Tuesday, 30 October 2012
Friday, 5 October 2012
Saturday, 15 September 2012
Thursday, 13 September 2012
Wednesday, 12 September 2012
Wednesday, 5 September 2012
சாணக்கியரின் நேர்மை!
வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவக் கதை...
சாணக்கியரின் நேர்மை!
வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவக் கதை...
இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.
... ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, ``மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்'' என்றார்.
"தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்பாடு செய்கிறேன். அந்தப் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்கிறேன்'' என்றார் அரசர்.
அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சந்திரகுப்தர்.
சாணக்கியர் ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வசித்து வந்தார். கம்பளிப் போர்வை பற்றிய விஷயம் அந்த ஊர் கொள்ளையர்களுக்குத் தெரியவந்தது. கம்பளிப் போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டார்கள்.
குளிர்காலம். நள்ளிரவு. சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்கள் சென்றனர். கம்பளிப் போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.
சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
திருட வந்ததையும் மறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள். அவர்களில் ஒருவன், "ஐயா! நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம். இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்திருக்கும்போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்து போன பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே... இவற்றில் இரண்டை எடுத்துக் கொள்ளக்கூடாதா?'' என்றான்.
அதற்கு சாணக்கியர், "அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்கப் பொருள்கள். அவற்றை எப்படி என் உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும்? '' என்றார் சாணக்கியர்.
திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். "எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குச் சொந்தமான பொருள்களைத் திருடவே எண்ண மாட்டோம்'' என்று சத்தியம் செய்தார்கள்.
என்ன இளைஞனே! சாணக்கியரின் செயலைக் கவனித்தாயா? இந்தக் கதையைக் குறிப்பிட்டதன் காரணம், பொது வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத்தான்.
Tuesday, 28 August 2012
சாணக்கியர்
மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்தனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் .
இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கௌடில்யர்சாணக்கியர்,
விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். ஈடற்ற அரசியல்
இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் பொருளியலின்
முன்னோடியாகக் கருதப்படுகிறார். மேற்கத்திய உலகில் இவர் இந்தியாவின்
மாக்கியவெல்லி என்று அறியப்படுகிறார். இவர் தக்சசீலப் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராக இருந்தார்.
படைப்புகள்
இவர் அர்த்தசாத்திரம், நீதிசாத்திரம் ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். அர்த்தசாத்திரம், பொருளாதாரக் கொள்கைகள், நலத்திட்டங்கள், பிற நாட்டு உறவுகள், போர்முறைகள் குறித்து விரிவாக விவரிக்கிறது. நீதி சாத்திரம் வாழ்வியல் நன்னெறிகள் பற்றிப் பேசுகிறது. இந்நூல் இந்திய வாழ்க்கை முறைகள் குறித்துச் சாணக்கியருக்கு இருந்த ஆழ்ந்த அறிவைக் காட்டுகிறது. இந்நூல் சாணக்கிய நீதி என்றும் அழைக்கப்படுகிறது.கதைகள்
பின்வருபவை சாணக்கியர் வாழ்வில் நடந்த்தாக நம்பப்படும் சுவையான சம்பவங்கள்:- பிற்காலத்தில் அரசனாவார் என்பதைக் குறிக்கும் வகையில் பிறக்கும் போதே பற்களோடு பிறந்தார். அந்தணர்கள் அரசாள்வது முறையற்றது என்பதால் இவரது பற்கள் உடைக்கப்பட்டன. அதனால் இவர் வேறொருவன் மூலம் அரசாள்வான் என்று கணிக்கப்பட்டது.
- நந்த அரசன் சாணக்கியரை அவையிலிருந்து வெளியேற்றியதே இவரை பழிதீர்க்கும் உறுதியேற்கக் காரணம்.
- தம் விருப்பப்படி ஆட்சி நடத்தத் தகுதியான ஒருவனைத் தேடி, இறுதியில் சந்திரகுப்தனைத் தேர்ந்தெடுத்தார்
- நந்த அரசனை வீழ்த்தும் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தார். சூடான அப்பத்தை, ஓரத்திலிருந்து புக்காமல் நடுவில் கைவைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட மகனைத் திட்டும் ஒரு தாயைக் கண்ட போது தம் தவற்றை உணர்ந்தார்.
- சந்திரகுப்தன் மன்னனாக இருந்த போது அவனுடைய உணவில் நஞ்சைச் சேர்த்து (அவனறியாமல்) உண்ணச் செய்தார். அவன் உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இவ்வாறு செய்தார். இதையறியாத மன்னன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவிக்கு தன் உணவை ஒரு நாள் கொடுத்தான். இதையறிந்த சாணக்கியர் அரசகுல வாரிசைக் காப்பதற்காக அரசியின் வயிற்றைப் பிளந்து குழந்தையை வெளியே எடுத்தார். அவனுக்கு பிந்துசாரன் என்று பெயரிட்டார்.
- ஒரு முறை மௌரியப் படை ஒரு குகையில் ஒழிய நேர்ந்த்தது. அவர்களிடம் உணவு இல்லாததால் அனைவரும் பசியால் வாடினர். அப்போது சாணக்கியர் ஓர் எறும்பு ஒற்றைச் சோற்றைச் சுமந்துக்கொண்டுச் செல்வதைக் கவனித்தார். அவர்களைச் சுற்றி எங்கும் உணவு தென்படவில்லை. எனவே வீரர்களைக் குகையைச் சோதனை செய்யப் பணித்தார் சாணக்கியர். எதிரிகள் குகைக்குக் கீழே உணவருந்திக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். உடனே வீரர்களோடு இவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தமிழகத் தொடர்பு
தமிழகத்தில் இருந்த சோழியர் என்ற பிராமண குலத்தவர், சாணக்கியர் தம் இனத்தைச் சார்ந்தவர் என்கின்றனர். இதே போன்று, அபிதசிந்தாமணி, சாணக்கியர் திராமிள இனத்தைச் சார்ந்தவர் என்று கூறுகிறது. (திராமிள என்பது திராவிட என்னுஞ் சொல்லின் மூலச் சொல்லாகக் கருதப்படுகிறது)ஊடகம்
1990ல் தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சித் தொடர் சாணக்கியா அவரது வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் எடுத்துக்காட்டியது.Wednesday, 22 August 2012
Monday, 16 April 2012
Sunday, 18 March 2012
virus
Posts filed under ‘வைரஸ் நீக்க’
சூர்யகண்ணன் வலைப்பூவில் கணினி கொள்ளையர்கள் அட்டகாசம்
பயனுள்ள தொழில்நுட்ப கட்டுரைகளை வழங்கிவரும் சூர்யகண்ணனின்வலைப்பூவில் கணினி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை
காட்டியுள்ளனர் இதைப்போன்ற கணினி கொள்ளையர்களிடம் இருந்து
நம் வலைப்பூ மற்றும் இமெயிலை பாதுகாப்பது எப்படி என்பதைப்
பற்றிய சிறப்பு பதிவு.

பற்றியும் சொல்வதில் நண்பர் சூர்யகண்ணனின் வலைப்பூவுக்கு தனி
மரியாதை உண்டு என்று சொல்லும் அளவிற்கு தரமான தகவல்கள்
பல உண்டு. இவருடைய வலைப்பூவின் முகவரி http://suryakannan.blogspot.com
கடந்த 16-07-2010 -ம் தேதி இரவு இந்த தளத்தை குறிவைத்து
கணினி கொள்ளையர்கள் இவர் வலைப்பூவுக்குகாக பயன்படுத்தும்
இமெயில் கடவுச்சொல்லை திருடி அவர் வலைப்பூவில் உள்ள
அத்தனை தகவல்களையும் அழித்துவிட்டனர்.மறுநாள் காலை
நண்பர் சூரியகண்ணன் நம்மிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு
நடந்த தகவல்களை கூறினார். நாம் மெயில் தொடர்பான சில
விபரங்களையும் மற்றும் உடனடியாக நாம் அவரிடம் Task Manager-ல்
சென்று process -ஐ ஒரு Screen shot செய்து அனுப்ப சொன்னோம்
பத்தே நிமிடத்தில் நம் கையில் Screen shot வந்துவிட்டது.
எந்த வைரஸ்-ம் இல்லை, ஆனால் இமெயில் பாஸ்வேர்ட் இவர்
கணினி மூலம் தான் சென்றிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக
தெரிந்தது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஆண்டிவைரஸ்
மென்பொருளால் Trojan போன்றவற்றை தடுக்க இயலாது.
அது நம் கணினிக்கு எந்த பாதிப்பும் செய்யாது ஆனால் நம்
கடவுச்சொல்லை திருடி குறிப்பிட்ட நபருடைய இமெயிலுக்கு
அனுப்பிவிடும் இதன் பின்னனி பற்றி பார்ப்போம். அதாவது
கணினியில் நாம் தட்டச்சு செய்யும் கடவுச்சொல்லை (**)
எழுத்துக்களை குகிஸ்-ல் என்று சொல்லக்கூடிய இடத்தில்
வேறுவிதமாக சேமித்துவிடுகின்றனர். நாம் என்ன உலாவி
பயன்படுத்தினாலும் இது அந்தந்த உலாவிக்குறிய கூகுஸில்
வேறுவிதமாக சேமித்துவிடும். அடுத்து நம் கணினியில்
Script Error என்று ஒரு செய்தி வரும் இந்த செய்தியில் நாம்
ok கொடுக்கும் போது இணைய இணைப்பு இருந்தால் http
புரோட்டாகால் மூலம் தகவலானது தனிப்பட்ட நபருக்கு நம்
கடவுச்சொலை எளிதாக அனுப்பிவிடும். சில நேரங்களில்
அடிக்கடி இந்த Script Error செய்தி வரும். எந்தப்பெயரில்
வேண்டுமானாலும் இருக்கலாம். இதிலும் தொழில்நுட்பத்தை
கையாள்கிறார்கள் அதாவது அடிக்கடி நாம் பயன்படுத்தும்
மென்பொருளை ரெஸிஸ்டிரி மூலம் அறிந்து அந்த
மென்பொருளில் பிழை இருப்பது போல் Script உருவாக்கி
விடுகின்றனர்.

இதைத் தடுக்க வழிமுறைகள் :
* நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியின் வேகத்தில்
ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக ஆண்டிவைரஸ்
மென்பொருள் கொண்டு கணினியை சோதியுங்கள்.
* ஜீமெயில் பயன்படுத்துபவராக இருந்தால் பாஸ்வேர்ட்
ரெக்கவரியில் உங்கள் அலைபேசி எண்ணை சேமித்துவிடுங்கள்.
* அனைத்து இமெயில் Contact -ம் அவ்வப்போது சேமித்து
வையுங்கள்.
* இமெயில் உருவாக்கிய தேதியையும் செக்யூரிட்டி கேள்வியின்
பதிலையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
* சொந்தக்கணினி பயன்படுத்துபவராக இருந்தால் இமெயிலுக்கு
தனி உலாவியையும் , மற்ற வேலைகளுக்கு தனி உலாவியையும்
பயன்படுத்துங்கள்.
* எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்ட் நம் கணினியில் சேமித்து
வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள்ளே
செல்லுங்கள்.
* நம் இமெயிலுக்கு வரும் எந்த லிங்கையும் சொடுக்காதீர்கள்
அது பேஸ்புக் வாழ்த்தாக இருந்தாலும் சரி சொடுக்கவே கூடாது.
* பல இமெயில் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுச்சொல்
வைக்கவும்,ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.
இதைத் தவிர பிரெளவ்சிங் செண்டர்களில் நாம் இமெயில் திறக்கும்
முன் அந்த கணினியில் கீலாக்கர் போன்ற எந்த மென்பொருளும்
இருக்கிறதா என்று சோதிதபின் பயன்படுத்துங்கள்.
Trojan code – கொண்டு யாருடைய இமெயில் கடவுச்சொல்லையும்
எந்த இணையதளத்தையும் கொள்ளை அடிக்கலாம் என்பது முற்றிலும்
உண்மை தான்.என்ன தான் செக்யூரிட்டி இருந்தாலும் எவ்வளவு பெரிய
இணையதளம் ஆனாலும் கணினி கொள்ளையர்கள் கண்ணில் இருந்து
தப்ப முடியாது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் இதை ஒழிக்க
முடியாது. நேரம் கிடைத்தால் Trojan மற்றும் SQL injection Query
மூலம் கணினி கொள்ளையர்கள் எப்படி கொள்ளை அடிக்கின்றனர்
என்பதை வீடியோவுடன் விளக்கமாக ஒரு பதிவு இடுகிறோம்.
வெகுவிரைவில் நம் வின்மணியிடம் இருந்து கடவுச்சொல் மற்றும்
கீலாக்கர் கொண்டு திருடப்படுவதை தடுக்க ஒரு மென்பொருள்
வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நண்பர் சூரியகண்ணன் வலைப்பூவை பேக்கப் செய்து வைத்திருந்த
காரணத்தால் அனைத்து தகவலையும் அப்லோட் செய்து உடனடியாக
மாற்று வலைப்பூ உருவாக்கப்பட்டு உள்ளது என்பதையும் தெரிவித்துக்
கொள்கிறோம். இப்போதைய சூரியகண்ணனின் வலைப்பூ முகவரி
http://sooryakannan.blogspot.com
வின்மணி சிந்தனை உண்மையான கணினி கொள்ளையன் ஒருபோதும் காசுக்கு விலை போகமாட்டான். அரை வேக்காடு தான் காசுக்காக அடுத்தவர் கணினியை பதம் பார்ப்பான், ஆனால் அவர்களின் முடிவு மோசமாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)