Labels

Wednesday, 7 May 2014

ஏவல் பில்லி சூன்யம் செய்வினை எந்திர தகடுகளின் வலிமையை உடைக்க

       
 ஏவல், பில்லிசூனியம்செய்வினை எந்திர தகடுகள் மூலம்  உங்களுக்கு செய்து வைக்கப்பட்டிருப்பின் அதை அறிய  மருதாணி செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து அதனுடன் சாம்பிராணி கலந்து வீடு முழுவதும் புகை போட்டு வரவும் அவ்வாறு மூன்று நாட்கள் புகை போடவும். அப்படி புகைப் போட்டு வரும் நாளில் உங்களுக்கோ உங்களின் குடும்பத்தினருக்கோ உடல்நிலையில் தொந்தரவுகள் ஏற்பட்டால் உங்களுக்கு ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை மூலம் பதிப்பு இருப்பது உறுதி. இவ்வாறு புகைப் போட்டு வருவதால் ஏவல்பில்லிசூனியம்செய்வினை வாயிலாக ஏவப்பட்ட துஷ்ட ஆவிகள் நம் வீட்டை விட்டு விலகும்.
          அதேபோல் தின்பண்டங்கள், ஊணவின் மூலம்  ஏவல்பில்லி, சூனியம், செய்வினை  மருந்து உடலில் கொடுக்கப்பட்டு அதனால் உங்களுக்கு பாதிப்பு இருப்பின் அதை உறுதி படுத்த முருங்கை இலையை சாறு எடுத்து உள்ளங்கையில் விட சாறு உறைந்து கெட்டி பட்டால் உடலில் மருந்து இருக்கிறது என அறியவும். அதை எடுக்க அதிகாலை வெறும் வயிற்றில் வெள்ளை பூசணிக்காயை சாறு பிழிந்து உட்கொண்டால் மருந்தின் சக்தி முறியும். வயிற்றுபோக்கு உண்டாகி உடல் களைப்படையும் அச்சமயம் ஆரஞ்சு பழ இரசம் மட்டும் சிறிது அருந்திவரவும் ஓரே நாளில் உடல் தேறிவிடும்.
          கண்திருஷ்டியால் பாதிப்படைந்தால் ஐந்து கற்பூரத்தை இரவு நேரத்தில் தலையை   வலம், இடமாக மூன்றுமுறை சுற்றி முச்சந்தியில் ஏற்றி விட்டு திரும்பி பார்க்காமல் வீடு போக முறியும்.
          இவைகள் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கண் திருஷ்டி நீக்கும் எளிதான முறைகள் தான் என்றாலும் குருவால் தொட்டு காட்டப்படாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது என்பது மூத்தோர் வாக்கு ஆகவே சரியான குருவின் நல் துணை கொண்டு அவரின் தாள் வணங்கி தீட்சை பெற்று செய்தால் மட்டுமே பலன் தரும் என்பதை அறியவும். தானே முயன்று பின் விளைவை அனுபவித்தோர் பலர் எனவே குருவின் துணை நாடுவதே நலமும், வளமும் தரும்.
THANKS
LAKSHMI DASA SWAMI