முன் கை காக்கும் முத்திரையிலும்,  இடது கை முன் தொடையிலும் அமைந்தவாறு,  வலது காலை மடித்துக் கொண்டு, கீழே நீட்டப்பட்டுள்ள  இடது காலை தாமரை மலர் மேல் வைத்துக் கொண்டு #த்ரிநேத்ரதாரியாய் (மூன்று கண்களுடன்) திரு மார்பில் மகா லஷ்மியோடு, சாளக்கிராம மாலை, ஸஹஸ்ரநாத மாலை மற்றும் லஷ்மிஹாரங்நாம மாலை மற்றும் லஷ்மி ஹாரங்களுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகிறார்.

பாடலாத்ரி நரசிம்மரின் உற்சவரின் திருப்பெயர் ஸ்ரீ பிரகலாத வரதர், ஸ்ரீ தேவி, பூதேவி உடன் காணப்படுகிறார்.

 வரதரின் பின் கைகள் சங்கு சக்ரம் ஏந்திய நிலையில் வலக்கை காக்கும் அமைப்புடனும் இடக்கை கதையுடனும் தேவியர் ஒருகையை நெகிழ்வாகவும் மற்றொரு கையில் மலர்களை கொண்டுள்ளனர்.

ஒரு பெரிய பாறை மேல  இந்த கோவில் இருக்கு. அந்த பாறை மேல ஏறிக்கிட்டே  இந்த கோவிலின்

 🔯#ஸ்தல_வரலாறை சிறிது பார்ப்போமா?!

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

 அநேகமாக நரசிம்ம சுவாமி எல்லா முக்கிய திருத்தலங்களிலும் பல ரூபத்தில் எழுந்தளியிருக்கிறார். இறைவன் தூணிலும் இருப்பான், இரும்பிலும் இருப்பான். அவன் தான் மேலான தெய்வம்.

 ஆகையால் பலராலும் வற்புறுத்தியும் பிரகலாதன் தன் தந்தையான இரணியனை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இரணியனானவன் சாகாவரம் பெற்றிருந்தான். இறப்பு என்பது அவனுக்கு பகலிலும் நேரக்கூடாது. இரவிலும் நேரக் கூடாது, வீட்டின் உள்ளேயும், வெளியேயும் நேரக்கூடாது. வெளியேயும் நேரக் கூடாது. ஆகாயம், பூமி, நெருப்பு, நீர், காற்று இவற்றினாலும் இறப்பு கூடாது. ஆயுதம், மிருகம், மனிதன் எதனாலும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்ற மிகப் பெரிய சாகா வரத்தை பெற்றிருந்தான்

பிரகலாதன், இறைவன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கவில்லை. ஆனால் மகாவிஷ்ணுவானவர் சிறுபாலகனின் ஆணித்தரமான #இறைவன்எங்கும்உள்ளான் ன்ற சொல்லை நிலை நாட்டுவதற்காகவும், மெய்ப்பிக்கவும் மாலை வேளை துவாரப்ரதேசத்தில் (வாயிற்படியில்) நரமிருக ரூபியாய் (மனித உடல் சிங்கமும்) அவதாரம் செய்து நரங்களினாலே இரணியனை ஸம்ஹாரம் (வதம்) செய்தார்.

அது சமயம் அவர் (மஹா உக்ரத்தில்) பெருஞ்சினத்துடன் மூன்று கண்களுடன் காணப்பட்டார்.

 இத்திருக்கோவிலைச் சுற்றி அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் ஸப்த (ஏழு) ரிஷிகளுள் ஒருவரான ஜாபாலி இறைவனை நேரில் காண வேண்டி தவமிருந்தார். அவரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இரணியனை ஸம்ஹாரம் செய்த திருக்கோலத்துடன் உக்கிர நரசிம்மராக அதே கோபத்துடன் இந்த திருத்தலத்தில் சிறு குகையினுள் காட்சி கொடுத்ததாக  புராணத்தில் விரிவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த குடவரை கோவிலாகும். இதில் கிழக்கு முகமாக அமையபெற்ற ஒரு தள கோபுரம் ஒரு பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது

சுவாமி குகைக்குள் வீற்றிருப்பதால் கோவிலை வலம் வருபவர்கள் சுமார் நூறு படிக்கட்டுகள் கொண்ட சிறு குன்றினையும் சேர்த்து தான் வலம் வரவேண்டும் ஆகையால் இக்கோவிலுக்கே உரித்தான த்ரிநேத்ர தரிசனம், கிரிவலம் இக்கோவிலின் சிறப்பாகும்.

தெய்வீக அதிசய குணம் படைத்த அழிஞ்சல் மரம் இதன் சிறப்பு. அதைப் பற்றி நாச்சியார் திருமொழியின் விரிவுரையில் 44-வது பாசுரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

மணமாகாதவர்களும்,  குழந்தை பேறு இல்லாதவர்களும்,  மாமேதை ஆகும் எண்ணம் உள்ளவர்களும்( இந்த மூணுல எதுமே செட்டாகலையே! அப்புறம் நீ ஏன் போனேன்னு கமெண்ட்ல கலாய்க்க கூடாது!!. ) தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்தெடுத்து இம்மரத்தின் கிளையில் எம்பெருமானை நினைத்து ஒரு நுனியில் கட்டி மரத்தின் அடியில் மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் அருள்கிட்டும். இது மகான்கள் கண்ட உண்மை. தெய்வாம்சம் பொருந்திய மரம் கோவில் கிரி பிரதட்சிணத்தில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது.

இங்கு காது குத்தல், மொட்டை அடித்தல், கல்யாணம், துலாபாரம், விசேஷ அபிஷேக ஆராதனைகள் எனப் பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

மலையை சுற்றி வரும்போது மேலே ஒரு பலிபீடம் அமைந்துள்ளது. அங்கே இருந்து பார்த்தல் கோவிலின் கொடிமரம் மலைகளின் பின்னணியில் அழகாக காட்சி தருகிறது.

மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது என்பது சிறப்பம்சம். பின் நாம் படி இறங்கி வரும்போது நேரே இலட்சுமி நரசிம்மர் வீற்று இருக்கிறார்.

இறைவனின் இடது தொடையில் அமர்ந்து இருக்கிற லட்சுமி தேவியின் இடது கையில் தாமரையும் வலக்கை நரசிம்மரின் இடுப்பை சுற்றிய நிலையில் காணப்படுகிறது. நரசிம்மரின் பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்த வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. இட முன் கை இறைவியை அணைத்தவாறே காணப்படுகிறது.

அவரை வழிபட்டு மலையை சுற்றி முடித்து கீழே வரும் போது ஒரு மண்டபம் காணப்படுகிறது.

அதில் அன்னதானம் தினமும் நடைபெறுகிறது. நாங்கள் செல்லும் போது அன்னதானம்  நடைபெற்று கொண்டிருந்தது . ஒரு கட்டு கட்டியாச்சு. எங்க போனாலும் நம்ம காரியத்துல கண்ணாயிருப்போமில்ல!!

கோவிலை விட்டு வெளியே வரும்போது கோவிலின் வெளியே ஒரு நாற்கால் மண்டபம் காணப்படுகிறது அதுபற்றிய தகவல்களை பெறமுடியவில்லை.

காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம் – செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இத் திருக்கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கு

அகத்தியரும் சூரியனும், ரத ஸப்தமி - எருக்க இலையின் மகத்துவம்.



சூரிய தேவன் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரை வடக்கு நோக்கிச் சரியாகத் திருப்பி ஓட்ட ஆரம்பிக்கும் நாளை "ரத ஸப்தமி' என்பார்கள். இந்நாளில் சூரியனை வழிபட காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வார்கள். ஏன்?

மிகப் பழங்காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முக்காலமும் அறிந்த ஞானி. பலர் அவரிடம் வந்து தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு பணிவுடன் கேட்பார்கள். கேட்பவரை நேர் எதிரே நிறுத்தி அவரை ஒருமுறை நன்றாய் தீர்க்கமாய் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்பு கண்கள் மூடிச் சிறிது நேரத்தில் அவரது எதிர்காலத்தைப் பற்றிய விவரங்களை கடகடவென்று கூறிவிடுவார்.

இவரது புகழ் எங்கும் பரவ ஒருநாள் இளம் சந்நியாசி ஒருவர் வந்து, காலவ முனிவரைப் பணிந்து தன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டினார்.

காலவ முனிவரும் கண்கள் மூடி தியானித்து, தியானித்துப் பார்க்கிறார். அந்த இளம் சந்நியாசியின் எதிர்காலம் அவருக்குப் பிடிபடவில்லை. காலவ முனிவருக்கு அதிர்ச்சி. ""ஸ்வாமி... நீங்கள் யார்? உங்கள் எதிர்காலம் எனக்குப் பிடிபட மறுக்கிறதே?'' என்று வினவினார்.

"நான் யார் என்பது இருக்கட்டும். எவ்வளவோ பேருக்கு எதிர்காலம் பற்றி ஞான திருஷ்டியில் கூறும் நீங்கள் உங்கள் எதிர்காலம் எப்படி என்று பார்த்திருக்கிறார்களா?'' என்று கிண்டலாகக் கேட்டார். காலவ முனிவருக்கும் அப்போதுதான் தனது எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணம் ஏற்பட்டது. கண்கள் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் திடுக்கிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் அவரைத் தொழுநோய் பிடித்துத் துன்புறுத்தப் போவது ஞான திருஷ்டியில் அவருக்குப் புலப்பட்டது. கண்களைத் திறந்து பார்த்தபோது அந்த இளம் சந்நியாசியைக் காணவில்லை. மறைந்துவிட்டார். உண்மையில் இளம் சந்நியாசியாய் வந்தது யமதர்மராஜன். இதையும் ஓரளவு யூகித்துவிட்ட காலவ முனிவர் தனக்கு வர இருக்கும் தொழு நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள நவகிரகங்கள் நோக்கி கடும் தவமிருந்தார். முனிவரது தவத்தை மெச்சி நவகிரகங்களும் அவர் முன் தோன்ற காலவ முனிவர் தன்னைத் தொழுநோய் பீடிக்காமலிருக்க வரம் தருமாறு வேண்டினார். நவகிரகங்களும் அவ்வாறே வரமளித்துவிட்டன.

இதில் பிரச்னை என்னவென்றால் இந்த நவகிரகங்களுக்கும் சுயமாக எவருக்கும் வரம் தரும் அந்தஸ்து கிடையாது.

ஆண்டவன் கட்டளைப்படி தங்களுடைய கடமைகளை அவை செய்து வர வேண்டுமே தவிர மற்றபடி வரங்கள் அருளும் தகுதி கிடையாது. இவர்களுக்கு அதிபதியான பிரம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே கடுங்கோபத்துடன் அவற்றை வரவழைத்து விசாரணை நடத்தினார். பாவம் நவகிரகங்கள்... தங்களையும் மதித்து ஒருவன் தவம் செய்து வரம் கேட்கிறானே என்ற மகிழ்ச்சியில் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி வரமளித்துவிட்டன. பிரம்ம தேவனுக்குப் புரிந்தது. இருந்தும் என்ன? செய்த தவறுக்கு தண்டணை உண்டே. அதனால் ""காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களைப் பீடிக்கும். அதுதான் உங்களின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கான தண்டனை'' என்றார் பிரம்மா.

அந்த தண்டனையைக் கேட்டு அலறிய நவகிரகங்கள் பிரம்மனின் காலடியில் விழுந்து சாப விமோசனம் வேண்டினார்கள். கொஞ்ச நேரம் அவர்களை அலற விட்டு வேடிக்கை பார்த்த பிரம்மன் கடைசியாக அவர்களை பூலோகத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கே அர்க்கவனம் என்னும் தலத்தில் உள்ள பிராணேசுவரரை கார்த்திகை மாதம் துவங்கி 78 நாட்களுக்கு வழிபட்டு தவம் செய்யவும் உத்தரவிட்டார்.

பிரம்மனின் சாபப்படி தொழுநோய் உடனே நவகிரகங்களைப் பீடித்தது. பூலோகம் வரும் வழியில் அகத்திய முனிவரை சந்தித்து நடந்த விஷயங்களை அவருக்குத் தெரிவித்தன. அகத்தியர் அவர்களுக்கு சில வழிபாட்டு முறைகளை உபதேசித்தார்.

"திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் தங்கி, நீராடி, 78 நாள்கள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமை தோறும் எருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாள்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள்'' என்றார் அகத்தியர். நவகிரகங்களுக்கு ஓர் ஆவல். எத்தனையோ இலைகள் இருக்க, எருக்க இலையில் வைத்து ஏன் தயிர் அன்னத்தை புசிக்க வேண்டும்? காரணத்தை அவரிடமே கேட்க, ""அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? அதெல்லாம் தேவ ரகசியம். இருந்தாலும் சொல்கிறேன். எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்'' என்றார் அவர்.

அகத்திய முனிவர் குறிப்பிட்ட தேவ ரகசியம் இதுதான். வெள்ளெருக்கு இலையில் வைத்து தயிர்சாதம் சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும் என்ற பண்டைய மருத்துவ முறைதான் அது. அவ்வளவு சக்தி வாய்ந்தது எருக்கன் இலை. ரத ஸப்தமி (தை மாதம்) நாளில் ஏழு எருக்க இலைகள், எள், அட்சதை ஆகியவற்றை தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவகிரக தோஷம் விலகும் என்ற நம்பிக்கையும் பிறந்ததுதான் இன்றும் நம்மை ரத ஸப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வது. அதற்காக, தொழுநோய் உள்ளவர்கள்தானே அப்படிச் செய்ய வேண்டும், மற்றவர்கள் எதற்காக அப்படி ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கலாம். தொழுநோய் என்பது ஒரு குறியீடு. நம்மை அறியாமல் செய்யும் எவ்வளவோ தீமைகளால் ஏற்படும் நவகிரக தோஷங்களை இது போக்கும் என்பதே அதன் தாத்பர்யம்.

ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, "அர்க்க பத்ரம்' என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று "அர்க்க பத்ர ஸ்நானம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

"ஸப்த ஸப்த ப்ரியே தேவி
ஸப்த லோக ப்ரதீயிகே
ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய''

என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ "திவாக்ராய நம: இதமர்க்யம்'' என்று மும்முறை சொல்லி சூரிய பகவானுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும்.

பீஷ்மத் தர்ப்பண நாள்:
**********

ரதஸப்தமியை ஒட்டி வரும் ஒரு விசேஷ நாள் பீஷ்மத் தர்ப்பண நாள். நல்ல விஷய ஞானம் உள்ள பெரியோர்கள் இன்றும் பீஷ்மருக்கு அன்று அர்க்ய பூஜை செய்வார்கள். அர்க்யம் என்றால் என்னவோ ஏதோ என்று குழம்ப வேண்டாம்.

நேராக நிமிர்ந்து இரு கைகளிலும் நீரை ஏந்தி நின்று, "பீஷ்மம் தர்ப்பயாமி, பீஷ்மம் தர்ப்பயாமி, பீஷ்மம் தர்ப்பயாமி (3 முறை)'' என்று ஓதியபடி இணைந்த கரங்களைச் சற்றுத் தாழ்த்திச் சாய்த்து விரல் நுணிகளின் வழியே பூமியில், நீரை விடுதல்தான் அர்க்யம் என்பது. கிருஷ்ண பரமாத்மாவிடம் பீஷ்மர் சகலத்தையும் ஒப்புவித்து சரணாகதி அடைந்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சி.

பீஷ்மர் எவரும் எளிதில் பெற முடியாத "இச்சா மிருத்யு' என்ற வரத்தைப் பெற்றவர். இது, தான் விருப்பப்படும்போது மட்டுமே உடலை விட்டு உயிரைப் பிரித்துக்கொள்ளும் அபூர்வ யோக சக்தி. அதாவது தான் விரும்பும்போது தன் உடலில் இருந்து பஞ்ச பூத சக்திகளைப் பிரித்துப் பூஜ்யம் என்ற ஒன்றுமேயில்லாத பிரபஞ்ச சூனியத்தால் ஐக்கியமாவது. இது மரணங்களில் எந்த வகையிலும் பேரிட்டுச் சொல்ல முடியாத அபூர்வமான ஆன்மிக சக்தியால் உடலை விட்டு உயிரைக் களைவது. இத்தகைய பெரும் பேறு பெற்றவர்களைத்தான் "பூஜ்ய ஸ்ரீ' என்று அடைமொழியிட்டு அழைப்பர்.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தபடி உத்தராயண புண்ய கால வருகைக்காக உயிரைப் பிடித்தபடி கிடக்கிறார்." இந்த நிலையில்கூட பகவானின் விஸ்வரூப தரிசனம் இன்னும் கிட்டவில்லையே, அதற்கான தகுதி நம்மிடம் இல்லையோ'' என்றெல்லாம் மனம் குழம்பி கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ண பரமாத்மாவுக்கு பீஷ்மர் நிலை புரியாதா என்ன?

அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்த அகஸ்தியருடன் உரையாடுவது போல பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நிலையிலும் பீஷ்மரிடம் கொஞ்சம் விளையாடிப் பார்க்கும் ஆசை கிருஷ்ணனுக்கு உதித்தது.

பீஷ்மருக்கு அனுக்கிரகம் புரிந்து ஆட்கொள்வது என்பது எப்போதோ முடிவான விஷயம். இருந்தாலும் கிருஷ்ணன் அந்தக் கடைசி நேரத்திலும் ஒரு சின்ன நாடகமாடினார். அகஸ்தியரிடம் கண்களை காட்ட அகஸ்தியர் பீஷ்மரிடம், ""நீங்கள் அனைத்தையும் கண்ண பரமாத்மாவிடம் அர்ப்பணித்து விட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது. அதுதான் அந்த "இச்சா மிருத்யு' என்ற வரம். பகவானிடம் அர்ப்பணிக்கப்படாமல் இருக்கிறதே'' என்கிறார்.

பீஷ்மர் இதைக் கேட்டு விக்கித்துப் போய் விடுகிறார். ஆமாம்... அது ஒன்று இன்னும் அவரிடம் இருக்கிறதே...அதை பகவானுக்கு அர்ப்பணிக்கும் விதமோ, ஞானமோ, எதுவுமே தன்னிடம் இல்லையே என்று கிருஷ்ணனிடம் கதறுகிறார்.

அதை எப்படி அர்ப்பணிப்பது என்பது அகஸ்திய மாமுனிகளுக்கு நன்கு தெரியும் என்று கிருஷ்ணர் சொல்ல, பீஷ்மர் அகஸ்தியரை வேண்டினார்.

அவர் கூறியபடி பிரம்மாவைத் துதித்து கிருஷ்ணருக்குப் பாத பூஜை செய்தார். அவர் பாதங்களைத் தாங்கியிருந்த மரப்பீடத்தை நெஞ்சில் ஒரு தாமரை பூவை வைத்து அதன் மீது நிறுத்தினார். பீடத்தை வைத்து அகஸ்தியர் கூறிய மந்திரங்களைப் பய பக்தியுடன் ஓதுகிறார் பீஷ்மர். பீஷ்மரின் அன்னையான கங்கா மாதாவும் அப்போது எழுந்தருளி ஆகாச கங்கை நீரை புரோட்சிக்கிறார். அப்போது, "இச்சா மிருத்யு' என்ற வரத்தின் ஒளி பீஷ்மரின் இதயத்திலிருந்து வெளியே கிளம்பி கிருஷ்ண பரமாத்மாவையும் கங்கா மாதாவையும் வலம் வந்து பிரபஞ்ச வெளியில் மறைகிறது. சகலத்தையும் கிருஷ்ணனுக்கே அர்ப்பணித்த பீஷ்மரின் இந்த பரிபூரண சரணாகதி நினைவாக பீஷ்மருக்கு அர்க்யம் கொடுக்கும் வழக்கம் வந்தது.

எவரும், மது, மாது, புகை போன்ற தீய பழக்கங்களில் சிக்காமல் நல்ல ஒழுக்கத்துடன் வாழ இந்த பீஷ்ம தர்ப்ணா அர்க்ய பூஜை தோன்றாத் துணையாய், ஒரு காப்பு அரணாய் செயல்படும் என்பது சான்றோர்களின் நம்பிக்கை.

நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா மயிலாப்பூருக்கு வாங்க!


சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும். இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

1. ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்கோயில் (சூரியன் ஸ்தலம்)

மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தபோது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாக திகழ்கிறார்.

2. ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் (சந்திரன் ஸ்தலம்)

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.

3. ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் (செவ்வாய் ஸ்தலம்)

'மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றதாக கருத்து நிலவுகிறது.

4. ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்)

மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலையில்) காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும்.

5. ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்)

இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து ஈசன் நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார், இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச் செழிப்பு ஏற்படும்.

6. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்)

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.

வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் தலவரலாறு. எனவே, ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ளீஸ்வரரை 'கண் டாக்டர்' என்றே கொண்டாடுகிறார்கள். மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.

7. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்)

மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் முதலில்  தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார். 

எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக இருக்கிறார். மேலும் அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழாவில் எட்டாம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத் திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சனி கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஸ்தலம் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

நவக்கிரக ஸ்தலங்கள் என கூறிவிட்டு ராகுவையும் கேதுவையும் விட்டுவிட்டீர்களே எனக் கேட்பது காதில் விழுகிறது! ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் தானே. அவர்களுக்கு தனி வீடு கிடையாதல்லவா?

8. அருள்மிகு முண்டக கண்ணியம்தான் (ராகு ஸ்தலம்)

திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் மாதவ பெருமாள் திருக்கோயிலின் பின்புறம் அமைந்திருக்கிறது. இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

9. அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்)

துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள். காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.

10. சென்னையின் சிறப்பு மிக்க  திருமயிலையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது தன்னிகர் இல்லா திருத்தலம் அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில். அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணற்ற தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளனர். அவற்றுள் ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது அவ்வாறு ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம் ஆகின்றது.

சைவ அடியார்களுள் ஒருவரான  ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில்  பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான  திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பிறகு அவற்றைத் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். பொதுவாக ஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள் பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், "மயிலையே கயிலை கயிலையே மயிலை" என்ற சிறப்பைப் பெற்றது போலும். வரும் திங்கள் கிழமை சிவராத்திரி நாளில் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு அம்மன் கோயில்கள் இவற்றோடு அப்பர் ஸ்வாமி கோயிலுக்கும் சென்று தரிசித்து நவக்கிரகங்களை மட்டுமல்லாது சப்த விடங்க ஸ்தலங்கள், அட்ட வீரட்டான ஸ்தலங்களை தரிசித்த பலனைப் பெறுவோம்.

சோழர் காலத்தில் தமிழ் நாடு

சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்.



அன்று...
உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும்,
கங்கை கொண்ட சோழபுரம்தான்.

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது.
இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 ல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது.

இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது.
இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

🌟✨🌟✨🌟✨🌟✨🌟✨🌟

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

🎋🍃🎋🍃🎋🍃🎋🍃🎋🍃🎋

உலகிலேயே ஒரே சீராக 80இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது.
எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.


வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன் படுத்தினர்.

🐘🐘🐘🐘🐎🐎🐎🐎🐘🐘🐘

மலேயா காடுகளிலிருந்தும்,
மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

அசுவசாஸ்திரம் என்ற குதிரைப் பராமரிப்பு நூல் எழுதப்பட்டது. முதன் முதலில் குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர்கள் தமிழர்களே!

ஏழுமலையானும் சோழர்களும் என்ற நூலில் இருந்து...!!! இன்னும் பல தகவல்களுடன் உங்களுடன்....

🌹🌺🌻☘🔷⚛🔷☘🌻🌺🌹

தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் தங்கள் ஆட்சிக்காலத்தில் தமிழையும், தமிழ் மண்ணையும் தன் உயிர் மூச்சாகக் கருதினார்...

உலகை வியக்கவைத்த தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டினார்.!

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

🌷🧩🌷🧩🌷🧩🌷🧩🌷🧩🌷

🌸இந்து சமயம் உருவான இடம் : 🌹தமிழ்நாடு🌹

தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

       🌷🌷🌷🌷🌷🌷🌷

🌸இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌻1.சைவம்

🌻2.சாக்தம்

🌻3.வைஷ்ணவம்

🌻4.கணாபத்யம்

🌻5.கெளமாரம்  

🌻6.செளரம்         

🌻7.ஸ்மார்த்தம் 
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்....,*

 276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

*🌸வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்......,

 96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!

⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄

*🌸கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்....

18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃

🌸கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂

🌸செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்...!!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

*🌸சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்....

பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்...!!
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃

 🌸மேற்கண்ட ஏழு
பெரும் பிரிவு தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும்....

 ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்*
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂

🌸பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,

ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்...!!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

🌸ஆழ்வார்கள்....,  நாயன்மார்கள்.....,

  தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில் தான்....!!
⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂

🌸 பஞ்சபூத கோவில்களில்  நிலம் ,
நீர் ,
ஆகாயம் ,
நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

🌸நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில் தான்.
⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄

🌸12 ராசிகள் மற்றும்
27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

🌸சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

🌸இந்து பண்பாட்டின் அடையாளமே
தமிழ்நாடு தான்...!!
⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃

🌸இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்.....!!
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

🌸இந்து பண்பாட்டின் மருத்துவமான
இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான்...!!⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂

🌸இந்து பண்பாட்டின்
இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில் தான்....!!!
⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄

🌸தமிழ்நாடு முழுக்க முழுக்க  ஆன்மிகபூமி...!!!

"பகிருங்கள் அன்பர்களே"...!!
அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.....!!

தென்னாடுடைய சிவனே போற்றி..!! ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

#வாதஎண்ணெய் இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்*

#வாதஎண்ணெய் இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்*

இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
 வெளிப் படுத்தி உள்ளோம்.

 எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
 மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

வாத எண்ணெய்

1.தேவையான எண்ணெய்கள்

நல்லெண்ணெய் ... நூறு மில்லி

வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி

விளக்கெண்ணெய் ..நூறு மில்லி

2.காடி நீர்

புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார்

3.மருந்துப் பொருட்கள்

சுக்கு

மிளகு

திப்பிலி

பூண்டு

ஓமம்

பெருங்காயம்

கிராம்பு

வசம்பு

சதகுப்பை

4.மருந்து சாப்பிட

நாட்டுப் பசும்பால்

வாத எண்ணெய் செய்யும் முறை

அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
 சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும்  பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ)இந்த சூரணத்தில் 
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இ)வாணலியை அடுப்பிலேற்றி
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
 விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்.

இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்.
நன்கு கொதிக்க விடவும்.

நுரை அடங்கி வரும்.

நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்

இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்.

இந்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
 வாத எண்ணெய் என்று பெயர்

வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை

உள் மருந்தாக 
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து
இறக்கி
குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன்
 அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து

 உணவுக்குப் பின்
அரை மணி நேரம் கழித்து
காலை மாலை என
தினமும் இரண்டு வேளை குடித்து  வர வேண்டும்.

வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை
தினமும் இரவில்
கை கால்களில் தேய்த்து
 மென்மையாக மசாஜ் செய்து
மறு நாள் காலையில்
இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

இவ்வாறு தினமும் செய்து வர
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
 நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
 கைகால்கள் வீக்கம்
வலி
போன்ற அனைத்து வாத நோய்களும்
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்

இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
 என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்.

நடுப்பழனி பிரம்மஞான வித்யாபீடம் செங்குணம்.                      9444033381

நாகலிங்கப் பூவின் மகிமைகள் !!!

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் !

ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள் !!!

ஓம் நமச்சிவாய நமஹ என்று 1001 முறை ஜபித்தப் பின்னரே,நாகலிங்கப் பூவைத் தொடும் அருகதை நமக்கு வருகின்றது;

அதே போல,நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும் என்று விரும்பினால்,21 சாதுக்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும்;அதன் பிறகு தான் நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும்;இப்படி முறைப்படி செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவை ஈசனுக்கு அணிவித்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;

நாகலிங்கப் பூவின் மேல் பகுதியில் கோடி கன்னிகா தான சக்தியைக் கொண்டிருக்கின்றது;
நாகலிங்கப்பூவின் நடுப்பகுதி 10,000 கோவில்களின் கோபுரசக்தியைச் சேர்ந்தது;
நாகலிங்கப்பூவின் அடிப்பகுதி கோவில் குளம் வெட்டிய சக்தியைக் கொண்டிருக்கிறது;
நாகலிங்கப்பூவின் நடுவில் சிறியதாக ஒரு சிவலிங்கம் இருக்கும்;இதற்கு ஆத்மலிங்கம் என்று பெயர்; இத்தனை சிறப்புடைய நாகலிங்கப்பூவை மேலே கூறிய விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்குப் புண்ணியம்  கிட்டும்

நாகலிங்கமரம்  புஷ்பம் மகிமை

1."நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்

2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.

3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை

4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

5.நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .

6.ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது

7.ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.

நாகலிங்க மரத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தரிசிப்போம் ...