Labels

Wednesday, 2 June 2021

உணவுக்குமட்டுமாஉப்பு...????


உப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன???
வேறு சில பயன்பாடுகளுக்கும் உப்பு பயன்படுகிறதே, அதனை அறிவோமா??

 அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால், எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்தாலும் அது புதிதாகவும் புழுப் பூச்சிப் பிடிக்காமலும் இருக்கும்.

பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில், மிதமான சூட்டில், வென்னீர் எடுத்து, அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, 10 நிமிடங்கள், பாதங்களை நீரில் வைக்கவும்.

 இதை, தொடர்ந்து செய்து வந்தால், கால்கள் மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும். கால் வலி இருந்தாலும் பறந்து போகும்.

கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை, உப்பு கலந்த நீரில், சிறிது நேரம் போட்டு வைத்தால், ப்ரஷ்ஷாகி விடும்; நறுக்குவதும் எளிதாக இருக்கும்.

ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு கப் கல் உப்பு சேர்த்து, அதில் ஜீன்சை ஊற வைத்து பின் துவைத்தால், கலர் மாறாமல் அப்படியே நீடித்திருக்கும். முதல் முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை துவைக்கும் முன்பும் இப்படி செய்யலாம்.

பண்டிகைக்கு செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், நீண்ட நாட்கள், அவை சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, துண்டு துணியில், ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு, பட்சணங்கள் வைத்துள்ள பாத்திரத்தில், பட்சணத்திற்கு அடியில் போட்டு வைக்கவும்.

குத்து விளக்கை, முதலில் பழைய செய்தித்தாளால் துடைத்து, பின், புளி மற்றும் உப்பால் தேய்த்து கழுவினால், எண்ணெய் பிசுக்கு நீங்கி, விளக்கு, 'பளிச்'சென்று ஆகி விடும்.

புடவைகளுக்கு அடிக்கும் பால்ஸ்களை, முதலில் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, உலர வைத்து, பின் அயர்ன் செய்து தைத்தால், சாயமும் போகாது; ஓரமும் சுருங்காது.

சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் நீர் போகாமல் அடைத்துக் கொண்டிருக்கிறதா... சிறிது கல் உப்பை, இரவில் போட்டு வையுங்கள். காலையில் நீர் அடைப்பு இருக்காது.

ப்ரிஜ்ஜில் இருக்கும் ப்ரிசரில், சிறிது கல் உப்பை துாவி வைத்தால், ஐஸ் கட்டி டிரேக்களை எளிதில் எடுக்கலாம்.

 சட்டைக் காலர்களில் அழுக்கு படிந்திருந்தால், சிறிது பொடி உப்பை, அழுக்கு உள்ள பகுதிகளில் பூசி, சிறிது நேரம் கழித்து, பிரஷ்ஷில் தேய்த்தால், அழுக்கு நீங்கி விடும்

 இரும்புப் பொருட்களில் துருப்பிடித்திருந்தால் அவற்றின் மேல் உப்பு கொண்டு தேய்த்தால் பளபளப்பாகிவிடும்.

 பட்டுத் துணிகளைத் துவைக்கும் போது நீரில் சிறிது உப்பைக் கலந்து கொண்டு அதில் துணிகளை அலச வேண்டும். பட்டுத்துணியின் மிருதுத் தன்மையும் நிறமும் மாறாமல் இருக்கும்.

 வீட்டில் தரையைக் கழுவும் போது சிறிது உப்பை நீரில் கலந்து கழுவினால், தரை காய்ந்த பின்பு ஈக்கள் தரையில் மொய்க்காது.

 சுத்தமான நெய்யில் ஒரு சிறு கரண்டி அளவு உப்பைப் போட்டு முழுவதையும் சூடுபடுத்தி வைத்தால் நெய் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

 சமையல் பாத்திரங்களில் வெங்காய வாசனை போகாமல் இருந்தால் உப்பு கலந்த சுடுநீரில் அப்பாத்திரத்தைக் கழுவினால் அந்த வாசனை போய் விடும்.

 நீண்ட பயணத்தால் கால் களைப்பு ஏற்பட்டு இருந்தால் சுடுநீரில் சிறிது உப்பைப் போட்டு அந்த உப்புச் சுடுநீருக்குள் கால் பாதங்களைச் சிறிது நேரம் வைத்து இருங்கள். கால் களைப்பு காணாமல் போய் விடும்.

 துணியில் மைக்கறை அல்லது இரத்தக்கறை இருந்தால் அந்தக் கறையின் மேல் உப்பைத் தேய்த்துச் சுடுநீரில் அலசுங்கள் கறை அகன்று விடும்.

பாம்பு, பூரான் போன்ற வல்லூறுகள் வராமலிருக்க வீட்டை சுற்றி கல்லுப்பினை முன்னோர்கள் தூவினர் என்பது பலர் அறிந்ததே..

 கடுகு எண்ணெய்யில் உப்பைக் கலந்து பல் துலக்கினால் பல் உறுதி பெறும்.

 குக்கரின் அடியில் படிந்திருக்கும் கரையைப் போக்க, வெறும் குக்கரை அடுப்பில் வைத்துச் சூடேற்றுங்கள். பின்னர் உப்புத் தூளை உள்ளே போட்டு சிறிது நேரத்தில் இறக்கி அடிப்பாகத்தைக் சுத்தம் செய்தால் கரை இருக்காது....!!!

Tuesday, 25 May 2021

தான பத்திரம் தான செட்டில்மெண்ட்


 
தான பத்திரம் தான செட்டில்மெண்ட்  தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல் முற்றிலும் இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படும் பத்திரம் தான பத்திரம் ஆகும்
இதற்கு கிரையம் செய்வதற்கு வாங்குவது போல தானம் செய்யப்படுகின்ற இடத்தின் அல்லது கட்டிடத்தின் அரசு மதிப்பீட்டில் 8% தொகைக்கு பத்திரம் வாங்க வேண்டும்.

தான செட்டில்மெண்ட்

தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவுகளுக்குள் செய்து கொள்ளும் சொத்துரிமை மாற்றத்திற்கு பயன்படும் பத்திர பதிவுமுறை தான செட்டில்மெண்ட் ஆகும்
இதன் மூலம் தன்மீது காட்டுகின்ற அன்பு, பரிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் தனக்குச் சொந்தமான சுய சம்பாத்திய சொத்தை அல்லது தனக்குச் சொந்தமான தனிப்பட்ட சொத்தை தனக்குச் சொந்தமான குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் எழுதி வைக்க முடியும்
இதற்கு அந்த சொத்தின் அரசு மதிப்பீட்டின் தொகையில் ஒரு சதவீதம் தொகை அல்லது அதிகபட்சம் ரூபாய் 25,000/- தொகைக்கு பத்திரம் வாங்கினால் போதும்
ஒருவர் தன் சொத்துக்களை,தான் உயிரோடு இருக்கும் காலத்திலேயே தனது உறவுகளுக்கு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த சொத்தைப் பெறுபவர் “குடும்ப உறவினராக” இருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்கிறது

குடும்ப உறவினர்கள் செட்டில்மெண்ட்

குடும்ப உறவினர் என்றால் தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை இவர்கள் மட்டும்தான் “குடும்ப உறுப்பினர்கள்” என்று இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்லி உள்ளது;

செட்டில்மெண்ட் பணம் கொடுக்க வேண்டுமா?

தான செட்டில்மெண்ட் மூலம் ஒரு சொத்தை பெறுபவர் யாருக்கும் எந்தவிதமான தொகையும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த முறையில் ஒரு சொத்தை பெறுபவர்கள் மீது அவருடன் பிறந்தவர்களாக இருந்தால்கூட எந்தவிதமான வழக்கும் பதிவு செய்ய முடியாது.

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா?

ஒருவர் தனக்கு மட்டும் சொந்தமான சொத்தையே தான செட்டில்மெண்ட் செய்ய முடியும். பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியாதுm  அப்படிச் செய்தால் அது செல்லாது மற்ற வாரிசுகள் வழக்குத் தொடுக்கலாம்.

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதுவதற்கு முன்னால்

செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவதற்கு முன்னால், சில சட்ட நுணுக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டு எழுதவேண்டும்; பொதுவாக ஒருவர் தன்னுடைய சொத்தை, செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தினருக்கு எழுதிக் கொடுத்துவிட்டால், பின்னர் அந்த பத்திரத்தை ரத்து செய்யவே முடியாது
இதனைத் தெரிந்து கொள்ளாமல், ஏதோ ஒரு எண்ணத்தில், யாரோ ஒருவருடைய தூண்டுதலின் பேரில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி விடுகின்றனர்
பின்னர், வாழ்க்கையில் ஏதோ ஒரு மன வருத்தம் ஏற்பட்டு, அதனை ரத்து செய்ய முயற்சி செய்கிறார்கள்; இப்படி ரத்து செய்ய அவர்களுக்கு அதிகாரம் சட்டத்தில் இல்லை
சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பின் அடிப்படையில், பத்திரப் பதிவு அலுவலகங்கள், இவ்வாறான செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என அறிவுறுத்தி உள்ளது

செட்டில்மெண்ட் சட்டம் என்ன சொல்கிறது?

ஒரு சொத்தில், ஒருவர் தனக்குள்ள உரிமையை வேறு ஒருவருக்கு எழுதிக் கொடுத்து விட்டால், அந்த சொத்தில் அவருக்கு இருந்து வந்த உரிமை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது
ஆகையால், அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பின்னாளில் ரத்து செய்ய எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை என்பதுதான் சட்டம்; ஆனால், சிலர் “என் சொத்தை, நான் தானமாகத்தானே அப்போது கொடுத்தேன்; இப்போது எனக்கு விரும்பம் இல்லை என்பதால், அதை இப்போது ரத்து செய்யப் போகிறேன்! என்று நினைக்கிறார்கள்
ஒருவர் தான் விற்ற சொத்தை எப்படி திரும்ப வாங்க முடியாதோ, அதேபோலத்தான், ஒருவர் தானம் கொடுத்த சொத்தையும் திரும்ப வாங்க முடியாது

உயிலுக்கும் தான செட்டில்மெண்டுக்கும் உள்ள வித்தியாசம்

தான செட்டில்மெண்ட் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்த உடனேயே அதனை எழுதிக் கொடுக்கப்பட்டவருக்குச் சொந்தமாகிவிடும்
எழுதிக் கொடுத்தவர்க்கு எந்த உரிமையும் இல்லாமல் போய்விடும். அவரே நினைத்தாலும் அதனை ரத்து செய்யவே முடியாது
உயில் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்தாலும், செய்யாவிட்டாலும் அந்த உயிலை எழுதியவர் இறந்த பிறகுதான் அமுலுக்கு வரும்
உயிலை எழுதியவர் அதனை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை உயிலை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அதனை எத்தனைமுறை வேண்டுமானாலும் மாற்றி மாற்றி எழுதிக் கொள்ளலாம்
ஆகையால் உயிலைப் பொறுத்தவரை கடைசியாக எழுதப்பட்ட உயிலே செல்லு

மனிதன் தன் மரணகாலத்தை உணரும் குறிகள்


வியாசரே! முன்பொரு சமயம் பார்வதிதேவியும் பரமசிவனும் உரையாடும்போது பஞ்சப்பிரம விதானத்தைப் பற்றிச் சிவபெருமான் கூறி வந்தார். அப்போது பார்வதியார் விரும்பியபடி பிண்ட உற்பத்தி முதலிய கர்ப்ப அவஸ்தைகளை எடுத்துரைத்தார். பிறகு உமாதேவி அப்பெருமானை நோக்கி "அழியக் கூடிய மனித உடலின் முடிவு காலத்தையும் முக்தி அடையும் வழியையும் விளக்கியருள வேண்டும். காலச் சக்கரத்தைப்பற்றி ஒரு சந்தேகம் இருக்கிறது. தங்கள் ஆயுட்கால முடிவை மனிதர்கள் முன்னரே அறிந்துணர்ந்து தங்கள் திருவடித் தாமரைக்குப் பக்தி செய்ய வேண்டுவதால் அதைத் தெரிந்து கொள்ளக்கூடிய வழியைச் சொல்லவேண்டும்" என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான் கூறலானார்.

தேவி! நிலம், நீர், நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களில் அம்சமான உடலை எடுத்த மனிதர்கள் மரணக்குறிப்பை அறிந்து புகழைச் சம்பாதிக்கும்படியான வழிமுறைகளைச் சொல்லுகிறேன் கேள். சுந்தரியே! தேகம் எல்லாம் வெளுத்தும் காதுகள் கண்கள் மூக்கு முதலியன, ஓசை, ஒளி நாற்றங்களை அறியச் சக்தியற்றும் இருக்கும் மனிதன் ஆறு மாதத்தில் மரிப்பான். எந்தச்சப்தத்தைக் கேட்டாலும் அது மிருக சப்தத்தைப் போலக் கேட்டால் அவன் ஆறு மாதத்தில் மரணமடைவான். சூரிய சந்திரமண்டலங்கள் கருத்திருக்க கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான். இடது கை ஏழுநாள் துடித்தாலும் சர்வாங்களும் துடித்து நாவு உலர்ந்தாலும் அவன் ஒரு மாதத்தில் உயிர் துறப்பான். நாவின் வழி வாதபித்த கபங்கள் ஒழுகப்பெற்றவன் ஒரு பக்ஷத்தில் மடிவான். நெஞ்சும் வாயும் உலரப் பெற்றவன். ஆறு மாதத்தில் உயிர் நீப்பான். நாத்தடித்தும் குளிர்ச்சியால் பல்லிறுகக் கட்டப் பெறுவானாயின் ஆறு மாதத்தில் இறப்பான். தண்ணீர் நெய் எண்ணெய் கண்ணாடி முதலியவற்றால் தன் தேகச்சாயையைக் காணாமல் இருந்தாலும் அவன் ஆறு மாதத்தில் இறப்பான் தன் தேகச்சாயயைக் காணாவிட்டாலும் சிரசில்லாத முண்டமாகக் காணப்படினும் ஒரு மாதத்தில் இறப்பான். இதுவரை அங்கத்தைப் பற்றிச் சொன்னேன்.
இனி வெளிக் குறியைப் பற்றி விவரிக்கிறேன்; சந்திர சூரிய மண்டலங்களைக் காந்தியின்றி ஆடையால் மூடப்பட்டதுபோல மங்கலாகக் காணும் மனிதன் பதினைந்து நாட்களில் உயிர்துறப்பான். அருந்ததியை ஆகாயத்தில் வாகனமில்லாமலும் சந்திரனிடம் களங்கமின்றியும் இரவில் நட்சத்திரங்கள் பிரகாசமின்றியும் மேகமின்றி மின்னவும் கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான். திசைகளைக் கண்டு மயங்குவோன் ஆறு மாதத்தில் உயிர் துறப்பான். ஆகாயத்தில் இரவுக் காலத்தில் வானவில்லைக் கண்டவனும் பகற்காலத்தில் விண் வீழ்கொள்ளி விழக் காண்பவனும்; காகம் கழுகு முதலியன தன் தலைக்கு மேல் வட்டமிடக் கண்டவனும் ஆறு மாதத்தில் இறப்பான்.

ஆகாய வழியில் சப்தருஷி மண்டலத்தையும் சுவர்க்கமாகிய ஸ்வாதி மார்க்கத்தையும்  எவன் காணவில்லையோ, அவன் ஆறு மாதத்தில் இறப்பான். பருவம், அமாவாசையின்றியே சந்திர சூரியமண்டலத்தை இராகு மறைப்பது போலக் காண்பவனும் திக்குகள் சுழலக் காண்பவனும் ஆறு மாதத்தில் அழிவான். நீல வர்ணமான ஈக்கள் சாதாரண உடம்பை மொய்க்கக்கண்டவன் ஒரு மாதத்தில் மரணமடைவான். தன் சிரசில். கழுகு, காகம், மாடப் புறா முதலியன உட்கார கண்டவன் ஒரு மாதத்தில் உயிர் நீப்பான் ஆகாயத்தில் கரிய யானை காணப்பட்டால், ஆறுமாதத்தில் மரிப்பான். நிறம் ஐந்தும் சுவை ஆறும் பிறழ்வுற்றுக் காணப்படின் ஆறு மாதத்தில் இறப்பான். நாவின்முனையும் மூக்கின் முனையும் புருவ நடுவும் காணாவிடில் மூன்று மாதத்தில் இறப்பான். சேற்றிடையில் மிதித்த பாதச்சுவடு சிதைவுற்றுத் தோன்றுமானால் மரணஞ்சமீபத்தவனாவான். நான்கு புறத்திலும் வானவில் தோன்றினாலும் பகலில் கண் எதிரில் பேயாடினாலும் ஒரு மாதத்தில் உடல் துறப்பான். பூரித்த தேகமுடையோர் இளைத்தாலும் இளைத்த தேகமுடையவர் பூரித்தாலும் ஒருமாதத்தில் உடல் நீப்பார்கள் பேய், பூதம், நரி, கழுதை, அசுரர்; கருங்காக்கை புலி, செந்நாய், பருந்து குரங்கு முதலியன தன்மேல் ஏறவும் அவை தன்னைத் தின்னவும் அவற்றைத் தான் தின்னவுமாகிய இவற்றில் ஒன்றைக் கண்டவன் பதினைந்து நாட்களில் பூவுலகிலிருந்து அகல்வான். குரங்கின் மேலேறிக் கொண்டு கீழ்த்திசை நோக்கிச் செல்வதாகக் கனவு கண்டவன் ஒருபட்ச காலத்தில் இறப்பான்.

ஒருவன் தன் மரண தினத்தை அறிந்து கொள்ள விரும்புவானாயின் தூய நீராடி, புனிதமான ஆடையணிந்து நித்திய கர்மத்தை முடித்து சுக்கில பட்சமும் அமர பட்சமும் என்று முறையே சொல்லப்படுகிற வலது கையையும் இடது கையையும் தண்ணீரால் அலம்பி, சுத்தமான துணியால் துடைத்து, சுகந்தமான சந்தனத்தை இருகைகளிலும் எடுத்துக் கொண்டு, உள்ளங்கை இரண்டினாலும் சிறிது நேரம் குழைத்து கைகூப்பிக் கும்பிட்டவனாய் உமாபதியை ஒருமித்த மனத்துடன் தியானித்து நூற்றியெட்டுதரம் தேவி மந்திரத்தை ஜபித்து, கைகளைப் பிரித்து நோக்க விரல்களின் கணுக்கள் ஒன்றில் கருமை நிறமாகக் காணப்படும், சிறு விரல் முதல் பெருவிரல் இறுதியாக கணுக்கள் ஒவ்வொன்றிற்கும் மும்மூன்றாய் பதினைந்து துதிகள். ஆகையால் எந்தக் கையில் கருமை தோன்றுகிறதோ அந்தக் கைக்கு உரிய பக்ஷத்தில் அவன் இறப்பான் என்றும் கட்டை விரலின் அடிக்கணுமுதல் மேல் நோக்கிப் பிரதமையாதி திதிகளாக எண்ணிக்கொண்டு செல்கையில் எந்தத் திதியில் குறி காணப்படுகிறதோ அந்தத்திதியில் அவன் இறப்பான் என்று தெரிந்து கொள்ளலாம்.

இனி சுவாசத்தினால் (மூச்சுக் காற்றினால்) உணரத்தக்க மரணக் குறிகளாவன; க்ஷணம், துடி, வலம் நிமிஷம், காஷ்டைகலை, முகூர்த்தம், இரவு பகல், பக்ஷம், மாதம், ருது வருஷம் யுகம் கற்பம் மகா கற்பம் என்னும் சிரமத்துடன் இம்முறையாகச் சிவ பெருமான் சங்கரித்து வருகிறார். நாசி வழியில் ஓடும் சுவாசமானது பிங்கலை வழியாக ஐந்து தினங்கள் செல்லுமாயின் மூன்று ஆண்டுகளிலும் பத்து தினங்கள் ஓடுமாயின் இரண்டு வருஷத்திலும், பதினைந்து தினங்கள் ஓடுமாயின், ஒரு வருஷத்திலும் உடல் நீப்பான் இரண்டு நாசிகளிலும் இருபது நாள் சுவாசம் ஓடுமாயின் ஆறு மாதத்திலும் இருபத்தைந்து தினங்கள் ஓடுமாயின் மூன்று மாதத்திலும் இருபத்தேழு நாட்கள் ஓடுமாயின் ஒரு மாதத்திலும் உயிர் விடுவான். வலது நாசி வழியாக ஆறு தினங்கள் சுவாசம் சென்றால் இரண்டு வருஷம் ஏழு மாதம் பதினெட்டு நாள் ஜீவிப்பான் எட்டு தினங்கள் சென்றால் இரண்டு வருஷம் நான்கு மாதம் இருபத்து நான்கு நாட்கள் வாழ்வான். ஒன்பது தினங்கள் சென்றால் ஒருவருஷம் ஏழுமாதம் பன்னிரண்டு தினங்கள் பிழைத்திருப்பான். பதினோரு தினங்கள் சென்றால், ஒன்பது மாதம், எட்டு நாட்கள் உலகில் இருப்பான் பன்னிரு தினங்கள் சென்றால், ஏழு மாதம் பன்னிரண்டு தினங்கள் பிராணனோடு இருப்பான். இருபத்து மூன்று தினங்கள் சென்றால் நான்கு மாதம் ஆறுநாட்கள் வாழ்வான். முப்பது தினங்கள் சென்றால் ஒருமாதம் பத்துநாள் ஜீவித்திருப்பான் முப்பத் தொரு நாட்கள் அப்படியே சென்றால் ஐந்து தினங்கள் பிழைத்திருப்பான். வாய்வழியே சுவாசம் செல்லுமாயின் மூன்று தினங்களில் இறுதி மூச்சை விடுவான். இது தான் காலச்சக்கிர கிரமம். இதை நான் உனக்குச் சொல்லி விட்டேன்! இவ்வாறு சிவபெருமான் பார்வதிதேவிக்குத் திருவாய் மலர்ந்தருளியபடியே ஸனத்குமார முனிவர் வியாசருக்குக் கூறினார்.
 

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :



1.விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

2.குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.

3.கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

4.இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

5.தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

6.தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

7.மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டுகள் வலிக்காது. தேயாது.

8.தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

9.தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்

10. தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.

Monday, 24 May 2021

பிரயோபவேசம், தலயாத்திரை, சுவர்க்கம்


ஒருவன் ஆகார வியவஹாரம் ஒன்றும் செய்யாமல் நியமத்தோடு தர்ப்பாசயனம் செய்து பகவானையே தியானித்துக் கொண்டு மரித்தால் அவன் வைகுந்தம் அடைவான். எனவே பிரயோபவேசம் பகவானுக்கு உகந்ததாகும். பிரயோபவேசம் செய்த நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வேள்வி செய்த பலன் கிடைக்கும். அவன் உலகியலின் உண்மையையும், வாழ்வியலின் இரகசியத்தையும், தெய்வீக இயலின் மெய்ம்மையையும், உணர்ந்து இனி உயிர் வாழ்க்கை வேண்டியதில்லை என்று, இனி மரித்து விடுவோம் எனத் துணிந்து அதை நல்ல முறையில் பிரயோபவேசம் செய்து நல்லுலகை அடைவான்.

விடு, மனைவி, மக்களை நெடுங்காலம் பிரிந்து, நெடுந்தூரம் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் யாத்திரை செய்பவனுக்குப் பிரம்மாதி தேவர்களெல்லாம் வேண்டியவற்றைக் கொடுக்கிறார்கள். அப்படிச் செய்யும் ஒருவன் வழியில் மரித்தால் அவன் சுவர்க்கம் பெறுவான். மரண காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, ஒருவன், விஷ்ணு க்ஷேத்திரம் ஒன்றில் மரிக்க எண்ணி யாத்திரை செய்ய நடந்தால், அவன் நடக்கும் அடி ஒன்றுக்கு ஒரு பசுவைத் தானம் செய்த பயனை அடைவான். தம்மவர்க்கு உதவி, அன்னியருக்கு உதவி செய்வதை விட தன் பெற்றோர்க்கு, உடன்பிறந்தோர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்பது சிறப்புடைத்து, தந்தைக்குக் கொடுத்தல் உத்தம பிராமணனுக்குக் கொடுத்த தான புண்ணியத்தை விட நூறு மடங்கு கிடைக்கும். தாய்க்குக் கொடுத்தால் ஆயிரம் மடங்கு அதிகம். உடன் பிறந்த ஆண், பெண்களுக்குக் கொடுத்தலும் அளவற்ற புண்ணியம் தரும்.

நல்ல ஒழுக்கத்திலும், நன்னெறியிலும் ஒழுகி, உயிரினங்களிருந்து உற்ற சமயத்தில் உதவி, பூதானம் செய்பவனைக் கண்டு புவிமகள் மகிழ்ச்சி அடைவாள். பூதானம் செய்தவனும், புனலில் மூழ்கியவனும், பஞ்சாக்கினி நடுவில் இருந்து தவம் செய்தவனும், வேள்விளைச் செய்தவனும், போரில் புறமுதுகிடாமல் முன்னேறியவனும் இகத்திலும், பரத்திலும் இன்பம் அடைவான்.

அயோத்தி, காஞ்சி, மதுரை, மாயா, காசி, அவந்தி, துவாரகா ஆகிய ஏழில் ஒன்றில் மரித்தால் நிரதிசய இன்ப வீடடைவான். சந்நியாசம் பெற்றவன், விஷ்ணு பக்தி செய்பவன், ஸ்ரீராம, கிருஷ்ண நாம உச்சாடனம் செய்வோர், அவ்வாறு செய்து கொண்டே இருக்கையில் மரித்தால் பேரின்ப வீடு அடைவர். திருத்துழாய் பயிரிட்டவன், அதற்கு நீர் பாய்ச்சியவன் நல்லுலகடைவான். ஆபத்திலுள்ள பசு, பிராமணன், குழந்தைகளைத் தன்னுயிரைக் பணயம் வைத்த காப்பாற்றுபவன் தேவர்கள் எதிர் கொள்ள சுவர்க்கம் அடைவான். ஸ்ரீரங்கம், காசி, குருக்ஷே ஷத்திரம், பிருகு க்ஷேத்திரம், பிரபாசதீர்த்தம், காஞ்சி, புஷ்கரம், பூதேஸ்வரம் ஆகிய புனித நகரங்களில் மாண்டவன் மோட்சமடைவான். வேத சாஸ்திரங்களை உணர்ந்தவர், கன்னிகை, பூமி, கிருகம், பசு, திலம், யானை, தானம் கொடுத்தோர், கிணறு, நடைவாவி, குளம், தேவாலயம் புதுப்பித்தோர் இவற்றைத் தோற்றுவித்தோரைக் காட்டிலும் அதிக புண்ணியம் பெற்று விண்ணுலகடைவர்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா
கருட புராணம் || தண்டனைகள்
---------------------------------------------
****************
அவீசி
----------
பொய்சாட்சி சொல்தல் பிறரைக் கெடுப்பது அடுத்தவர் மீது பழி போடுவது
*
நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்தப்படும்
**
கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

2. இறைவனிடம் பக்தன் எதையும் கேட்கக் கூடாது என்கிறது கருடபுராணம். இப்படி சொல்வது நமக்குப் புதுமையாக இருக்கும். நாம் விரும்பியதை எல்லாம் கேட்பதற்குத் தானே கடவுள் இருக்கிறார் என்று நினைக்கிறோம்.

ஒரு குழந்தைக்குத் தாய் பார்த்து பார்த்து, பணிவிடை செய்வாள். தூங்கும் குழந்தையைக் கூட எழுப்பி, பாவம் பசியோடு குழந்தை தூங்குகிறதே! என்று பாலூட்டுவாள். அதே போல் தான் இறைவனும்! அவர் தாயன்போடு நம்மை காத்தருள்கிறார். இந்த நம்பிக்கை ஒருவனுக்கு ஆழமாக இருந்தால், இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்கத் தோன்றாது.

பக்தனுக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் இறைவனைத் தவிர வேறொருவர் இல்லை. இதை உணர்ந்தவர்கள், இறைவா! உன் திருவடியில் நிரந்தரமான பக்தியை எனக்குக் கொடு! என்று மட்டும் கேட்பார்கள்

அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே! பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது.

“அவன் இம்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேர்க்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு எதையுமே செய்ய இயலாது.

“மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

“கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான்.

“இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் “பக்குவபதம்” என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து ‘துக்கதம்’ ஊரை அடைந்து உண்பான்.

“விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில், ‘யமகிங்கர்களே! என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன்...’ என்று அழுவான்.

“அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி, ‘முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும்’ என்று அறைவார்கள். ‘ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன்...’ என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான்.

“யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும் ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார்.
உங்களின் உறவுகளை சிறு காரணத்திற்காக வெறுக்காதிர்கள்... விலக்காதீர்கள்.
அவர்களிடம் தவறு இருக்கிறதா?
உங்கள் கண்களை மூடிக்கொண்டு அவர்களுடன் கழித்த இனிமையான தருணங்களை, நாட்களை மனதால் அசை போடுங்கள்.....
வாழ்வில் சரியாக இருத்தலை விட அன்பாக இருத்தலே முக்கியம்.
நீங்கள் உங்களையே அணைத்துக்கொள்ள முடியாது...
உங்கள் தோள்களிலே அழவும் முடியாது...
வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் வாழ்வதே...
அதனால் உங்களை நேசிப்பவரை இழக்காதீர்கள்.
உறவுகளை பணத்தின் மொழியால் புரிந்து கொள்ள
ஏன் எனில் நம் எல்லா முதலீடுகளும் லாபம் கொடுக்காது. ஆனால் நம்மை உயர வைக்கும்.
குடும்பம், நட்பு, உறவுகள் எல்லாம் அது போன்ற ஒரு முதலீடுகளே....
பொறாமை , கோபம் , பேராசை இல்லாத வாழ்க்கைப் பாதையில் நீங்கள் பயணித்துப் பாருங்கள்,
நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு அழகான அர்த்தம் புரியும்...
சாதாரண நிலையில் உள்ளவரையும் மதிப்பை உயர்த்துவது பொருள் ஆகும் அந்த பொருளை விட சிறந்தது இல்லை

ஆதியும் நீயே
அந்தமும் நீயே
உணர்பவன் தானே
உனை சேர்வான்.
வேண்டியது நீ

வேண்டுகின்றேன் உனை

வேண்டியது என்றும்

வேறில்லை

வேதனை தீர்த்து விடு

வேங்குழல் நாதனே

வேங்கடவா
உன் அருள் கொடையில்
உலகம் இயக்கம்
உன் அன்பின் அரணில்
உயிர்கள் மயக்கம்
உன்னாலே மாதவா யாம்
உயர் பேறு பெற்றோம்

ஆசௌம், துர்மரணம், குழந்தை பாபங்கள்

18 புராணங்கள்
ப்ரம்ம புராணம்
பத்ம புராணம்
விஷ்ணு புராணம்
சிவ புராணம்
பாகவத புராணம்
நாரத புராணம்
மார்க்கண்டேய புராணம்
அக்னி புராணம்
பவிஷிய புராணம்
பரம்மவை வர்த்தன புராணம்
லிங்க புராணம்
வராஹ புராணம்
ஸ்கந்த புராணம்
வாமன புராணம்
கூர்ம புராணம்
மச்ச புராணம்
கருட புராணம்
பிரம்மாண்ட புராணம்

இன்றுடன் கருட புராணம் பகுதி நிறைவுபெறுகிறது
( யார் மனதையும் புண்படுத்தும் அபிப்பிராயம் இல்லை)
நாளை முதல்
வராஹ புராணம் ஆரம்பம்.
==============
பிராமணனுக்குப் புத்திரன் பிறந்தாலும், பிராமணன் இறந்தாலும், தாயாதிகளுக்கு பத்து நாள் வரையில் தீட்டு (ஆசௌசம்) உண்டு. ஆசௌசமுடையவர்கள் ஓமங்கள், தேவ ஆராதனை செய்யக்கூடாது. அந்த நாட்களில் அவர்கள் வீட்டில் யாரும் உணவருந்தக் கூடாது. அகால மரணம், அயல்நாட்டில் மரணம், மிருகங்களால் மரணம் ஆகியவற்றிற்கு உடனே கருமம் செய்யக்கூடாது. கிரியைகள் துவங்கப்படுகிற அன்று முதலே ஆசௌசம் உண்டாகும். ஒருவன் இறந்த செய்தி கேட்டவுடன் ஸ்நானம் செய்துவிட வேண்டும்.

திருமணக்கோலம் கொண்டிருக்கும் காலத்திலும், யாகஞ்செய்யும் காலத்திலும், உற்சவம் செய்ய கங்கணம் பூண்டிருக்கும் காலத்திலும் ஆசௌசம் இல்லை. ஓர் ஆசௌசம் நேர்ந்த காலத்தில் இடையிலே வேறொரு ஆசௌசம் வந்தால் முன்னதாக வந்ததுடன் பின்னர் வந்த ஆசௌசமும் தாயத்தார்க்கு நிவர்த்தியாகும். பசு, பிராமணர், மங்கையரைப் பாதுகாக்கும் விஷயத்திலும், யுத்த பூமியிலும், ஒருவன் தன் உயிரை இழந்தால் அவனைச் சேர்ந்தவர்களுக்கு ஒருநாள் மட்டுமே ஆசௌசம் உண்டு.

துர் மரணம் அடைந்தால்!

முந்நூற்று அறுபது பலாச இலைகளின் காம்புகளால் மரித்தவனது உடலைப் போல் ஒரு பிரதிமை செய்ய வேண்டும். சிரசுக்கு நாற்பது, கழுத்துக்குப் பத்து, மார்புக்கு இருபது, வயிற்றுக்கு இருபது, தொடைகளுக்கு நூறு, இமைக்கு இருபது. இரு கரங்களுக்கு நூறு, முழந்தாள்களுக்கு முப்பது, இனக்குறிக்கு நாலு, விருஷணங்களுக்கு ஆறு, கால்களுக்குப் பத்தும் வைத்து; மறுபடியும் சிரசுக்குத் தேங்காய், முகத்துக்குப் பஞ்சரத்தினம், நாவுக்கு வாழைப்பழம், மூக்கிற்கு எள்ளுப் பூவும், காதுக்கு எள்ளும், நரம்புக்குத் தாமரைத் தண்டும், தசைக்கு அன்னமும், இரத்தத்திற்குத் தேனும், மயிர்களுக்குச் சவுரியும், தோலுக்கு மான்தோலும், ஸ்தனப் பிரதேசத்திற்குக் குன்றிமணியும், நாபிக்குத் தாமரைப் பூவும், விருஷணர்களுக்குப் பனங்காயும், வைத்து சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து சாஸ்திர முறைப்படிக் கிருத்தியங்கள் செய்தால் துர்மரணம் அடைந்தவன் நற்கதி அடைவான்.

குழந்தைகளின் பாபங்கள்

நான்கு முதல் பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் செய்கிற பாபங்கள் அவர்களுடைய பெற்றோரையே சேரும். பெற்றோர்கள் இல்லை எனில் காப்பாளர்களைச் சேரும். அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் பாவம் குழந்தைகளுக்குச் சேராது.

ஓம் பக்ஷ ராஜாய வித்மஹே
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருடப் ப்ரசோதயாத்!

[கருட புராணம் முற்றிற்று.]

தீராத குடும்ப பிரச்சனை உள்ளதா? பித்ரு தோஷம் உள்ளதா? எவ்வாறு அறியலாம்?

குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்துருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்துருதோஷம், இந்த தோஷம் நமக்கு உள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.

ஜாதகத்தில் கண்டறிவது:
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்துருதோஷம் உண்டு.

பரிகாரம்:
ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், திரு வெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம்.

திலஹோமம்:
குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டும் திலஹோமம் செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இயற்கை மரணம் அடைந்திருந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.

தோஷத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் :
1.பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இராது.அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.
2. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை.மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.
3. ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
4. கலப்புத்திருமணம், ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

தோஷம் வர பல்வேறு காரணம்:
1.கருச்சிதைவு
2. பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.
3. இளைய தாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.
4. தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.
5. ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர், ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.
6. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயாசென்று சிரார்த்தம் செய்யாவிடில் பித்துரு தோஷம் வரும்.
7. தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்துரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிஷ்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப்பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்துருக்களும், பித்துரு தேவதைகளும் தடை செய்வார்கள்.
பித்துருக்களின் சாபம் கடவுள் நமக்கு தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மையுடையது.

பரிகாரம்:
சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யவும். இந்த அபிஷேகம் அமாவாசையன்று செய்யவும். இந்த அபிஷேகத்தைப்பார்த்த நாள் முதல் உங்கள் பித்துருதோஷம் விலகும்.
சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள்
100 கிராம் பச்சரிசி, அகத்திக்கிரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், 1 வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டிற்கு கொடுக்க பித்துரு தோஷம் நீங்கும். தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும். இதனால் பித்துரு தோஷம் முழுமையாக நீங்கும்.

நடப்புப் பிறவியில் நல்லவராகவும், இறை வழிபாட்டில் ஈடுபட்டவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் இருந்துவிட்டால், முற்பிறவி கர்மவினை அடியோடு அகன்றுவிடும் என்று சொல்ல இயலாது. நல்லவர்களும், ஞானிகளும், ஜீவன்முக்தர்களும்கூட துயரத்தை சந்திப்பது உண்டு!
தீக்குளித்தல், விஷம் அருந்துதல், தூக்குப் போட்டுக் கொள்ளுதல்- இவை துர்மரணமாகும். விபத்து, கொலை ஆகியவற்றை அகால மரணம், அபமிருத்யு என்பர். போரில் மடிந்தவர்கள், துஷ்ட சம்ஹாரங்கள் ஆகியன துர்மரணத்தில் வராது. துர்மரணம் நிகழ்ந்த பின் அதன் காரணத்தை ஆராய்வது வீண்!

கருடபுராணத்தில் சில

உலகில் உள்ள யோனிபேதங்கள் 84 லட்சம். அவை நான்கு பிரகாரமாய் உள்ளது
அவை அண்டசம், உற்பிசம், சராயுசம், சுவேதசம். அந்த நான்கு வகுப்பில்
முட்டையிலிருந்து 21 லட்சம் பறவை முதலியவைகளும்

பூமியிலிருந்து 21 லட்சம் மரம் முதலியவைகளும்

கருப்பையிலிருந்து 21 லட்சம் மனிதர்கள் முதலானவர்களும்

வியர்வையிலிருந்து 21 லட்சம் கிருமி முதலியவைகளும் தோன்றும்.
மனித உடலில் உள்ள 14 உலகங்கள்

உள்ளங்கால் ‌- அதலம்
கணைக்கால்‌ - விதலம்
முழங்கால் - சுதலம்
அதற்கு மேல் - நிதலம்
ஊரு - தலாதலம்
குக்யம் - ரசாதலம்
இடை - பாதாளம்
நாபி - பூலோகம்
வயிறு - புவர்லோகம்
ஹ்ருதயம் - சுவர்லோகம்
தோல் - மகாலோகம்
முகம் - ஜனோலோகம்
நெற்றி - தபோலோகம்
சிரசு - சத்தியலோகம்

கருட பத்து

ஓம் பூரணனே பதிணாறு திங்கள் சேரும் பொருந்தியே யருக்கன்பதி னெட்டுஞ் சேரும்
காரணனே கருமுகில் பொன் மேனி சேரும் கருணை பெரு மஷ்டாட்சரங் கலந்துவாழும்,
வாரணனே லட்சுமியோ டெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயாநேயா,
ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 1

வந்திரமோ அஷ்டசித்து மெட்டுஞ் சேரும் வாழ்கிரக மொன்பது வந்துசேரும்,
கந்திருவர் கணநாத ராசி வர்க்கம் கலைக்கியான நான் வேதங்கலந்து வாழும்
நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித்துன் பாதம் நாளும் போற்ற
அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 2

மூலமுதலோ ரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து மொழியலாமோ,
சீலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும்
காலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே கருணை பெரு மிவ்வெழுத்து நீர்தானாகும்
ஆலவிஷங்கையேந்துங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 3

நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராரா வென்றும்
சவ்வென்றும் ஓங்கார ரீங்கார மாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர்தானாகும்
ஓவ்வென்று ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித்துகந்து போற்ற
அவ்வென்று ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 4

உதிக்கின்ற சிவசொரூபமுனக்கே யாகும் ஓம்-அவ்வும்-உவ்வுங்கிலியும் மென்றே
பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சை முகில் மேனியனே பணிந்தேனுன்னை
விதிக்கிசைந்த மெய்பொருளே அரிகோவிந்தா விளக்கொளிபோல் மெய்த்தவமே
விரும்பித் தாதா
அதற்கிசைந்த நடம்புரியுங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 5

வேதமுதலாயிருந்த சிங்க ரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே செய்தாய்
பூதமுதலாம் பிறவும் புண்ணிய நேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதை புத்ரா
நாதமுதல் விந்துவாயுயிருக் கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வரத பிர்ம
யாதவன் போல் நிறைந்திருக்கும் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 6

முக்கோணம் நாற்கோண மொழிந்தைங் கோண முச்சுடரே யறுகோண மெண்கோணமாகும்
சட்கோண நாற்பத்து முன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகல சித்தும்
இக்கோண மிதுமுதலா வதார மட்டும் இறைய வனாய்த் தானிருந்து ரட்டித்தாலும்
அக்கோண மீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 7

பச்சைமுகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவ தார முண்டு
மச்சமென்றும் கூர்மமென்றும் வராகமென்றும் வாமனென்றும் ராமனென்றும்
பவுத்தனென்றும்
துஷ்டரை யடக்க மோகினி வேடங் கொண்டாய் தோன்றினா யுன்சொரூப மெல்லாம்
அறிவாருண்டோ
அச்சந்தீர்த்தெனையாளக் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 8

வேதியனாய் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்க ரூபமானாய்
சாதியிலே யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருந்தாய் தரணி வாழ்க
சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மைத் துஷ்டரையும் வதை செய்து
லோகமாள்வாய்
ஆதிமுதலோரெழுத்தே நீ கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 9

மாயாவனே ரகுராமா அருகே வாவா வஞ்சனைகள் பறந்தோடநெஞ்சில் வாவா
காயாம் பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா
நாயகனே யென்னாவி லிருக்க வாவா நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா
ஆயர்குலத்துதித்தவனே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 10

முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறனே ஜகநாதா முன்னே வாவா
எப்பொழுதுந்துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப்பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா
ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ நாராயணாவுகந்து வாவா
அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 11

துளபமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப்பொருளே வரத்தைத் தாதா
களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கஞ்சனைமுன் வென்றவனே கருணை தாதா
பழம்பொருளே சிவஜோதி பாக்கியந் தாதா பத்திமுத்தி சித்திசெய்யவுன்பாதந் தாதா
அளவிலா மெய்பொருளே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 12

விஷ்ணுவுக்கு கருடன் தந்த வரம்!


ஆணவமும், அகங்காரமும் கர்வமும் ஒருவன் புகழையும் பெருமையையும் அழித்து, அவனை மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடும் என்பது தர்மநியாயம். ஆனால், தன் ஆணவத்தாலும் கர்வத்தாலும் விஷ்ணுவுக்கே சவால் விட்டு, அவரோடு போரிட்டுத் தோற்றுப் போனாலும், பெறற்கரிய பேற்றைப் பெற்றான் ஒருவன். அவன்தான், பகவான் விஷ்ணுவின் வாகனமாகப் பூஜிக்கப்படும் கருடன்.

#யார்இந்தக்கருடன்?

சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யப முனிவரின் மனைவிகளில் இருவர் கத்ரு, வினதை என்பவர்கள். இவர்கள் இருவரும் சகோதரிகள் என்றாலும், ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டிருந்தனர். ஒருமுறை, அவர்கள் இருவரும் கஸ்யப முனிவரிடம் குழந்தைகள் பெற வேண்டி வரம் கேட்டனர். கத்ரு, தனக்கு எல்லோரும் கண்டு பயப்படத்தக்க வலிமைமிக்க ஆயிரம் குழந்தைகள் வேண்டும் என வரம் கேட்டாள். கஸ்யபரும் வரத்தைத் தந்தார்.
வினதையும் தன் பங்குக்கு வரம் கேட்டாள். எனது சகோதரிக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட வலிமையும் தேஜஸும் ஆற்றலும் மிக்க ஓரிரண்டு குழந்தைகள் பெற, வரம் வேண்டும் என்று கேட்டாள் அவள். அவளுக்கும், அவள் விரும்பியது கிடைக்க வரமளித்தார் கஸ்யப முனிவர்.

சில காலம் கழித்து, கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் குழந்தைகளாகப் பிறந்தன. வினதை கர்ப்பத்தில் இரண்டு முட்டைகள் தோன்றின. அவற்றில் ஒன்றை அவசரமாக உடைத்தாள் வினதை. அதிலிருந்து இடுப்புக்கு கீழே வளர்ச்சி இல்லாத ஒரு குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே தன் அவசரத்தால் தன்னை ஊனமாக்கிய தாயை, அவள் கத்ருவின் அடிமையாக வாழ்வாள் எனச் சாபமிட்டது குழந்தை. அந்தக் குழந்தைதான் அருணன் எனப் பெயர் பெற்று, சூரிய பகவானின் தேரோட்டியாகி இன்றும் வணங்கப்படுகிறார்.

சிறிது காலம் கழித்து, இரண்டாவது முட்டையிலிருந்து மனித உடலுடனும். கழுகின் தலையுடனும் ஓர் அபூர்வ குழந்தை பிறந்தது. கோடி சூர்யப் பிரகாசத்துடனும். எவராலும் வெல்லமுடியாத உடல் பலத்துடனும் தோன்றிய அந்தக் குழந்தைதான் கருடன். அண்ணன் தந்த சாபத்தால் அடிமையான தாயை விடுதலை செய்யப் பிறந்த மகன் இவன்.

ஒருமுறை, கத்ருவுக்கும் வினதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் வானத்தில் பார்த்த உச்சைசிரவஸ் என்ற தேவலோகக் குதிரையைப் பற்றிய விவாதம் அது. உச்சைசிரவஸ் முழுவதுமாக வெள்ளை நிறமானது என்றாள் வினதை. இல்லை இல்லை.... அதன் உடல்தான் வெள்ளை நிறம், ஆனால் வால் கறுப்பானது என்று வேண்டுமென்றே கூறினாள் கத்ரு.

இருவரில் யார் சொன்னது சரியோ, அவர்களே ஜெயிப்பார்கள்; மற்றவளும் அவள் குழந்தைகளும் ஜெயித்தவளுக்கு அடிமையாக வேண்டும் என்பது பந்தயம்! கத்ருவுக்கு தான் சொன்னது பொய் என்று தெரிந்தும், பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டாள். எப்படியும் வினதையை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தன் பிள்ளைகளான நாகங்களில் கருமை நிறம் கொண்டவற்றை அழைத்து, உச்சைசிரவஸின் வாலைச் சுற்றிக்கொள்ளும்படிக் கட்டளையிட்டாள். அவர்களும் அதன்படியே செய்தார்கள். பிறகு கத்ருவும் வினதையும் உச்சைசிரஸ் குதிரையை உற்றுநோக்கினார்கள். அதன் வால் கறுப்பாகத் தெரிந்தது. தான் தோற்றுவிட்டதாகக் கருதி, தோல்வியை ஒப்புக்கொண்டாள் வினதை. தோல்வியை ஒப்புக்கொண்டதால், வினதையும் அவள் குழந்தைகளான அருணன், கருடன் ஆகியோரும், கத்ருவுக்கும் அவள் பெற்ற நாகங்களுக்கும் அடிமையாயினர்.

இப்படியே சில காலம் கழிந்தது. தாங்கள் ஏன் நாகங்களுக்கு அடிமையாக வாழ்கிறோம் என்பதைத் தாயிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட கருடன், அதிலிருந்து விடுபட வழி உண்டா என்றும் யோசித்தான். தன் சகோதரர்களான நாகங்களை அழைத்து, என்ன செய்தால் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று கேட்டான். மரணமில்லாமல் வாழ வேண்டுமென விரும்பிய கத்ருவும் நாகங்களும் தேவலோக அமிர்தத்தை எடுத்து வந்து எங்களுக்குக் கொடுத்தால்தான் நீங்கள் எல்லோரும் அடிமைத்தளையில் இருந்து விடுபட முடியும் என்று கூறினர்.

அதையடுத்து தேவலோகம் சென்றான் கருடன். இந்திரனைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி, தேவலோக அமிர்தத்தைத் தருமாறு கேட்டான். நாகங்கள் மரணமில்லா வாழ்வு பெற்றால் உலகம் என்னாவது என்று யோசித்த இந்திரன். அமிர்தத்தைத் தர மறுத்தான்.

தன் பலத்தில் நம்பிக்கை கொண்டிருந்த கருடன், இந்திரனுடன் யுத்தம் செய்து, அவனை வென்று அமிர்த கலசத்தை அடைய விரும்பினான். அதையடுத்து, இருவரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். கருடனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தில் கருடனே வென்றான். தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு நாகங்களுக்குக் கொடுக்கப் புறப்பட்டான்.

இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, அதன்பின்னரும் சும்மா இருக்க விரும்பவில்லை. அமிர்த கலசத்துடன் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த கருடனை வழிமறித்தார். விஷ நாகங்களுக்கு அமிர்தம் தந்தால், அவை மரணமில்லாமல் வாழ்ந்து, மனித இனத்தையும் தேவர்களையும் அழித்துவிடும். இது வேண்டாம் என அறிவுரை கூறினார்.

ஆனால், கருடனோ எதற்கும் செவி சாய்க்கவில்லை. அடிமைத் தளையிலிருந்து விடுபடவேண்டும் என்ற வெறியில் அவன் விஷ்ணுவையே துச்சமாகக் கருதினான். இந்திரனை வென்ற ஆணவத்தில், துணிவிருந்தால் என்னோடு போர் புரிந்து ஜெயித்து, அதன்பின்பு அமிர்த கலசத்தை நீங்களே தேவலோகத்தில் கொடுத்துவிடுங்கள் என்று விஷ்ணுவுக்கே சவால் விட்டான்.

சற்று நேரம் விஷ்ணு யோசித்தார். தன் தாயின்மீது கொண்ட பக்தியால் தேவேந்திரனையே எதிர்க்கத் துணிந்த கருடனின் வீரத்தை எண்ணி வியந்தார். அதோடு, அமிர்த கலசம் கையில் இருந்தும், அந்த அமிர்தத்தை தான் அருந்தி அழியாநிலை பெற விரும்பாமல் சென்றுகொண்டிருக்கும் அவனின் தன்னலமற்ற தன்மையை மனத்தால் பாராட்டினார். கருடனுக்குள் ஆணவமும் அகங்காரமும் இருந்தாலும் அவனுக்குள் இருந்த உயர்ந்த பண்புகளையும், அவனது விடுதலை வேட்கையையும் கண்டு வியந்த விஷ்ணு அவனோடு போரிடுவதைப் பெருமையாகக் கருதினார்.

விஷ்ணுவுக்கும் கருடனுக்கும் யுத்தம் ஆரம்பமானது. கஸ்யப முனிவரிடம் தான் கற்ற வித்தைகளையும் மாயா ஜாலங்களையும் காட்டிக் கடும் போர் புரிந்தான் கருடன். ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும்போது, தான் தோற்றுப் போவது போல நடிப்பாள். இது குழந்தையைச் சந்தோஷப்படுத்துவதற்காக! அது போல விஷ்ணுவும் கருடனை ஜெயிக்க வைப்பதுபோல நடித்துக்கொண்டு, அவனுடன் போர் செய்துகொண்டிருந்தார். வெற்றி தோல்வி நிர்ணயமாகாமல் 21 நாட்கள் போர் தொடர்ந்தது. அப்போது பகவான் விஷ்ணு கருடனுக்கு நல்வழிகாட்ட மீண்டும் முயற்சி செய்தார்.

கருடா! உன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நீ எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். இருந்தாலும், எல்லா சாஸ்திரங்களும் கற்ற உனக்கு, தேவலோக அமிர்தத்தை எடுத்து நாகங்களுக்குக் கொடுப்பது தர்மமாகாது என்பது மட்டும் ஏன் தெரியவில்லை? நாம் வீணாகப் போர் புரிவதில் இருவருக்கும் லாபமில்லை. நீ வேண்டும் வரங்களைக் கேள். தருகிறேன்! என்றார்.

இப்போது என் கையில் உள்ள அமிர்த கலசத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றால், என் தாயும், சகோதரனும், நானும் அடிமைத்தளையில் இருந்து விடுபட வழிசெய்யுங்கள் என்று வரம் கேட்டிருக்கலாம் கருடன். ஆனால் கர்வம் தலைக்கேறியிருந்த கருடனுக்கு அப்படிக் கேட்கத் தோன்றவில்லை. நீ யார் எனக்கு வரம் தர? வேண்டுமானால் நீ ஏதாவது வரம் கேள். நான் தருகிறேன் அதன்பிறகாவது நான் செல்ல வழிவிடு! என்றான் கருடன், அகம்பாவமாக.

மகாவிஷ்ணு அப்போதும் விட்டுப் பிடித்தார். என்ன வரம் கேட்டாலும் தருவாயா? அப்புறம் வாக்குத் தவறமாட்டாயே? என்று கேட்டார். நான் வாக்குத் தவறமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத்தான் உங்களையே எதிர்த்து நிற்கிறேன். என்ன வரமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான் கருடன். அப்படியானால், நீயே எனக்கு வாகனமாகிப் பணிபுரியும் பாக்கியத்தை வரத்தைத் தா! என்றார் விஷ்ணு.

மகாவிஷ்ணுவின் இந்தப் பதிலால் கருடனின் கர்வம் வேரோடு அழிந்தது. அவனின் அகக்கண்கள் திறந்தன. அவன் விஷ்ணுவின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரை எதிர்த்துப் போரிட்டதற்காக மன்னிப்புக் கோரினான். தொடர்ந்து அமிர்த கலசத்தை விஷ்ணுவின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தான். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக என்னுடன் இருப்பாய் என்று விஷ்ணு ஆசி கூறினார்.

தொடர்ந்து, தான் கொண்டு சென்ற அமிர்த கலசத்தை தர்ப்பைகள் பரப்பி அதன்மீது வைத்தான் கருடன். அதை அவன் தேவேந்திரனிடம் திருப்பி அளித்த பிறகு, அமிர்த குடம் இருந்த தர்ப்பைகளை நாகங்கள் நக்கின. அப்போது அவற்றின் நாக்குகள் பிளவுபட்டன! ஸ்ரீமகாவிஷ்ணு கருணைகூர்ந்து விஷமில்லா நாகங்கள் பல காலம் வாழும். விஷமுள்ள நாகங்கள் சில காலம் வாழும். நல்ல நாகங்களை மனிதர்கள் பூஜித்து வழிபடுவார்கள் என்று அருளினார்.

தொடர்ந்து.... வினதையும் கருடனும், அவனது சகோதரனும் கத்ரு மற்றும் நாகங்களின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டனர். கருடன் தன் தாய் வினதை மற்றும் கத்ரு ஆகியோரை வணங்கி ஆசிபெற்று விஷ்ணு சேவையில் தொடர்ந்து ஈடுபட்டான்.

எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சந்நிதியை நோக்கி வணங்கியபடி நிற்கும் கருடனை நாம் கருடாழ்வார் என்றே அழைத்து பூஜிக்கிறோம். நாகங்களுக்கும் கருடனுக்கும் பகை என்றாலும், விஷ்ணுவின் சந்நிதியில் ஆதிசேஷன் எனும் நாகமும், கருடாழ்வாரும் நட்பு கொண்டே விஷ்ணு சேவை செய்கின்றனர்.

#விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய #பரிபூஜிதா!

#கருடபுராணம் || தண்டனைகள்
----------------------------------------
#மகாரௌரவநரகம்
---------------------------
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

*********************

அதை பவுராணிகரான (புராணக்கதை வல்லுநர்) சூதமுனிவர், மற்ற ரிஷிகளுக்கு உபதேசித்தார். இப்புராணத்தில், நரகத்தை நிச்சயிக்கும் பாவங்களைப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீளவும் வழி சொல்லித் தருகிறது. துன்பம் வரும்போதும், வியாதிகள் வரும்போதும், இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதும் தான் கடவுளின் நினைப்பு நமக்கெல்லாம் வருகிறது. காலங்கடந்து உணர்வதில் பயனில்லை என்பதையும் இப்புராணம் நமக்கு உணர்த்துகிறது.

கருடபுராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்புராணம் படித்துப் பயப்படுவதற்காக மட்டுமல்ல அல்ல: மனத்தைப்பக்குவப்படுத்திக் கொள்வதற்காகவும் தான்.

பொதுவாக, இதை வீடுகளில் வாசிப்பதில்லை. ஆனால், துக்கவீட்டில் இதை வாசித்தால், கேட்பவர்கள் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புராணம் இது என்பது மட்டும் நிஜம்.
தவறுகள் குறைய இந்த கருடபுராணம் வழிவகுக்கும். மொத்தத்தில் அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் என்பதை உணர்த்தும் நூல் கருடபுராணம்.

உலகில் உயிரினங்களுக்கு பிறப்பும் இறப்பும் எந்தக் காரணத்தால் உண்டாகின்றன? எந்த காரணத்தால் தீராத நோய்கள் வருகின்றன?

எதனால் முக்தி மோட்சம் கிடைக்கும்? ஜெனனம் எடுத்து பூமியிலே வாழ்ந்து வளர்ந்து அனுபவமடைந்து மரணம் அடைந்த பிறகு எந்தச் செய்கையால் சொர்க்கமும், நரகமும் அடைய நேரிடுகிறதென கூறப்படுகிறது? என்று நைமிசாரணியவாசிகள் கேட்டதற்கு சூதமா முனிவர் கூறிய புராணம் இது. வாழ்விற்கு அப்பால் ஜீவன் செல்லும் வழி வகைகளை விளக்கும் நூல்.

உன் அருள் கொடையில்
உலகம் இயக்கம்
உன் அன்பின் அரணில்
உயிர்கள் மயக்கம்
உன்னாலே மாதவா யாம்
உயர் பேறு பெற்றோம்
கிருஷ்ணா நீ எங்கே
உனை தேடி தேடி
உயிரே உருகிடும்
போது நீ
உயிரினுள் எங்கே
ஒளிந்து கொண்டாய்
கிருஷ்ணா

நீல மேகசியாமளா
நிலை கொண்ட
எங்கும் எதிலும்
நீக்கமற நிறைந்தவன்
ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணன்
நின் திருவடி
சரணம் என்றும்
சரணம் என் ஐயனே
சரணமையா...